கடுக்காய் என்னும் அற்புத மூலிகை (Wonderful herb myrobalan)
கடுக்காயில் (Myrobalan) ஏழு வகைகள் உள்ளன. அவை அபயன், விசயன், பிரிதிவி, சிவந்தி, அமுர்தம், ரோகினி மற்றம் திருவிருதுதம் என்பன.
கடுக்காய்பொடி சாப்பிடும் முறை(Eating Kadukkaai powder)
கடுக்காயை உடைத்து மேலே உள்ள சதைப் பகுதியை மட்டும் எடுத்துக்கொள்ளவும்.கொட்டை நஞ்சு எனவே நீக்கிவிடவும். சதைப் பகுதியை இடித்து தூள் செய்து, சலித்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
காலையில் இஞ்சி, கடும்பகல் சுக்கு, மாலையில் கடுக்காய் என 48 நாட்கள் இதன் பொடிகளை உட்கொண்டால் நரை, திரை, மூப்பு இன்றி இளமையாக வாழலாம்.
மூன்று கடுக்காய்த் தோல்களை எடுத்து, தேவையான இஞ்சி, மிளகாய், புளி, உளுத்தம்பருப்பு சேர்த்து எல்லாவற்றையும் நெய்யில் வதக்கி எடுத்து உப்பு சேர்த்து துவையலாக அரைத்து கொள்ளவும்.
அதனை சாதத்துடன் பிசைந்து உண்டுவர, ஜீரணசக்தி கூடும். மலச்சிக்கல் மாறும், உடல் பலம் பெறும்.
கடுக்காய் ஓட்டைத்தூளாக்கி இரவு உணவு உண்டதும் அரை தேக்கரண்டி பொடியைத் தின்று, ஒரு டம்ளர் நீரைக் குடித்துவர உடல் வலுவாகும். வாதம் குணமாகும்.
கடுக்காய்த் தூளை (Myrobalan) 10 கிராம் எடுத்து, அதே அளவு சுக்குத்தூள், திப்பிலித்தூள் எடுத்து கலந்து கொண்டு காலை, மாலை அரை ஸ்பூன் வீதம், 21 நாட்கள் சாப்பிட்டுவர, வாதவலி, பித்த நோய்கள் குணமாகும்.
15 கிராம் கடுக்காய்த் தோலை எடுத்து நசுக்கி, 15 கிராம் கிராம்பு சேர்த்து ஒரு டம்ளர் நீர் விட்டு கொதிக்க வைத்து, ஆறியபின் அதிகாலையில் குடிக்க நாலைந்து முறை பேதியாகும். அதன்பின் மலச்சிக்கல், வயிற்றுப் பிணிகள் மாறிவிடும்.
கடுக்காய் (Myrobalan) என்பது மரத்திலிருந்து கிடைக்கும் காய்.
இதன் காலம் சுமார் 4000 ஆண்டுகளுக்கு முற்பட்டது என்று சித்த மருத்துவ நூல்கள் கூறுகின்றன.பூக்கள் பச்சை நிறம் கலந்த வெண்மை நிறமாக சிறிது மணத்துடன் காணப்படும்.
சில வகைப் பூக்கள் மஞ்சள் நிறத்தில் இருக்கும். காய்கள் கொத்தாக பச்சை நிறத்துடன் காணப்படும்.
கடுக்காயின் மருத்துவப் பயன்கள் (Medicinal uses of myrobalan)
கடுக்காயில் (Myrobalan) ஆறு சுவையில் உப்பு சுவை தவிர மற்ற ஐந்து சுவைகள் உள்ளன. வாயிலும் தொண்டையிலும், இரைப்பையிலும், குடலிலும் உள்ள ரணங்கள் ஆற்றிடும் வல்லமை பெற்றது.
மலச்சிக்கலைப் போக்கி குடல் சக்தியை ஊக்கப்படுத்தும். பசியைத் தூண்டி இரத்தத்தைச் சுத்தப்படுத்தி வாத பித்த கபம் ஆகியவற்றால் வரும் ஏராளமான நோய்களைக் குணப்படுத்தும்.
காது நோய் குணப்படுத்தும். கடுக்காய்(Myrobalan) வலிமையூட்டி, நீர்பெருக்கியாக செயற்படும்.
இது புண்கள், கண்நோய், இருமல், காமாலை, கை கால் நமச்சல், இரைப்பு, நாவறட்சி, மார்பு நோய், மூலம், வயிற்றுப்பொருமல், விக்கல் போன்றவைகளை குணப்படுத்தும்.
காலையில் இஞ்சி, கடும்பகல் சுக்கு, மாலையில் கடுக்காய் என 48 நாட்கள் இதன் பொடிகளை உட்கொண்டால் நரை, திரை, மூப்பு இன்றி இளமையாக வாளலாம் என சித்த மருத்துவ நூல்களில் கூறப்பட்டுள்ளது.
கடுக்காய் (Myrobalan)ஓட்டைத்தூளாக்கி இரவு உணவு உண்டதும் அரை தேக்கரண்டி பொடியைத் தின்று, ஒரு டம்ளர் நீரைக் குடித்துவர உடல் வலுவாகும். வாதம் குணமாகும்.
200 கிராம் கற்கண்டை தூளாக்கி, நீர்விட்டுப் பாகுபோலக் கிளறி, அதோடு 20 கிராம் கடுக்காய்த் தூளைக் கலந்து வைத்துக் கொண்டு, காலை, மாலை அரை தேக்கரண்டி தின்று, வெந்நீர் குடிக்க குடல் புண், சுவாசகாசம், மூலம், வாத நோய்கள் குணமாகும்.
மூக்கிலிருந்து இரத்தம் வந்தால், சிறிதளவு கடுக்காய்த் தூளை எடுத்து மூக்கால் உறிஞ்ச, ரத்தம் வருவது நின்று விடும்.
10 கிராம் வீதம் கடுக்காய்த்தூள்(Myrobalan powder), காசுக்கட்டித் தூள் எடுத்து பொடியாக்கி சிறிதளவு பொடியை, வெண்ணெயில் குழைத்து, நாக்குப்புண், உதட்டுப் புண்ணில் பூசிவர புண்கள் ஆறும்.கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் மூன்றும் கலந்த ‘திரிபலா‘ சூரணத்தை அடிக்கடி நீரில் கலந்து குடிக்க உடல் பலம் ஏற்படும். வயிற்றுக்கோளாறு மாறும்.
பசியைத் தூண்டி இரத்தத்தைச் சுத்தப்படுத்தி வாத பித்த கபம் ஆகியவற்றால் வரும் ஏராளமான நோய்களைக் குணப்படுத்தும்.
கடுக்காயில் உள்ள ஆரோக்கிய இரகசியத்தை பற்றி சித்தர்கள் என்ன கூறியிருக்கிறார்கள் என்று தெரிந்து கொள்வோம்.
திரிபலா சூரணம் தயாரிப்பதற்கு பயன்படும் 3 மூலிகைகளில் கடுக்காயும் ஒன்றாகும்.