நாவில் கரையும் சுவையுடன் மைசூர்பாகு (Mysore pak)

நீங்களும் செய்யலாம்!
 
இனிப்பு பண்டங்கள் என்றாலே அனைவருக்கும் நாவிலே எச்சில் ஊற ஆரம்பித்துவிடும். லட்டு, ஜாங்கிரி, அல்வா , பாயாசம்,…..அதிலும் மைசூர் பாகு (Mysore pak) என்றால் அடடடா….

இந்த மைசூர் பாகு கர்நாடகாவில் உள்ள மைசூரை மன்னர்கள் ஆண்ட காலத்தில் அரசரின் சமையல்காரர் செய்த ஒரு இனிப்பு பண்டம்.

இது நாடு முழுவதும் பரவி இன்று உலகம் முழுவதும் தயாரித்து ருசிக்கிறார்கள். இன்று எத்தனையோ இனிப்பு வகைகள் வந்தாலும் இதன் சுவைக்கு ஈடாகுமா? என்ன..
இது மைசூரில் தான் முதன் முதலில் உதயம் ஆனது.

easy sweet recipe,best sweet,tasty indian sweets,annaimadi.com,basab flour recipe

ருசியான மைசூர் பாகு (Mysore pak) சர்க்கரை பயன்படுத்தி செய்யப்படும் பாகு மூலம் தயாரிக்கப்பட்டதாலும் ஊர் பேரையும் இந்த பாகுவையும் சேர்த்து மைசூர் பாகு  (Mysore pak) என்று பெயர் பெற்றது.
இந்த மைசூர் பாகு உச்சரிப்பில் சிறிது மாற்றம் பெற்று இன்று மைசூர் பாக்கு என்றும் அழைக்கிறார்கள்.
 
ருசியான மைசூர் பாகு செய்வது எப்படி?
மைசூர் பாகு செய்வது என்பது அவ்வளவு எளிதானது அல்ல மற்ற இனிப்பு பண்டங்கள் போல் நினைத்த உடன் செய்து விட முடியாது,என நினைக்க வேண்டாம்.
 
இதற்கு பாகு தான் முக்கியம். பாகு சரியான பதம் எடுத்தால் அதன் ருசியை முழுவதுமாக பெற முடியும்.
இதனால் கொஞ்சம் கவனமாக செய்யவும். அவ்வளவு தான்.
அவசரப்படாமல் பொறுமையாக படிமுறைகளை கவனத்துடன் செய்தால், சுவையான மைசூர்பாகு (Mysore pak) செய்ய முடியும்.
 

தேவையான பொருட்கள்( Ingredients )

கடலை மாவு – 1 கப்
நெய் – 1 1 /4 கப்
எண்ணெய் – 3 /4 கப்
சர்க்கரை – 2 கப்
பால் – 1/4 கப்
தண்ணீர் – 1 /4 கப்
சமையல் சோடா – 1சிட்டிகை
mysorepak recipe,annaimadi.com,mysorepak,sweet recipe,tasty sweets,மைசூர்பாகு,மைசூர்பாகு செய்யும் முறை

மைசூர் பாகு செய்யும் முறை (Mysore pak recipe)

ஒரு பாத்திரத்தில் எண்ணெய் மற்றும் நெய் ஆகியவற்றை சேர்த்து நன்கு சூடு செய்து கொள்ள வேண்டும்.
பின்னர் கடாயை சூடுபடுத்தி, அதில் கடலை மாவை சேர்த்து நன்றாக பச்சை வாசனை போகும் வரை தீயவிடாமல் சிவக்க வறுக்கவேண்டும்.
easy recipe,annaimadi.com,sweet recipe,tasty sweets,
 
பச்சை வாசனை சென்ற உடன் அடுப்பை நிறுத்தி விட்டு, அதில் நெய் மற்றும் எண்ணையை சேர்த்து கலந்து இறக்கி வைக்கவும்.
மீண்டும் ஒரு பாத்திரத்தில் சர்க்கரை, தண்ணீர் மற்றும் பால் ஆகியவற்றை கலந்து நன்றாக சூடு செய்யவும்.
சர்க்கரை நன்கு கரைந்ததும் பாகு பதத்திற்கு வரும் வரை நன்றாக காய்ச்சி கலக்கவும். பாகு பதம் வந்ததும் இதோடு நாம் தயாரித்து வைத்த மாவை சேர்த்து கலக்க வேண்டும்.
நன்றாக மாவைக் கலந்ததும் சூடாக வைத்துள்ள எண்ணெய், நெய் கலவையை சிறிது சிறிதாக சேர்த்து கிளறிக் கொண்டு இருக்கவும்.
கலவை கெட்டியானதும் ஒரு தட்டில் நெய் தடவி அதில் ஊற்றி தேவையான அளவுகளில் துண்டுகளாக செய்து ருசிக்கவும்.

இவ்வளவு ருசியான மைசூர் பாகை இதே தரத்திலும் ருசியிலும் தயாரித்து வீட்டிலே குடும்பத்தோடு அமர்ந்து இனிப்பை சுவையுங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *