பிரமிட்டுகளில் ஒளிந்திருக்கும் மர்மங்கள் (Mysteries in pyramids)

உலகின் தீரா மர்மங்களில் (Mysteries in pyramids) ஒன்றாக இருக்கின்றது இந்த பிரமிட்டுகள்.பிரமிட்டுகள் எனும் போது இன்றளவும் ஒரு மலைப்பும் ஆச்சரியமும் உண்டாவது அவற்றின் தனிச்சிறப்பே. 

பல மர்மங்களில் ஒரு சிலவற்றிற்கு  அறிவியல் ரீதியான  விடைகள்  காணப்பட்டிருக்கின்றன. ஆனால் சில மர்மங்கள் பலவிதமான ஆராய்ச்சிகளுக்குப் பின்னரும் இன்னமும் விடையின்றி தீரா மர்மங்களாகவே நீடித்துக்கொண்டிருக்கின்றன. அவ்வகையில் பிரமிட்டுகள் முதலிடம் பிடிக்கின்றன.

பழங்கால எகிப்தியர்கள் மனிதர்கள் இறந்த பிறகு உடலை பதப்படுத்தி வைக்கும் கலாச்சரத்தை கொண்டிருந்தனர். அது ஏன் செய்தார்கள் என்பது அவர்களுக்கு மட்டுமே தெளிவாக தெரியும்.அதாவது மறுபிறவிக்கு வழிவகுக்கும் அவர்களின் நம்பிக்கை.

ஒரு சராசரி பிரமிடின் எடையென்று எடுத்துக்கொண்டால் அது 54 இலட்சம் தொன்கள் ஆகும் ( Tons). பிரமிட்டுகளைக் கட்ட உபயோகித்திருக்கும் ஒரு கல்லின் சராசரி எடை இரண்டரை தொன் ஆகும்.

மிஸிரினஸ் பிரமிடில் உபயோகித்திருக்கும் ஒரேயொரு கல்லின் எடை மட்டும் 285 டன் என்பதும், சக்கரம் கண்டுபிடிக்கப்படாத காலத்தில் இவ்வளவு எடையுள்ள கல்லை எப்படி கையாண்டிருப்பார்கள் என்பதும் ஆராயமுடியாத மர்மமாகவே (Mysteries in pyramids) நீடிக்கிறது.

பிரமிடுகளுக்குப் பின்னாலான மர்மங்கள் கணக்கிலடங்காதவை. பிரமிட்கள் சாதாரண மக்களை மட்டுமல்ல, பொறியியல் வல்லுநர்களையும் வியக்க வைக்கும் அமைப்புகள்.  

எகிப்தின் பிரமிட்டுகள் (Mysteries in pyramids)

எகிப்து நாட்டில் காணப்படும் இந்தப் பிரமிட்டுகள் கற்களால் கட்டப்பட்ட பிரம்மாண்டங்கள். 2008ம் ஆண்டு வரையிலும் கிட்டத்தட்ட 138 பிரமிட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றன.

ஃபைரோ ஸ்னெஃப்ரோ அரசரின் பிரமிட் இது.

கிறிஸ்து பிறப்பதற்கு 2600 ஆண்டுகளுக்கு முன் இந்த பிரமிட் கட்டப்பட்டது. 54 டிகிரி கோணம் வளைந்த வடிவில் வடிவமைக்கப்பட்டுள்ளது இந்த பிரமிட்.

மெல்லிய களிமண்ணால் கட்டப்பட்ட இந்தப் பிரமிடின் ஸ்திரத்தன்மை மோசமாக இருந்ததால், தொழில்நுட்பம் கொண்டு இது இப்போது மேம்படுத்தப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து, பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுகின்றனர்.

இப்போது பார்வையாளர்கள் 79 மீட்டர் குறுகிய பாதையில் உள்ளே ஏறி இந்தப் பிரமிடை காணலாம்.

இதுவரை இரண்டு வகையான பதப்படுத்தப்பட்ட உடல்கள் ஆராய்ச்சிக்கு கிடைத்துள்ளன. 1. பதப்படுத்தப்பட்ட மம்மி (செயற்கையான முறையில் கிடைத்த மம்மி) 2. பதப்படுத்தப்படாத மம்மி (இயற்கையாக சிதைவுறாமல் கிடைத்த மம்மி).

மனிதன் இறந்தவுடம் உடலில் உள்ள டிஷ்ஷூ காற்றில் உள்ள ஈரப்பதம் மற்றும் ஆக்ஸிசனால் சிதைவடையும், இதனை தடுக்க சில வழிமுறைகளை பின்பற்றி பாதுக்காக்கப்பட்டது தான் மம்மி, அதாவது மீனை கருவாடாக மாற்றி சேமிப்பதுபோல்.பிரமிட்டுகளில் ஒளிந்திருக்கும் மர்மங்கள்,Mysteries in pyramids,annaimadi.com,pyramids,

 எகிப்தியர்கள் இறந்த உடலை பாதுகாக்க பின்பற்றிய வழிமுறைகள்

 1. முதலில் உடலை நன்றாக கழுவிவிட்டு, அடிவயிற்றின் இடது பக்கத்தில் வெட்டி உட்புற உறுப்புகள், குடல்கள், கல்லீரல், நுரையீரல், வயிறு ஆகியவை அகற்றிவிடுவார்கள். ஆனால் பண்டைய எகிப்தியர்கள் இதயத்தை நீக்கவில்லை வாழ்க்கையில் உணர்ச்சி மற்றும் புத்திசாலித்தனத்தின் மையம் இதயம் என நம்பி, அடுத்த வாழ்க்கையில் பயன்படுத்த உடலில் விட்டுவிட்டனர்.
 2.  மூக்கு வழியாக மூளையை அகற்ற ஒரு கொக்கி கருவியை விட்டு நீக்கிவிடுவார்கள். அவர்களை பொறுத்தவரை மூளை முக்கியமானதாக கருதப்படவில்லை தூக்கி எறியப்பட்டது.
 3. அனைத்து ஈரப்பதத்தையும் அகற்ற உடல் மற்றும் உட்புற உறுப்புகள் நாற்பது நாட்கள் நாட்ரான் உப்புடன் போட்டு பதப்படுத்தி வைப்பார்கள். உலர்ந்த உறுப்புகள் துணியால் மூடப்பட்டு, கனோபிக் ஜாடிகளில் மூடிவைக்கப்பட்டன.
 4. உடல் சுத்தம் செய்யப்பட்டு, உலர்ந்த தோல், எண்ணெயால் தேய்க்கப்பட்டு, உடலில் வெட்டுப்பட்ட இடத்தில் மரத்தூள் மற்றும் மரப்பட்டையால் நிரம்பி மெழுகால் மூடிவிடுவார்கள்.
 5. உடலை கைத்தறி துணியால் கட்டி மூடிவிடுவார்கள். அதாவது சுமார் 20 அடுக்குகள் இந்த ஒப்பனை இருக்கும். கட்டுகளுக்கு மேல் ஒரு மரண முகமூடி போட்டுவிடுவாரகள்.
 6. கட்டுப்பட்ட உடல் ஒரு கவசத்தில் (ஒரு பெரிய துணி) வைக்கப்படும். இது கைத்தறி கீற்றுகளால் பாதுகாக்கப்பட்டது. உடல் பின்னர் அலங்கரிக்கப்பட்ட சவப்பெட்டியில் வைக்கப்படும்.

இவை செயற்கையான முறையில் பாதுக்காப்பட்ட உடல்கள், இவற்றை ஆராய்ச்சி செய்து அன்றைய காலத்தில் மனிதர்களின் உணவு பழக்க வழக்கம், உடல் வலிமை, உடலில் உள்ள உறுப்புகள் செயல்பட்ட முறை, என்னென்ன நோய்கள் இருந்தன போல பலவற்றை கண்டறிய முறியும்.

இயற்கையில் உடல் சிதைவுறாமல் கிடைத்த  மம்மி

இயற்கையில் உடல் சிதைவுறாமல் கிடைத்த சில மம்மிகளும் உள்ளன, அவைகளில் Otzi ( அவரின் பெயர் ஆட்ஸி) மிகவும் பிரபலமான மற்றும் பழமையான இயற்கையான முறையில் கிடைத்த மம்மி. அவரின் உடலமைப்பை வைத்து 3டி வரையடைப்பட்ட படம்.

 • 1991 ஆம் ஆண்டு ஆஸ்திரியா மற்றும் இத்தாலி எல்லையில் சுற்றுலா சென்ற இரண்டு நண்பர்கள் இந்த உடலை பார்த்து விட்டு யாரோ சில நாட்களுக்கு முன்னர் கொலை செய்யப்பட்டு உடல் வீசப்பட்டதாக நினைத்து போலிஸில் கூறியுள்ளனர்.
 • இரண்டு நாட்டினரும் சண்டைப்போட்டுக்கொண்டு இரண்டு நாட்களுக்கு பின்னர் ஆஸ்திரியா போலிஸ் உடலை எடுத்து வந்து சோதனை செய்த பின்னர் தான் அது 5300 ஆண்டுகள் பழமையான உடல் என்பது தெரிய வந்தது.
 • அதன் பின்னர் அது எங்க பார்டரில் தான் கிடைத்தது டேப் பிடித்து அளந்து இத்தாலி எனக்கு சொந்தம் என உரிமை கொண்டாடியது. அதனால் இத்தாலியிடம் ஒப்படைக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.
 • கடும் உறைபனியில் கிடைத்த உடலில் 95% சிதைவுறாமல் அப்படியே இருந்ததாம், அவர் கடைசியாக சாப்பிட்ட ஆட்டு இறைச்சி கூட அப்படியே இருந்ததாம். அதன் பின்னர் இன்று வரை பல ஆராய்ச்சி செய்து பல விடயங்களை கூறியிருக்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.
 • அவருடைய உயரம் 5 அடி 2 அங்குலம், அவருக்கு 40-45 வயது இருக்ககூடும், அவர் முழுகில் அம்பால் குத்தப்பட்ட தடயத்தால் அவரை யாரோ முதுகில் குத்தி கொலை செய்திருக்கின்றனர் எனவும், அந்த அம்பில் 4 மற்றவர்களின் டி.என்.ஏ (DNA) இருந்ததால் இவரும் அவர்களை தாக்கியிருக்க வாய்ப்பிருப்பதாகவும் கூறியிருந்தனர்.
 • மேலும் அந்த மனிதர் பல நோய்களால் பாதிக்கப்பவர், அதற்கு அவர் மூலிகை எடுத்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. அவர்களின் உணவுமுறை சமச்சீராக இல்லை எனவும் கூறியிருந்தனர்.
 • அவர் கையில் வைத்திருந்த பையில் காப்பரால் செய்யப்பட்ட கோடாரியும், அவர் உடல் உபாதைக்கு எடுத்துக்கொண்ட மருந்துவ மூலிகைகளும் (First aid kid) கிடைத்தன.
 • லெதர் ஷூ போட்டிருந்தார், அது மட்டுமில்லாமல் அவர் உடலில் பல இடங்களில் டாட்டோ(Tattoo) போட்டிருந்திருக்கிறது.

இந்த மாதிரி உடல்களால் தற்போதைய ஆராய்ச்சிக்கு உதவியாக இருக்கும், குறிப்பாகஅன்றைய காலத்தில் நோய்கள் பரவிய முறையை வைத்து தற்போது உணவு கட்டுப்பாடு மற்றும் உடலின் தன்மைகளை ஆராய்வதற்கு எளிதாக இருக்கும்.

மிகப்பெரிய பிரமிட்டு (Mysteries in pyramids)

பிரமிடுகளுக்குப் பின்னாலான மர்மங்கள் (Mysteries in pyramids) கணக்கிலடங்காதவை. பிரமிட்டுகள் என்றாலே சட்டென நம் நினைவில் நிழலாடும் உருவம் ஏழு உலக அதிசயங்களில் ஒன்றான கிரேட் பிரமிட்டு தான். கிங் குஃபு வின் பிரமிடு என்றும் இது அழைக்கப்படுகிறது.

இதுவரை கண்டறியப்பட்ட பிரமிடுகளிலேயே இதுதான் மிகப்பெரிய அளவிலானது. இதன் உயரம் 146 மீட்டர் (கிட்டத்தட்ட 500அடி). கிட்டத்தட்ட 4600 வருடங்களுக்கு முன்னர் இது கட்டப்பட்டதாக கணக்கிடப்பட்டிருக்கிறது. கிங் குஃபு வின் தந்தை கிங் ஸ்நெஃப்ரு வினால் கட்டப்பட்ட ஸ்டெப் பிரமிடு தான் முதன் முதலில் கட்டப்பட்ட பிரமிடாகும்.

கிரேட் பிரமிடு 2.3 மில்லியன் எண்ணிக்கையிலான கற்களால் கட்டப்பட்டிருக்கிறது. இவற்றின் மொத்த எடை 5.9 மில்லியன் டன்கள்.
பிரமிடு போலவே இன்னுமொரு தீராத மர்மம் அதன் முன்னால் இருக்கும் Sphinx சிற்பம். மிகப்பிரமாண்டமான அளவில் கட்டப்பட்டிருக்கும் இந்த சிற்பம் கிரேட் பிரமிடை பாதுகாக்கத்தான் கட்டப்பட்டிருக்கிறது என்ற வாதங்களையும் தாண்டி காலச்சிதைவுகளுடன் அமர்ந்திருக்கிறது.

சில ஆராய்ச்சியாளர்கள் கிரேட் பிரமிடு (Great pyramid) நாலு இலட்சம் மனிதர்களைக்கொண்டு சுமார் 20 ஆண்டுகள் கட்டப்பட்டிருக்கும் என்று கணக்கிட்டிருக்கிறார்கள்.

இன்னும் சிலர் பிரமிடுகளை கட்டியது மனித சக்தியே அல்ல… நிச்சயமாய் ஏதோவொரு சூப்பர் பவரோ… இல்லை… வேற்றுக்கிரக வாசிகளோதான் கட்டியிருக்கவேண்டும் என்றும் வாதிக்கின்றனர்.

ஏனென்றால் 19ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் கூட மனிதர்களால் கிரேட் பிரமிடு போன்ற ஒன்றை உருவாக்குவது சாத்தியமில்லாத போது 5000 வருடங்களுக்கு முன் இது எப்படி மனித சக்தியால் கட்டப்பட்டிருக்கும் என்ற கேள்வி பொருந்துவதாகத்தான் இருக்கிறது.

 பிரமிடுகள் கட்டப்பட்ட விதமும் கட்டப்பட்டதற்கான காரணங்களும் பல்வேறு ஆராய்ச்சி முடிவுகளுடன் தொடர்ந்து கொண்டேயிருக்கும் மர்மங்கள் (Mysteries in pyramids) .

இறந்து போன மன்னர், மகாராணி ஆகியோரின் சடலங்கள் பதப்படுத்தப்பட்டு அவர்கள் உபயோகிக்கும் பொருட்களுடன் பிரமிடுக்குள் அமைக்கப்பட்டிருப்பது இறப்பிற்கு பின்னாலான வாழ்க்கை குறித்த மர்மமாகவே ஆராயப்படுகிறது.

’பிரமிட்டு’ என்றால் பலரும் சொல்வது, ”அது எகிப்தில் இருக்கும் ஒரு கட்டிடம். அதில் அக்காலத்தில் இறந்த மன்னர் போன்றவவர்களின் சடலத்தைப் பாதுகாப்பாக வைத்திருக்கிறார்கள்.

‘மம்மி’ என்றழைக்கப்படும் அவற்றின் உடல்கள் இன்னமும் கெடாமல் இருக்கின்றன. அது தவிர பல்வேறு புதையல்களும் அங்கே இருக்கக்கூடும்” என்பது தான்.

எகிப்தின்  ஏனைய மர்மங்கள்

எகிப்தின் மர்மங்கள் வெறும் பிரமிடுகளுடன் முடிந்து விடுவதல்ல. மம்மிகள் எனப்படும் பதப்படுத்தப்பட்ட உடல்கள். பிரமிடுக்குள் 5000 ஆண்டுகளுக்கு முன்னரே ஃபிளையிங் மெஷின் மற்றும் பல்பு போல செதுக்கப்பட்டிருக்கும் உருவங்கள்.

மனித உடலும் விலங்கு தலையுமான உருவங்கள் என நீளும் விஷயங்கள் இன்னும் எத்தனை நூற்றாண்டுகளானாலும் தீர்க்க முடியாத எகிப்தின் மர்மங்களே!!!

Pyramid,Mysteries in Pyramids,annaimadi.com,world mysteries,Pyramids& mummies,அன்னைமடி,பிரபிட்டுகளும் மர்மங்களும்,பிரமிட்டுகளும் மம்மிகளும்

கிஸா (Giza) நகரில் இருக்கும் பெரிய பிரமிட் சுமார் 476 அடி உயரமானது, 13.6 ஏக்கர் நிலப் பரப்பு கொண்டது 5,90,712 கற்கள் பயன்படுத்தப்பட்டிருப்பதாகக் கம்ப்யூட்டர் கணக்கீடுகள் சொல்கின்றன. கற்களின் எடை ஒவ்வொன்றும் இரண்டில் இருந்து முப்பது டன் வரை.

இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் இந்தப் பிரமிடுகளைச் சுற்றி எந்தவிதமான மலைகளோ, பாறைகளோ, கற்குன்றுகளோ கிடையாது. நகரத்தின் அருகில் மட்டுமல்ல,தொலைவிலும் கூட இல்லை.

ரு புறம் பாலைவனமும், மறுபுறம் கடலும் தான் இந்நகரைச் சுற்றி உள்ளது.அப்படியானால்

இந்தப் பிரமிடை எப்படி உருவாக்கியிருப்பார்கள்?

இத்தனை லட்சம் கற்களை எங்கிருந்து கொண்டு வந்திருப்பார்கள்?

இவ்வளவு பெரிய உயரத்திற்கு அவற்றை எப்படி எழுப்பியிருப்பார்கள்?

என்று தான் வரலாற்றாய்வாளர்களும், விஞ்ஞானிகளும் ஆராய்ந்து கொண்டிருக்கின்றனர்.

மேலும் இந்த அளவுக்கு அருகில் பூமியில் எங்காவது கற்களைத் தோண்டி எடுத்து இவற்றைக் கட்டியிருப்பார்கள் என்று வைத்துக் கொண்டால் கூட, அவ்வாறு தோண்டி எடுத்த இடங்களில் மிகப் பெரிய பள்ளங்கள் ஏற்பட்டிருக்க வேண்டும்.
ஆனால் பலமைல் சுற்றளவிற்கு அப்படி எந்த ஒரு பெரிய பள்ளமும் இல்லை. ஆகவே எப்படி இவற்றை உருவாக்கியிருப்பார்கள் என்று இன்னமும் விஞ்ஞானிகள் மண்டையை உடைத்துக் கொண்டுதான் உள்ளனர்.

உச்சியை எட்டும் போது கற்களை 400 அடிகளுக்கு மேல் தூக்கிக் கொண்டு போயிருக்க வேண்டுமே? அவர்களிடம் கிரேன் மாதிரி எந்திரம் இருந்ததா?

ஒரு லட்சம் தொழிலாளிகள் இருபது வருடம் பணியாற்றியிருந்தால் மட்டுமே பெரிய பிரமிட் உருவாகியிருக்கும் என்பது கட்டடக் கலை வல்லுநர்கள் கணிப்பு.

 

மிஸிரினஸ் பிரமிடில் உபயோகித்திருக்கும் ஒரேயொரு கல்லின் எடை மட்டும் 285 டன் என்பதும், இவ்வளவு எடையுள்ள கல்லை எப்படி கையாண்டிருப்பார்கள் என்பதும் ஆராயமுடியாத மர்மமாகவே(Mysteries in pyramids) நீடிக்கிறது.

பிரமிட்டுகளை விட  பிரம்மாண்டமான கோவில்

பிரமிட்டுகள் பிரம்மாண்டம் என்று நினைக்கிறீர்களா? இதோ வருகிறது நிஜ பிரமாண்டம். கார்நாக் (Karnak) எகிப்தின் மேற்குப் பகுதியில் இருக்கும் கிராமம்.

ஆலயங்கள் நிறைந்த இடம். சிதிலமாகிவிட்ட பல கோவில்கள் நெஞ்சில் துயரம் பொங்க வைக்கின்றன. இங்கே இருக்கும் ஆமுன் ரே (Amun Re) கோவில் எகிப்தின் மற்ற எல்லாக் கோவில்களையும் விட மிகப் பெரியது.

ஆமுன் ரே எகிப்தியரின் முழுமுதற் கடவுள். நாட்டையும், மன்னர்களையும், மக்களையும், எல்லாத் துன்பங்களிலிருந்தும், எப்போதும் காப்பாற்றுபவர் என்பது பொது நம்பிக்கை.

annaimadi.com,Kanak temple,அன்னைமடி,உலக மர்மங்கள் ,world mysteries

ஆமுன் ரே கோவிலில் இருக்கும், கி.மு. 14 – ம் நூற்றாண்டில், இரண்டாம் ராம்சேஸ் மன்னரால் கட்டப்பட்ட அரங்கம் முக்கிய அம்சம். ஹைப்போ என்னும் வித்தியாசமான கட்டடக் கலைப் பாணியில் நிர்மாணிக்கப்பட்டிருக்கிறது.

தாங்கும் வளைவுகள் இல்லாமல், வரிசையாகத் தூண்களை நிறுவி, அவற்றின்மேல் தட்டையான கூரை அமைக்கும் முறை இது.

அரங்கம் எத்தனை பெரியது தெரியுமா? பரப்பளவு 52,000 சதுர அடி. 16 வரிசைகளில், 134 தூண்கள் அரங்கத்தைத் தாங்கி நிற்கின்றன. இவை ஒவ்வொன்றின் சுற்றளவு 10 அடி.  

122 தூண்களின் உயரம் 33 அடி: எஞ்சிய 12 தூண்களின் உயரம் 70 அடி. பிரமிடுகள் கட்டப்பட்ட விதமும் கட்டப்பட்டதற்கான காரணங்களும் பல்வேறு ஆராய்ச்சி முடிவுகளுடன் தொடர்ந்து கொண்டேயிருக்கும் மர்மங்கள்.

பிரமிட்களின் கூம்பு வடிவத்தின் ரகசியம் (Mysteries in pyramids)

பிரமிட் என்றால் கூம்பு வடிவம் மட்டுமே. அடிப்பகுதி நீண்ட சதுரமாக இருக்கும். நான்கு சரிவான முக்கோணப் பகுதிகள் உச்சியில் ஒன்றாக இணையும். இந்தப் பிரமிட்களுக்குள் ராஜா ராணிகள், விஐபிகள் ஆகியோரின் உடல்கள் அவர்கள் மறைவுக்குப்பின் மம்மிகளாக, உடல் கெடாதவாறு பாதுகாக்கப்பட்டு வருகின்றன.

இந்த உடல்கள் கெட்டுப் போகாமல் இருக்கின்றன. பிரமிட்களின் கூம்பு வடிவமே இதற்குக் காரணம் என்று விஞ்ஞானிகள் சொல்கிறார்கள்.

வீடுகளை சாதாரணமாக, சதுர, செவ்வக வடிவங்களில் கட்டியவர்கள், பிரமிட்களை மட்டும் கூம்பு வடிவம் ஆக்கியது ஏன்?Pyramid,Mysteries in Pyramids,annaimadi.com,world mysteries,Pyramids& mummies,அன்னைமடி,பிரபிட்டுகளும் மர்மங்களும்,பிரமிட்டுகளும் மம்மிகளும்

ஆராய்ச்சியாளர்கள், பல ஆண்டுகள் செய்த பரிசோதனைகளின் அடிப்படையில் தரும் விளக்கங்கள் நம்மை பிரமிக்க வைக்கின்றன.
பிரமிட் வடிவ அறைக்குள் காய்கறிகள், பழங்களை வைத்தால், மற்ற அறைகளில் வைக்கப்பட்ட காய்கறிகள், பழங்களைவிட அதிக நாட்கள் கெடாமல் இருகின்றன.

பிரமிட் வடிவக் கட்டங்களில் தூங்குபவர்களுக்கு, சாதாரண அறைகளில் தூங்குபவர்களைவிட, அதிகம் புத்துணர்ச்சி கிடைக்கிறது.

பிரான்ஸ் நாட்டு விஞ்ஞானிகள் இறந்த ஒரு பூனையின் உடலை, மரத்தால் செய்த பிரமிட் வடிவப் பெட்டிக்குள் வைத்தார்கள். பல நாட்கள் ஆன பின்னும் இந்த உடல் கெட்டுப் போகவில்லை.

பிரமிட் வடிவ அறைக்குள் இருக்கும் இரும்புப் பொருட்கள் எளிதாகத் துருப்பிடிப்பதில்லை.
இப்படி ஆச்சரியமான கண்டுபிடிப்புகள்!

கூம்பு வடிவ அமைப்பு, சுற்றுப்புறத்திலிருந்து ஒரு வித மின்காந்த ஆற்றலை உள் வாங்குகிறது. பிரமிடின் உச்சிப்பகுதி, அந்த ஆற்றலை, பிரமிடின் உள்பகுதியில் ஒரே சீராகப் பரவ வைக்கிறது. இதுதான் ரகசியம் என்கிறார்கள்.

இது முழுமையான விளக்கமா? சரி என்று ஒத்துக்கொண்டாலும், பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால், எகிப்தியர்களுக்கு இந்த விஞ்ஞான உண்மை எப்படித் தெரிந்தது, புரிந்தது? இதுவும் ஒரு மர்மமே.

பிரமிட்டு போலவே இன்னுமொரு தீராத மர்மம் அதன் முன்னால் இருக்கும் ஸ்பிங்க்ஸ் சிற்பம். மிகப்பிரமாண்டமான அளவில் கட்டப்பட்டிருக்கிறது  இந்த சிற்பம் .

கிரேட் பிரமிடை பாதுகாக்கத்தான் கட்டப்பட்டிருக்கிறது என்ற வாதங்களையும் தாண்டி காலச்சிதைவுகளுடன் அமர்ந்திருக்கிறது.

ஸ்பிங்க்ஸ் பிரமிடைப் போன்ற ஓர் பிரமிடு உருவச்சிலை செவ்வாய்க்கிரக பிரமிடுகளுக்கு அருகே காணப்படுவதாகக் கூறியிருக்கின்றனர்.

அவர்கள், செவ்வாய்க் கிரகத்தில் சைடோனிக் எனக் குறிக்கப்படும் ஒரு பகுதியில் காணப்படும் பிரமிடு போன்ற அமைப்புகளுக்கும், எகிப்தின் பிரமிடுகளுக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கக் கூடும் என்றும் கருதுகின்றனர்.

Pyramid,Mysteries in Pyramids,annaimadi.com,world mysteries,Pyramids& mummies,அன்னைமடி,பிரபிட்டுகளும் மர்மங்களும்,பிரமிட்டுகளும் மம்மிகளும்

ஏனைய நாடுகளில் உள்ள பிரமிட்டுகள்

உலகில் கட்டப்பட்ட பிரமிடுக்களில், அடிப்படையில் மிகப் பெரியது மெக்சிக்கோவில் உள்ள சோலுலாவின் பெரிய பிரமிடு ஆகும். இப் பிரமிடு இன்னும் தொல்பொருள் ஆராய்ச்சியில் அகழப்பட்டு வருகின்றது.
பிரமிடு வடிவிலான கட்டிடங்கள் எகிப்தியர், மாயன், சுமேரியர் உள்ளிட்ட பல பழமையான நாகரிக மக்களால் அமைக்கப்பட்டன.பாரிசில் உள்ள லூவர் அருங்காட்சியகம் முன்பாகக் கண்ணாடியாலான பிரமிட்டு அமைக்கப்பட்டுள்ளது.

மெசபடோமியர்கள், சிக்குரத்கள் எனப்பட்ட பழமையான நாகரிக மக்கள் துவக்க கால பிரமிடுகளை முதன்முதலாகக் கட்டினர். இவை சூரிய வெப்பத்தில் உலர்ந்த செங்கற்களைப் பயன்படுத்திக் கட்டப்பட்டமையால் அனைத்தும் அழிந்துபோயின.

சூடான்பிரமிடுகள் எகிப்துடனேயே அடையாளப்படுத்தப் பட்டாலும் உலகின் மிகக் கூடுதலான பிரமிடுகளை கொண்ட நாடாக சூடான் விளங்குகிறது.

இங்கு 220 பிரமிடுகள் இன்றும் உள்ளன. நுபியர்கள் சூடானின் மூன்றிடங்களில் இந்த 220 பிரமிடுகளை அமைத்துள்ளனர்.

அரசர்/அரசிகளின் கல்லறைக் கட்டிடங்களாக இவற்றைக் கட்டினர். இவை எகிப்திய பிரமிடுகளிலிருந்து மாறுபட்டுள்ளன. அவற்றைவிட நுபியப் பிரமிட்கள் செங்குத்தான கோணங்களில் அமைக்கப்பட்டுள்ளன.
சூடானில் கிமு 300 வரை பிரமிடுகள் கட்டப்பட்டு வந்தன.

நைஜீரியாவில் பிரமிடுகளை அங்கு வாழ்ந்த குபோ நாகரிகத்தின் கூறாகக் காணலாம்.

களிமண்ணால் கட்டப்பட்ட பத்து பிரமிடுகள் இங்குள்ளன. முதல் கட்ட அடிப்பகுதி 60 அடி சுற்றளவையும் 3 அடி உயரத்தையும் கொண்டுள்ளது.

அடுத்தப்படியில் 45 அடி சுற்றளவில் கட்டப்பட்டுள்ளது. இவ்வாறான அடுக்குகள் வட்டவடிவ ஒன்றன்மேல் ஒன்றாக மேல்வரை கட்டப்பட்டுள்ளன. இவை கடவுளரின் இருப்பிடமாகவும் சிகரத்தில் அவர்கள் வசிப்பதாகவும் நம்பப்பட்டது.

சோழர்கள் காலத்தில் தென்னிந்தியாவில் கருங்கற்களால் கட்டப்பட்ட பிரமிடு வடிவ கோபுரங்களுடன் கூடிய பல பெரும் கோவில்கள் இன்றும் சமயப் பயன்பாட்டில் உள்ளன.

தஞ்சைப் பிரகதீசுவரர் கோயில், கங்கைகொண்ட சோழபுரம் மற்றும் தாராசுரத்தில் உள்ள ஐராவதேஸ்வரர் கோயில் தமிழ்நாட்டின் ஸ்ரீரங்கம் வட்டத்திலுள்ள அரங்கநாதசுவாமி கோயில் ஆகியன இவற்றில் சிலவாம்.

இந்தோனேசியாவின் மண்,கற்களாலான அடுக்கு பிரமிடு கட்டமைப்புகள் இருந்தன. இவை மேற்கு சாவாவின் குனுங் படாங் பகுதியிலும் சிசுலோக் பங்குயங்கன் பகுதிகளிலும் காண்டறியப்பட்டன.

மலைகளிலும் உயர்ந்த இடங்களிலும் மூதாதையரின் ஆவி வாழ்வதாக உள்ளூர் மக்கள் கொண்டிருந்த நம்பிக்கைகளின் அடிப்படையிலேயே இக்கற்கட்டிடங்கள் கட்டப்பட்டன.

பிரமிட்டுகள் பற்றிய பொதுவான செய்திகள்

பிரான்ஸ் நாட்டின் மாவீரராக இருந்த நெப்போலியன் இந்தப் பிரமிடுகளில் என்ன தான் இருக்கிறது என்று பார்க்க ஆர்வம் கொண்டார். தனி ஆளாக ஓரிரவு முழுக்க இந்தப் பிரமிடில் தங்கினார்.

மறுநாள் காலை வெளிவந்த அவர், பிரமிப்பின் உச்சியில் இருந்தார். பிரமிடின் பல்வேறு ரகசியங்களைத் தெரிந்து கொண்டிருந்த அவர், அவற்றை முழுமையாக வெளியிடவில்லை. ”நான் சொல்வதை யாரும் நம்ப மாட்டார்கள்” என்ற கருத்தை மட்டும் தெரிவித்தார்.

பிரமிடுகளின் மேல் ஏறி உயரே செல்ல முயற்சித்தல் சட்டப்படி குற்றமாகும். ஏனெனில் மேலே ஏறி செல்லுதல் எளிதானதாகவே இருக்கும் (15முதல் 20நிமிடங்களில்).

ஆனால் கீழிறங்குதல் பெரும்பாலும் விபத்தில் முடியும். இச்செயலில் ஈடுபட்டு பலர் உயிரிழந்தள்ளனர்.

இதற்கு முக்கியமான காரணம், இறங்கும்பொழுது ஏறக்குறைய 6அடி உயர படிகளில் ஒவ்வொன்றாக குதித்து இறங்க வேண்டும்.

ஆனால் இந்த அமைப்பு சுண்ணாம்பு கற்களாலானதால் வழுக்கும் தன்மை அதிகம். இதனால் விபத்துகள் அதிகம் ஏற்பட்டன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *