முக அழகை கூட்ட இயற்கை ஃபேஷியல் (Natural facials)
முக அழகை காக்க இயற்கை ஃபேஷியல் (Natural facials) உள்ளது. இந்த இயற்கை ஃபேஷியல் முகத்திற்கு எந்த ஒரு பக்க விளைவுகளையும் ஏற்படுத்துவது இல்லை.வீட்டிலுள்ள காய்கறிகள்,பழங்களை வைத்து நீங்களாகவே தயாரிக்கலாம்.
பெண்கள் தம் முக அழகு மெருகேற்றவே அதிக அளவு பிரயத்தனம் செய்வார்கள்.அழகாய் இருக்க யாருக்குத் தான் பிடிக்காது!
அழகியமுகம் ஒரு சிறந்த சிபாரிசு கடிதம்
என்பார்கள்.
இந்த முக அழகை மேலும் அழகுபடுத்துவதற்காக, கடைகளில் செயற்கை முறையில் தயாரிக்கப்பட்டு, மிக அதிக விலையில் விற்பனை செய்யப்படும் பொருட்களை வாங்கி பயன்படுத்துகின்றனர்.
ஆனால் அவை விரைவாக நல்ல மாற்றத்தை தந்தாலும், போகப் போக முகத்திற்கு வேண்டாத விளைவுகளை ஏற்படுத்த தொடங்கும்.
சருமம் உலராமல் இருக்க வீட்டிலேயே செய்யக்கூடிய அற்புதமான ஃபேஷியல் எவை என்று பார்ப்போம்.
காய்கறி ஃபேஷியல்
கரட், உருளைக்கிழங்கு, வெள்ளரி, தக்காளி மற்றும் பூசணி போன்ற காய்கறிகளில்,உங்களிடம் உள்ளவற்றை சிறு துண்டுகளாக்கி .மிக்சியில் நன்கு அரைத்து கொள்ளவும்.

பின்பு அவற்றுடன் கொஞ்சம் பயத்தமாவை கலந்து முகத்தில் போட்டு 15 நிமிடம் கழித்து முகத்தை கழுவவும். இவ்வாறு செய்வதால் முகம் சோர்வடையாமல் புத்துணர்ச்சியுடன் இருக்கும்.
மேலும் முகத்தில் இருக்கும் பருக்களை போக்கி, மேடு பள்ளத்தை சரிசெய்யும். இந்த ஃபேஷியல் சருமத்திற்கு ஊட்டசத்தையும், நல்ல நிறத்தையும் அளிக்கிறது.
வாழைப்பழம் ஃபேஷியல்
வாழைப்பழத்தை நன்கு மசித்து அதனுடன் தயிர் மற்றும் கொஞ்சம் தேன் சேர்த்து நன்றாக கலந்து முகத்தில் ஃபேஷியல் செய்தால், முகம் பொலிவுடனும், மென்மையாகவும் மற்றும் பளபளப்பாகவும் இருக்கும்.
மாம்பழ ஃபேஷியல்
மாம்பழத்தை நன்றாக மசித்து அவற்றில் சிறிது பால் சேர்த்து நன்றாக கலந்து முகத்தில் ஃபேஷியல் செய்தால், சரும பிரச்சனைகள் அனைத்தும் சரியாகும். மேலும் முதுமை தோற்றம் விலகும்.

ஸ்ட்ராபெரி ஃபேஷியல் (Fruit facial )
ஸ்ட்ராபெரியை தயிருடன் கலந்து, வாரத்தில் இரு முறை முகத்திற்கு ஃபேஷியல் செய்து வந்தால் முகப்பருக்கள் அனைத்தும் நீங்கும்.

ஆப்பிள் ஃபேஷியல்
ஆப்பிளை நன்கு அரைத்து, அதனுடன் தேன் கலந்து முகத்தில் ஃபேஷியல் செய்து வர நல்ல பலன் கிடைக்கும்.
ஆரஞ்சு ஃபேஷியல்
சிட்ரஸ் பழங்களில் ஆரஞ்சு பழத்தை வைத்து ஃபேஷியல் செய்தால், வறட்சியற்ற சருமத்தையும், இளமையான தோற்றத்தையும் பெறலாம்.

எலுமிச்சை ஃபேஷியல்
எலுமிச்சையில் ஃபேஷியல் செய்தால் இறந்த செல்கள் நீங்குவதோடு, சருமத்தை பொலிவுடன் வைத்து கொள்ளலாம்.
மூலிகை ஃபேஷியல்
முல்தானிமெட்டி, பயத்தமாவு, கடலை மாவு, கஸ்துரி மஞ்சள் மற்றும் தேங்காய் எண்ணெய் ஆகியவற்றை கலந்து முகத்தில் ஃபேஷியல் (Natural facials ) போட்டால் நல்ல பலன் கிடைக்கும். இந்த முறையை தினமும் செய்து வரலாம்.
இந்த முறையை செய்த பிறகு வெதுவெதுப்பான தண்ணீரில் முகத்தை கழுவி, பின்பு கற்றாழை ஜெல்லியில் ஒரு சொட்டு எலுமிச்சை சாறு விட்டு முகத்தில் தேய்க்கவும்.