இசையே மருந்தாக..(Music as medicine )
செவிக்கு விருந்தாகவும் நோய்க்கு மருந்தாகவும் (Music as medicine ) விளங்கும் இசை.
பொழுதுபோக்குக்கு மட்டுமல்லாது, இசை நல்ல மருந்தாகவும் (Music as medicine ) செயற்படுகின்றது.
கவின் கலைகளுள் ‘இசை‘ ஆற்றல் மிகுந்தது.மனிதனை வயப்படுத்துவது இசை.விலங்குகளை இசைய வைப்பது இசை, செடி,கொடி, மரங்கள் வளர உதவுவதும் இசையே.
இசை எப்படி மருந்தாகிறது (Music as medicine )?
நோய் வாய்ப்பட்டவர்கள் நல்ல இசையை கேட்கும் பொழுது, துன்பத்தை மறக்க முடிகிறது.
தொழிற்சாலைகளில் மெலிதாக ஒலிக்கும் இசை, வேலைக் களைப்பை போக்குகிறது.
வயிற்றில் இருக்கும் சிசு, பசு, பாம்பு ஆகியன இசைக்கு பணியும் தன்மையுடையன
சில குறிப்பிட்ட ராகங்களை கேட்டால் சில நோய்கள் குணமாகும் என்பது மருத்துவ ரீதியாக ஆராய்ச்சி செய்யப்பட்டுள்ளது.
மனநிலை பாதிக்கப்பட்டவர்,போதைப் பொருள்களுக்கு அடிமையானவர், நரம்பியல் கோளாறு உடையவர்கள் இசை மருத்துவத்தால் குணப்படுத்தப்படுகின்றனர்.

இசை உண்ண, உடுக்க, உறங்க, பாராட்ட, தாலாட்ட, சீராட்ட ,இறுதி மூச்சுக்கு என வாழ்வின் எல்லா நிலைகளிலும் மனித வாழ்க்கையோடு பின்னி பிணைந்துள்ளது.
இசை என்பது நம்முடைய நினைவுகளுக்கு உயிர் கொடுக்கும் அங்கமாகவே பார்க்கப்படுகிறது. சில சமயங்களில் காலத்தை நிறுத்தி வைக்கும் சக்தியும் இசைக்கு இருப்பதாகத் தோன்றும்.
எவ்வளவு மகிழ்ச்சியாக இருந்தாலும் ஒரு சில பாடல்களை கேட்கும் போது கண்களில் கண்ணீர் வருவதும்,எவ்வளவு துயரத்தில் இருந்தாலும் ஒரு சில பாடல்களைக் கேட்கும் போது துயரத்தில் இருந்து செய்வதும் இசையின் மாயம்.
இவ்வாறு ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு சிறப்பான பாடல்களும் வித்தியாசமான உணர்வினை ஏற்படுத்தும். காலங்கள் கடந்து கூட ,ஒருவரின் மனதிற்கு நெருக்கமான பாடல் அவருடைய நினைவுகளை மீட்டெடுத்துத் தரும் வல்லமை பொருந்தியதாக இருக்கும்.
இசை ஒரு மகத்துவம் பொருந்திய மாமருந்து (Music as medicine ).

நோயை பற்றி கவலைப்படாமல் இசையை கேட்கத் தொடங்குங்கள். நாளடைவில் அதன் நோயின் வீரியம் குறைந்து முன்னேற்றம் தென்படும்.
உதாரணத்துக்கு, கணையத்தின் செயல்பாட்டின் திறன் மேம்படுவதால், சர்க்கரை நோயின் தீவிரம் குறையும்.மன அழுத்தத்தை ஏற்படுத்தக் கூடிய ஹார்மோனின் செயல்பாட்டை அமைதிப்படுத்துவதால், மன அழுத்தம் குறையும். இப்படியாக, ஒவ்வொரு பிரச்சனைக்கும் ஒவ்வொரு வகையான இசை ஒலிக்கப்படும்.இதனால், நோயும் அதன் தீவிரத்திலும் நிச்சயம் மாற்றம் ஏற்படும்.
ஒருநாள் மட்டுமே இசையை கேட்டுவிட்டு நோய் குணமாகவில்லையே என்று எண்ணுதல் தவறு.
மியூசிக் தெரபி என்பது ஒர் தொடர் சிகிச்சை.தொடர்ந்து கேட்கையில் பலன்கள் கிடைப்பது உறுதி.
இசையின் ஒரு மருத்துவ தன்மை
- இசையை கேட்போரின் மனதில் நல்ல உணர்வுகள் மேம்படும்.மனப் பிரச்னைகள் விலகும்.
- அமைதியான சூழல் உருவாகும். இசையைக் கேட்பதால் மனம் அமைதி பெற முடியும்.
- உயர் ரத்த அழுத்தத்தைக் குறைக்கும். இதயத்தின் செயல்பாட்டை மேம்படுத்தும்.
- குழந்தைகளின் நடத்தையில் முன்னேற்றம், படைப்பாற்றல் திறன், கவன திறன், நேர்மறை சிந்தனைகள் போன்றவை அதிகரிக்க தொடங்கும்.
- ஆட்டிஸம் குழந்தைகளின் நடத்தையில் கூட முன்னேற்றத்தை காண முடியும்.
- கர்ப்ப கால சுமைகள் இல்லாத மகிழ்ச்சியான சூழல் கிடைக்கும். சுகபிரசவம் நடக்க வாய்ப்புகள் அதிகம். பிரசவ வலி கூட குறையலாம்.
- தூக்கமின்மை போன்ற பிரச்சனைகளை நீக்கி ஆழ்ந்த தூக்கம் வர உதவும்.
அன்றாடம் சில நிமிடங்களை இசையைக் கேட்பதற்காக ஒதுக்குவது சிறப்பு. இதனால் நல்ல உணர்வுகளும், ஆரோக்கியமும் நிச்சயம் நமக்கு தொடர்ந்து இருக்கும்.