முருங்கையிலைக்கஞ்சியின் சிறப்பு (Murungkai leaf porridge)

முருங்கைக் கீரையில் எவ்வளவோ எண்ணிலடங்கா பயன்கள் இருக்கின்றன. முருங்கைக் கீரையில் கஞ்சி (Murungkai leaf porridge) ,சூப், முருங்கை கீரை வறை செய்யலாம். சப்பாத்தி மாவுடன் சேர்த்து குழைத்து  சத்து நிறைந்த சப்பாத்தி சுடலாம்.

நாம் தான் அதனை முறையாகப் பயன்படுத்துவதில்லை .கீரை வகைகளை உணவோடு சேர்க்கச் சொல்லி சும்மாவா சொன்னார்கள் நம் பாட்டிமார்கள்.

 மிக சாதாரணமாக வீடுகளில் தென்படும் முருங்கை மரத்தை மருத்துவ பொக்கிஷம் என்றே சொல்ல வேண்டும். ஏனெனில் இது எண்ணற்ற வியாதிகளுக்கு பல வகைகளில் மருந்தாகிறது.

முருங்கைக்கீரை வாரம் இருமுறை சாப்பிட்டுவர உடல் சூடு தணியும்.வெப்பத்தின் காரணமாக முடி உதிர்வது நிற்கும். முடி நீண்டுவளரும். நரை முடி அகலும்.தோல் வியாதிகள் நீங்கும்.முருங்கைகீரையில் இரும்புச் சத்து,(iron)சுண்ணாம்புசத்து (calcium) விற்றமின் ஏ கணிசமாக உள்ளது.

முருங்கையிலையை எவ்வாறு உணவில் சேர்ப்பது?

முருங்கையிலைக்கஞ்சி (Murungkai leaf porridge) செய்வோம். சத்துக்கள் நிறைந்த இந்த கஞ்சி குழந்தைகளுக்கு ,முதியவர்களுக்கு ஏற்ற உணவு ஆகும்.

முருங்கை மரம் முழுவதும் மனிதனுக்கு பயனளிக்கிறது. முருங்கைப் பூ மருத்துவ குணம் கொண்டது. முருங்கை கீரையை வேகவைத்து அதன் சாற்றை குடித்து வந்தால் உடல் சூடு தணியும். வெப்பத்தின் காரணமாக உடலில் ஏற்படும் மலசிக்கல் நீங்கும்.

முருங்கைக்காய் சத்துள்ள காய். உடலுக்கு நல்ல வலிமையைக் கொடுக்க வல்லது.ஆதலால் இதை உண்டால் சிறுநீரகம் பலப்படும்.

முருங்கை இலையை உருவி காம்புகளை நறுக்கி விட்டு பின் மிளகு ரசம் வைத்து சாப்பாட்டுடன் சேர்த்து உண்டு வந்தால் கை, கால் உடம்பின் வலிகள் யாவும் நீங்கும்.

இந்த இலைகளை நெய்யில் வதக்கி சாப்பிட்டால் ரத்த சோகை உள்ளவர்களின் உடம்பில் நல்ல ரத்தம் ஊறும். பல் கெட்டிப்படும். முடி நீண்டுவளரும்.

நரை முடி குறையும்.தோல் வியாதிகள் நீங்கும். கடுமையான ரத்த சீதபேதி, வயிற்றுப் புண், தலைவலி, வாய்ப்புண் ஆகிய வியாதிகளுக்கெல்லாம் முருங்கைக்காய் கை கண்ட மருந்து.Murungkai leaf porridge,annaimadi.com,illaikkanji,benefits of murungai,food for elders,healthy food,ilaikanji recipe,kanji recipe,illaikkanji,benefits of murungai,food for elders,healthy food,ilaikanji recipe,kanji recipe,annaimadi.com,illaikkanji,benefits of murungai,food for elders,healthy food,ilaikanji recipe,kanji recipe

முருங்கைக் காய் சாம்பார் எல்லோருக்கும் பிடித்தமானதே. இந்த சாம்பார் சுவையானதாக மட்டும் இருந்து விடாமல் மலச்சிக்கல், வயிற்றுப் புண், கண் நோய் ஆகியவற்றுக்கு மருந்தாகவும் பயன்படுகிறது.

வாரத்தில் ஒருமுறையோ இரண்டு முறையோ முருங்கைக்காயை உணவாக உபயோகித்தால், ரத்தமும் சிறுநீரும் சுத்தி அடைகின்றன. வாய்ப்புண் வராதபடி பாதுகாப்பு உண்டாகிறது. முருங்கைக்காய் சூப் காய்ச்சல், மூட்டு வலியையும் போக்க வல்லது.

கர்ப்பப்பையின் குறைகளை போக்கி பிரசவத்தை துரிதப்படுத்தும். இதன் இலையை கொண்டு தயாரிக்கப்படும் பதார்த்தம், தாய்ப்பால் சுரப்பதை அதிகப்படுத்தும்.

ஆஸ்துமா, மார்பு சளி, போன்ற சுவாசக் கோளாறுகளுக்கு முருங்கை இலைக்கஞ்சி (Murungkai leaf porridge) அல்லது முருங்கை கீரை சூப்  மிக நல்லது.

ஆண், பெண் இருபாலரின் மலட்டுத் தன்மையை அகற்றும். முருங்கை இலை இரத்த விருத்திக்கு நல்ல உணவு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *