மர்மம் அறிந்தால் மரணம் (Mystery of Himalaya)
இமயமலையில் அமைந்திருக்கும் கைலாயத்தின் ரகசியங்களை அறிய முற்படுபவர்கள் இறப்பதாகவும் (Mystery of Himalaya) , தெய்வபக்தியுடன் போயிற்று வருபவர்கள் நல்ல நிலையை அடைவதாகவும் நம்பப்படுகிறது.
பிரம்மனோட இருப்பிடம் சத்யலோகம், விஷ்ணுவோட இருப்பிடம் வைகுண்டம், சிவனோட இருப்பிடம் கைலாயம் என்றும் புராணக்கதைகளிலும், ஆன்மீக கதைகளிலும் கூற கேட்டிருப்போம்.
சத்யலோகமும், வைகுண்டமும் மனித கண்களுக்கு தெரியாது.ஆனால் , நம் கண்களுக்குப் புலப்படும் ஒரே தேவலோகம் கைலாயம். அந்த கைலாயத்தில் இருக்கும் மர்மங்கள் என்ன என்பது பற்றி பார்ப்போம்.
இன்னமும் புலப்படாத அதிசயங்கள் (Mystery of Himalaya)
கைலாய மலை 6638 மீ உயரம் கொண்டதாகும். கெலாசா எனும் சமக்கிருத வார்த்தையிலிருந்து உருவான கைலாசம் எனும் பெயருக்கு படிககற்கள் என்று பொருள்.
இது பார்ப்பதற்கு அழகிய படிகக்கற்கள் போலவே சூரிய ஒளியில் ஜொலிக்கிறது.
இந்த கைலாய மலை ஒவ்வொரு மதத்தின்படியும் ஒவ்வொரு நம்பிக்கை கொண்டதாக இருக்கிறது.
இந்து மதத்தின் படி, இந்த கைலாய மலையில் சிவன் வாழ்வதாகவும், அவ்வப்போது தன் மனைவி பார்வதியுடன் தியானம் செய்வார் எனவும் அந்த நேரம் மயான அமைதி நிலவும் எனவும் அங்கு சென்று வந்த பக்தர்கள் கூறுகின்றனர்.

இந்த மலையில் நிறைய மர்மங்கள் (Mystery of Himalaya) ஒளிந்துள்ளனவாம். அதிலும், சிவன் ருத்ரதாண்டவமாடும் போது பனிமலை சறுக்கல்கள் வருவதாகவும், சிவன் பார்வதி தேவியுடன் மானசரோவரில் தோன்றும் காட்சி கண்களுக்கு தெரிவதாகவும் பலர் கூறியுள்ளனர்.
ஆனால்
உண்மையைக் கண்டறிகிறேன் என்று செல்பவர்கள் திரும்பி வருவதில்லை
என்றும் பரவலாக பேச்சு உள்ளது.
உலகின் மிக உயரத்தில் இருக்கும் ஒரே நன்னீர் ஏரி என்ற புகழ்பெற்றது மானசரோவர் ஏரி ஆகும். இதை பிரம்மதேவர் உருவாக்கியதாக ஆன்மீகவாதிகளால் நம்பப்படுகிறது.
பாலையும் நீரையும் தனித்தனியாக பிரித்து வைக்கும் அன்னப்பறவைகள் வாழும் இடமாகவும் இது உள்ளதாக கூறுகிறார்கள்.
மேலும், முனிவர்களும், தேவர்களும், சிவபெருமானோடு சேர்ந்து பிரம்மமுகூர்த்தத்தில் இந்த ஏரியில் வந்து நீராடுவதாக நம்பிக்கை உள்ளது.

மானசரோவர் ஏரியிலிருந்து நடந்து செல்லும் தூரத்தில் தான் கைலாயம் உள்ளது. இந்த ஏரியில் குளித்து விட்டு செல்வதால் பக்தர்கள் முக்தி அடைவார்கள் என்றும் கூறப்படுகிறது.
52கி.மீ சுற்றளவு கொண்ட இந்த மலையை சுற்றி வரும்போது, இரண்டு இடங்களில் இந்த மலையின் அற்புத காட்சியை நாம் காண முடியும்.
அதுவும் சூரியஒளியில் பிரதிபலிக்கும் இந்த மலையின் காட்சி சுகு, ஜெய்தி எனும் இரண்டு இடங்களில் தான் நன்றாகத் தெரிகிறது.
ஆச்சரியம் என்னவெனில்,கைலாயத்துக்கு செல்பவர்கள் அனைவருக்கும் இதுபோன்ற காட்சி தென்படுவதில்லை. இதனை அரிதிலும் அரிய காட்சி என்றும் கௌரிசங்கர் காட்சி எனவும் குறிப்பிடுகின்றனர்.
மானசரோவருக்கு பக்கத்திலேயே ராட்சத தளம் என்று ஒரு ஏரி இருக்கிறது. இது உப்புத்தன்மை கொண்டாக உள்ளது. இந்த ஏரியில் இராவணன் தவம் செய்ததாகவும், அதனால் உப்பாக மாறியதாகவும் சொல்லப்படுகிறது.
ஒவ்வொரு ஆண்டும் கோடை நாட்களில் கைலாயத்துக்கு செல்ல இந்திய அரசே ஏற்பாடு செய்து தருகிறது. இன்று திருக்கைலாயம் உள்ள இமயமலைப் பகுதி சீன அரசின் கட்டுப்பாட்டுள் இருந்து வருகிறது.
ஆண்டுதோறும் கைலாய தரிசனத்திற்குச் செல்ல விண்ணப்பித்துக் கொள்ளும் அன்பர்களைத் தேர்ந்தெடுத்து இந்திய அரசு அனுப்பி வைக்கின்றது.