இசையுடன் இணைந்த வாழ்வு தரும் ஆரோக்கியம் (Music and life)
இசையால் வசமாகா இதயம் (Music and life)எது……
ந்த பாடல் வரிகளில் இருந்து இசைக்கும் இதயத்துக்கும் (Music and life) உள்ள தொடர்பு விளங்குகிறது. இசை உடல் ஆரோக்கியத்துடன் சம்பந்தப்படுவது தெரிகிறது.
முறைப்படுத்தப்பட்ட ஓசை அல்லது ஒலி இசையாக உருவெடுத்து மனித மனங்களிலிருந்து வெள்ளமென பிரவாகிக்கும் போதும், இசைக் கருவிகள் மூலமாக அருவியெனப் பொழியும் போதும் எண்ணிலதங்கா விந்தைகள் ஏற்படுகின்றன. உடல் ரீதியாகவும் உள ரீதியாகவும் நோயற்ற வாழ்வு வாழ (Music and life) இசை உதவுகிறது.
ஓசை தரும் இன்பம் உவமை இலா இன்பம்
என்றார் மகாகவி பாரதியார்!
இசை மனிதனுக்கு மனச் சாந்தியைத் தந்து அவனை அமைதிப்படுத்துகிறது என்பதை பல நூற்றாண்டுகளாகவே அனைவரும் அறிந்துள்ளனர்.
கர்நாடக சங்கீதம் போன்ற கிளாஸிகல் இசை(Classical music), மெல்லிசைப் பாடல்கள் ஆன்ம நிலையை உயர்த்தும் மத சம்பந்தமான ஸ்லோகங்கள் மற்றும் பாடல்கள் என எதை வேண்டுமானாலும் எது உங்களுக்கு மன அமைதியைத் தருகிறதோ அதைத் தேர்ந்தெடுத்துக் கேட்கலாம்.
இசைக்கு மயங்காத இதயம் எதுவும் இல்லை. ஆறறிவு படைத்த மானிடர்கள் மட்டுமல்லாது மற்ற உயிரினங்களும் கூட இசைக்கு பணிவதை காண்கிறோம்.
வேய்ங்குழல் (Flutes) இசைக்கு பசுக்கூட்டமும், மகுடியின் இசைக்கு நாகமும் மயங்குவதை பார்க்கிறோம்.
சர்க்கஸ் கூடாரங்களில் தாள வாத்தியங்களுக்கு ஏற்றவாறு யானை, குதிரை, குரங்கு போன்ற மிருகங்களும் ஆடுவதை பார்க்கிறோம்.
எனவே இசை என்பது அனைத்து உயிரினங்களையும் கவர்ந்து இழுக்கக்கூடிய காந்த சக்தியாக திகழ்கிறது.
நமது நாட்டில் மட்டுமல்லாது மேற்கத்திய நாடுகளிலும் அந்தந்த நாட்டின் கலாசாரங்களுக்கு ஏற்றவாறு இசைக் கருவிகளை இசைத்துப் பாடுகிறார்கள்.
எந்த பாடலைப் பாடினாலும் அதற்கு மூல காரணமாக விளங்குகிறது. ராகம், தாளம், சுருதி, குரல்வளம், இவை நான்கும் சரிவர அமையாமல் இசைக்கப்படும் பாடலை எவருமே ரசிக்க முடியாது.
இசையை ரசிப்பதற்கு இசை ஞானம் தேவையில்லை. நல்ல பாடலைக் கேட்கும் போது இசை ஞானமே இல்லாத பாமர மனிதன் கூடத் தலையை ஆட்டித் தாளம் போட்டு ரசிப்பதை காண்கிறோம்.
ஆனால் இவருடைய ரசிப்பு ஆழமற்ற, தற்காலிக ரசிப்பாகும். ஒருவர் ஒரு பாடலை ஆழ்ந்து ஞானத்துடன் ரசிப்பதற்கும் பயணம் செய்கின்ற போது, பேருந்தில் ஒலிக்கின்ற பாடலை கேட்டு விட்டும் படியிறங்கிச் செல்வதற்கும் வேறுபாடு உண்டல்லவா.
இசையும் வாழ்வும் (Music and life)
இசையானது (Music and life) மனித வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் பங்கு பெறுகிறது. அன்னையின் வயிற்றில் இருக்கும் குழந்தை கூட இசையை ரசிக்கிறது.
குழந்தையை தொட்டிலில் இட்டுத் தாலாட்டும் போது தாய் தாலாட்டுப் பாடல் பாடுகிறார். அந்தப் பாடலைக் கேட்டு குழந்தை அழுவதை நிறுத்தி விட்டு அயர்ந்து உறங்குகிறது.
அந்த தாய் கர்நாடக இசையை முறைப்படி பயின்று வந்து பாடவில்லை. இந்த இடத்திலிருந்து தான் மானிடப் பிறவிக்கும் இசைக்கும் தொடர்பு ஏற்படுகிறது.
தொட்டில் குழந்தையை தாலாட்டும் போது பாடுவது நீலாம்பரி என்னும் ராகத்திலிருந்து தொடங்குகிறது. ஒருவன் வளர்ந்து வாலிப வயதை அடைந்து, திருமணநாளில் மங்கல வாழ்த்து என்பது ஆனந்த பைரவி என்னும் ராகத்தில் பாடப்படுகிறது. முந்தைய அரசர்கள், போர்க்காலங்களில் போர்க்களத்திற்கு செல்லும் போது, கம்பீர நாட்டை என்னும் ராகம் இசைக்கப்படுகிறது. மனித வாழ்வின் இறுதிநாளில் அவலச்சுவையாக முகாரி என்னும் ராகத்தில் ஒப்பாரிப்பாடல் இடம்பெறுகிறது.
இவ்வாறு பாடப்பெறும் பாடல்களுக்கான அடிப்படை கர்நாடக இசைதான். இந்த இசை அனைத்து உயிரினங்களையும் கவர்ந்து மயங்கச் செய்வதால் தான், நமது பாரம்பரியமான இசை வெளிநாடுகளிலும் பெயர் பெறுகிறது.
அதனால் தான் இசையால் மயங்காத இதயம் எது? என்றும் கல்லும் இசையால் கனியாகும், முள்ளும் இசையால் மலராகும் என்று ஒரு கவிஞர் பாடியுள்ளார்.
நம் மோசமான உணர்வுகளை சமாளிக்கவும், ஒருவருக்கொருவர் சிறப்பாக ஒன்றிணையவும் மனிதர்களுக்கு உதவ காலத்தின் தொடக்கத்திலிருந்து இசை (Music) பயன்படுத்தப்படுகிறது.
இசையில் பல்வேறு வடிவங்கள் உள்ளது. மன சோர்வை தீர்க்க இசை உங்களுக்கு உதவும். தூக்கம் வரும் வரை பிடித்த புத்தகத்தை படியுங்கள். வெளிச்சம் தடையாக இருந்தால் மிதமான இசையை கேட்டு கொண்டிருந்தால் தூக்கம் விரைவில் வரக்கூடும்.
அதோடு மன சோர்வும் குணமாகும். மனத்தின் அழுத்தம்,உளைச்சல் நீங்கி நல்ல அமைதி கிட்டும்.
“சமீபத்திய ஆய்வுகள் இசைக்கு மன அழுத்த எதிர்ப்பு சக்தியைக் (music has an anti-stress power) கொண்டுள்ளன என்பதை எடுத்துக்காட்டுகின்றன,
இசையைக் கேட்பதன் நேர்மறையான விளைவுகள் மறுக்க முடியாதவை என்றாலும், அதிக நன்மைகளைப் பெறுவதற்கு சில நிபந்தனைகளில் இசையைக் கேட்க வேண்டும்.
பயணம் செய்யும் போதோ சாப்பிடும்போதோ அல்லது வீட்டிலிருந்தே வேலை செய்யும் போது நேரத்தை கழிக்க பலர் தங்களுக்குப் பிடித்த இசை கலைஞர்களின் பாடல்களை கேட்பது வழக்கம்.
இசையும் ஆரோக்கியமும்
தொழில்முறை மற்றும் தனியார் துறைகளில் வேலை செய்பவர்கள் தங்களது நாளை தெளிவாக பிரிப்பதற்காக, நீண்ட நாள் வேலைக்குப் பிறகு அமைதியான ஓய்வை (“decompression rituals”) அமைக்கவும் அவர் அறிவுறுத்துகிறார். இசையை நாம் கேட்கும் முன் அந்த இடத்தை ஒரு வசதியான சூழ்நிலையாக மாற்றவும்.
“இசை உணர்ச்சி நிலைகளுடன் தொடர்புடையது எனவே சில இசைத் துண்டுகள் (musical pieces) மற்றவர்களை விட நம் வாழ்வில் மகிழ்ச்சியான தருணங்களை நினைவூட்டுகின்றன.
மனச்சோர்வின் அறிகுறிகளைக் இசை சிகிச்சையானது குறைப்பதோடு , மன அழுத்தத்தை கணிசமாக குறைக்கின்றது.
உங்களுக்கு பிடித்த பாடல்களை கேட்பதன் மூலம் மன சோர்விலிருந்து விடுபடலாம்.
நாம் ரசித்துக் கேட்கும் மெல்லிய இசை, ரத்த அழுத்தத்தைக் குறைக்கும். இதயத் துடிப்பைச் சீராக்கும். பதற்றம், கவலைகளைக் குறைக்கும்.இவ்வாறு இசையே மருந்தாக செயற்படுகின்றது.
ஆழமாக லயித்து பாடல்களை ரசித்து கேட்கும் போது உள்ளத்திலும் உடலிலும் நல்ல மாற்றங்கள் ஏற்பட்டு மன அமைதி கிடைக்கும்.