உடல் சூட்டை சரியாக பேண நாடிசுத்தி (Nadi shuddhi)

 நம் உடல் இயக்கத்திற்கு உடல் உஷ்ணம்மிகவும் இன்றியமையாதது.உடல் சூட்டை சரியாக பேண நாடிசுத்தி (Nadi shuddhi) உதவுகின்றது. அதாவது உடல் வெப்பத்தை  சமநிலையில் இருக்கும்படி செய்கிறது.

நம்முடைய உடலில் உள்ள அனைத்து உறுப்புகளும் சீராக இயங்குவதற்கும், ஜீரண வேலைகள் நிகழ்வதற்கும் வேண்டிய சக்தியே உடல் வெப்பம் ஆகும். அதேநேரம் உடல் வெப்பம் அதிகமானால் பல்வேறு நோய்களை நமக்கு தந்துவிடும்.

நாடி என்பது சக்தியின் பாதை.சுத்தி என்பது சுத்திகரிப்பது .நாடிசுத்தி யோகா என்பது , நமது உடலின் ஆற்றலின் பாதையை சுத்திகரிக்கின்றது என பொருள்படும்.

உடற்சூடு அதிகரித்தால் நம்முடைய பித்தப்பை பாதிப்புக்குள்ளாகிறது. அதோடு கல்லீரலும் பாதிக்கப்படுகிறது. இதன் காரணமாக சில உஷ்ண நோய்கள் நம்மைத் தாக்குகிறது. உடற்சூடு அதிகரித்தால் கண் எரிச்சல், தூக்கமின்மை, வாய்ப்புண் போன்ற சாதாரண சில அறிகுறிகள் தென்படும். அப்போதே நாம் அதை கவனித்து அதை சரிசெய்து கொள்ள வேண்டும்.

புளிப்பு, உப்பு, காரம் உள்ள உணவுகளை அதிகளவில் உட்கொண்டால் நம்முடைய உடல் மிகுந்த உஷ்ணம் அடையும். மேலும் டீ, காஃபி, கோலா போன்ற கஃபைன் வகை பானங்கள், மீன், கருவாடு, கத்தரிக்காய், புளித்த தயிர், வினிகர், ஊறுகாய் போன்ற உணவுகளும் நம்முடைய உடற்சூட்டை அதிகரிக்கச் செய்யும்.

மதுப்பழக்கம், புகைப்பழக்கம் காரணமாகவும் உடலின் வெப்பநிலை அதிகமாகிறது.

உடற்சூடு பிரச்சனை வராமல் இருப்பதற்கு வெள்ளரிக்காய், முள்ளங்கி, வெண்பூசணி, இளநீர், புடலங்காய் போன்ற நீர்ச்சத்து நிறைந்துள்ள உணவுப்பொருட்களை அதிக அளவில் சேர்த்துக் கொள்வது மிகவும் நல்லது.

கீரை வகைகளில் பசளைக்கீரை, மணத்தக்காளி, பொன்னாங்கன்னி போன்றவை சிறந்தவை. விற்றமின் சி அதிகம் நிறைந்த சிட்ரஸ் பழங்களான லெமன்,ஆரஞ்சு போன்றவற்றை சாப்பிட்டு வருவதன் மூலமும் உடலின் வெப்பத்தை சரியாக மெனலாம்.

நாடிசுத்தி செய்யும் முறை

எளிமையான எண்ணற்ற நல்ல பலன்களை தரும் நாடி சுத்தி எப்படி செய்வது எனப் பார்ப்போம்.
இதனை காலை, மதியம், மாலை சாப்பிடும் முன் பயிற்சி செய்ய வேண்டும்.

தரையில் ஒரு விரிப்பு (Yogamat) விரித்து அதில் முதுகெலும்பு நேராக  இருக்கும்படி அமர்ந்து கொள்ள வேண்டும்.

  இடது கை சின்முத்திரையில் இருக்க வேண்டும்.
  (அதாவது பெருவிரல், ஆள்காட்டி விரல் நுனியை இணைத்து மற்ற விரல்கள் தரையை நோக்கியிருக்கும் படி)
 
to maintain body heat properly,annaimadi.com,nadi shuddhi,yoga ,nadi suddhi balance body heatfor peace,nadi shuddhi pranayama
  1. வலது கை பெருவிரலால் வலது நாசியை அடைத்து இடது நாசியால் மிக மெதுவாக மூச்சை உள் இழுத்து, மிக மெதுவாக இடது நாசியிலேயே மூச்சை வெளிவிடவும். மீண்டும் இடத்திலேயே மூச்சை இழுத்து மிக மெதுவாக இடது நாசியிலேயே வெளியிடவும். இதுபோல் பத்து முறைகள் செய்யவும். (மூச்சு இழுக்கும் பொழுது வயிறு வெளியில் வர வேண்டும். மூச்சு விடும் பொழுது வயிறு உள்ளே மெதுவாக செல்ல வேண்டும்).
  2. வலது கை மோதிர விரலால் இடது நாசியை அடைத்து வலது நாசியிலேயே மெதுவாக மூச்சை இழுத்து வலது நாசியிலேயே மிக மெதுவாக மூச்சை வெளிவிடவும். இதுபோல் பத்து முறைகள் செய்யவும்.
  3. பின்னர் வலது நாசியை பெருவிரலால் அடைத்து இடது நாசியில் மெதுவாக மூச்சை இழுத்து உடன் இடது நாசியை மோதிர விரலால் அடைத்து வலது நாசியில் மெதுவாக மூச்சை வெளியிடவும். மீண்டும் இடதில் இழுத்து வலது நாசியில் மூச்சை வெளியிடவும். இதேபோல் பத்து முறைகள் பயிற்சி செய்யவும்.
  4. இப்பொழுது மோதிர விரலால் இடது நாசியை அடைத்து வலது நாசியில் மெதுவாக மூச்சை இழுத்து உடன் வலது நாசியை பெருவிரலால் அடைத்து இடது நாசியில் மூச்சை மெதுவாக வெளியிடவும். இதே போல் பத்து முறைகள் செய்யவும்.

 

to maintain body heat properly,annaimadi.com,nadi shuddhi,yoga ,nadi suddhi balance body heatfor peace,nadi shuddhi pranayama

கீழே அமர முடியாதவர்கள்,வயதானவர்கள் கதிரையில் அமர்ந்து செய்யலாம்.

நாடிசுத்தி பலன்கள்

மேற்குறிப்பிட்ட நான்கு பயிற்சிமுறைகளை பின்பற்றி  தினமும் காலை, மாலை செய்து வர உடலில்  மிக அற்புத மாற்றங்களைக் காண்பீர்கள்.

மன அழுத்தம் நீங்கும். அமைதி கிட்டும்.தியானம் செய்யும்  மனநிலை கிடைக்கும்.

ஆஸ்த்துமா, சைனஸ் நீங்கும்.

இதய வால்வு நன்கு இயங்கும்.இதயம் பாதுகாக்கப்படும்.

இரத்தம் சுத்தமாவதோடு இரத்த அழுத்தம் நீங்கும்.

மூளை நரம்புகளை தூண்டி புத்துணர்ச்சி கிடைக்கும். இதனால் அறிவுத்திறன் அதிகரிக்கும். ஞாபக சக்தி பெருகும்.

நல்ல தூக்கம் வரும்.

ஜீரண மண்டலம் நன்கு இயங்கும். உடலில் கழிவுகள் சரியாக வெளியேறும்.

ஒற்றைத் தலைவலி நீங்கும்.

நோய் எதிர்ப்பாற்றல் பெருகும்.

நரம்பு மண்டலம் நன்கு இயங்கும்.

நேர்மறை எண்ணங்கள் வளரும்.

nadisuddhi  Check price

அதிக உடல் எடை குறையும். வயதிற்கேற்ற தசைகள் உடலில் இருக்கும்.

கொழுப்புக் கட்டிகள் கரையும்.

பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் ஏற்படும் பிரச்சனை, மன இறுக்கம் நீங்கும்.

கர்ப்பிணி பெண்கள் செய்தால் சுகப்பிரசவம் உண்டாகும்.

முடி கொட்டுதல், இளநரை குறைபாடுகள் நீங்கும்.

இளமையுடன் வாழலாம். ஆயுள் நீடிக்கும்.

நமது முக தசைகள் பளபளப்புடன் சுருக்கம் இல்லாமல் இருக்கும்.

உடலில் கபம் ,வாதம், பித்தம், அதனதன் விகிதத்தில் இருக்கும்.

 
எண்ணற்ற பலன்கள் தருகின்ற நாடிசுத்தி பயிற்சியை தினமும் காலை, மாலை பயிற்சி செய்து,நலமாக வாழ்வோம்!

Leave a Reply

Your email address will not be published.