சுவையான மஷ்ரூம் கிரவி (Mushroom gravy receipe)

மற்ற காய்கறிகளில் பெற முடியாத, விற்றமின் டி( D) காளானில் அதிகமாக உள்ளதால், சைவ உணவு உண்பவர்கள் காளானில் உணவில் (Mushroom gravy receipe) சேர்த்து பலன் பெறலாம். காளான் சத்தான உணவு வகை மட்டுமல்லாது, சுவையானதும், மலிவானதும் கூட.

பொட்டாசியம், ஃபைபர், இரும்புச்சத்து , பி விற்றமின்கள், காப்பர் மற்றும் தாதுக்களை கணிசமான அளவு கொண்டுள்ளது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவல்லது.

சர்க்கரை வியாதி உள்ளவர்களும் உணவில் சேர்த்து கொள்ளலாம். 

பிரியாணி, காரக்குழம்பு, பொரியல், புலாவ், சூப், என பலவகையான உணவுகள் செய்யலாம். பலர் தற்போது அதிகமாக காளானை உணவில் சேர்க்கத் தொடங்கியுள்ளனர்.

இங்கே சுவையான மஷ்ரூம் கிரேவி (Mushroom gravy receipe) செய்யும் முறையைப் பார்ப்போம்.

சாதம், சப்பத்தியோடு  சேர்த்து உண்ண நல்லாக இருக்கும்.

காளானை உணவில் சேர்த்துக்கொள்வதால் என்ன நன்மைகள்

காளான் இரத்தத்தில் கலந்துள்ள அதிகப்படியான கொழுப்பைக் கரைத்து இரத்தத்தைச் சுத்தப்படுத்தும் தன்மை கொண்டது. இதனால் உயர் இரத்த அழுத்தம் மற்றும் இரத்த நாளங்களின் உட்பரப்பில் உண்டாகும் கொழுப்பு அடைப்பைத் தடுக்கிறது.

காளானில் உள்ள வேதிப் பொருட்கள், இரத்தத்தை  சுத்தமாக்குவதுடன் இதயத்தை  நன்கு சீராக செயல்பட வைக்கிகிறது. அதாவது இதயத்தை பாதுகாப்பதில் காளான் உணவுகள் அதிக நன்மை அளிக்கிறது.

 

Mushroom gravy,indian receipes,annaimadi.com,indian cook king,mushroom receipes,D-vitamin in vegetable,

பொதுவாக உயர் இரத்த அழுத்தத்தால் ஏற்படும் சமனற்ற நிலையைச் சரிசெய்ய பொட்டாசியம் சத்து தேவை. காளானில்  பொட்டாசியம் சத்து அதிகம் உள்ளது. 100 கிராம் காளானில் பொட்டாசியம் சத்து 447 மி.கி. உள்ளது. எனவே இதயத்தைக் காக்க சிறந்த உணவாக காளான் உள்ளது.

மேலும் காளானில் உள்ள தாமிரச்சத்து இரத்த நாளங்களில் ஏற்படும் பாதிப்பை சீர்செய்யும். காளான் மூட்டு வாதம் உடையவர்களுக்கு சிறந்த நிவாரணியாகும்.

தினமும் காளான் சூப் அருந்துவதால் பெண்களுக்கு உண்டாகும் மார்பகப் புற்று நோய் ஏற்படும்  வாய்ப்பு குறைகிறது. பெண்களுக்கு உண்டாகும் கர்ப்பப்பை நோய்கள், மலட்டுத்தன்மை, போன்றவற்றைக் குணப்படுத்துகிறது. பாலூட்டும் பெண்கள் காளான் உண்பதைத் தவிர்ப்பது நல்லது. காளான் தாய்ப்பாலை வற்றவைக்கும் தன்மை கொண்டதாகும்.

Mushroom gravy,indian receipes,annaimadi.com,indian cook king,mushroom receipes,D-vitamin in vegetable,

காளானில் அதிக புரதச்சத்தும் , உடல் வளர்ச்சிக்குத் தேவையான அமினோ அமிலங்கள் உள்ளதால், குழந்தைகளின் உடல் வளர்ச்சிக்கு சிறந்த ஊட்டசத்தாக  கானான் உணவுகள் அமைகிறது.

எளிதில் சீரணமாகும் தன்மைகொண்டது. மலச்சிக்கலைத் தீர்க்கும் தன்மை கொண்டது.

கடும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உடல் இளைத்தவர்கள் தினமும் காளான் சூப் அருந்தி வந்தால் விரைவில் உடல் தேறும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *