நாளும் ஒருவேளை இயற்கை உணவு (Natural food)
உண்மையில் நமக்குத் தேவையான உணவு எதுவென்றால் அது இயற்கை உணவு (Natural food) தான்.
சமைக்கப்படாத பழவகைகள், பச்சைக் காய்கறிகளுமே ஆகும்.
இயற்கை உணவு உண்ணும்போது சாப்பிடும் அளவு தானாகவே குறைந்துவிடுகிறது.தேவைக்கு மேல் சாப்பிடும் எண்ணமோ, பழக்கமோ ஏற்படாது. இயற்கை உணவு (Natural food) உண்ணும்போது நல்ல உடல் நலத்தையும் பெறமுடிகிறது.
பகுத்தறிவில்லாத உயிரினங்களான அனைத்து விலங்கினங்கள், பறவையினங்கள், ஊர்வன பூச்சிகள் புழுக்கள், நீர் வாழ் உயிரினங்களே.
இவையனைத்தும் தமது உணவை இயற்கையாக தேடி, இயற்கையாக உண்டு, இயற்கையாக இன்றும் வாழ்ந்து வருகின்றன.
இதி போல அதாவது ஆதி மனிதன் போன்று ,நாமும் இயற்கையாக உண்டு, இயற்கையாக வாழ முயலும்போது, மனித உடலும் தன்னைத் தானே அனைத்து உடல், உள நோய்களிலிருந்து சரி செய்து, சரியாக இயங்க ஆரம்பிக்கும்.
இதில் எள்ளளவும் சந்தேகமில்லை.
இவ்வாறு உண்பதால் நீரழிவு ,புற்றுநோய், சிறுநீரகக்கோளாறு, ஆஸ்துமா, தொழுநோய், யானைக்கால் போன்ற தீராத நோய்கள் குணமடைகிறது. வெளிநாட்டவர்கள்கூட இந்த மையங்களுக்கு வந்து தங்கி பயிற்சி பெற்று செல்கின்றனர்.
பல இடங்களில் இயற்கை நலவாழ்வு மையங்கள் இன்று செயல்பட்டு வருகிறது. இங்கு பழங்கள், தேங்காய் மட்டுமே உணவாகக் கொடுக்கப்பட்டு வருகிறது. இவர்கள் இயற்கையான இந்த உணவை உண்பதால் இயற்கை வாழ்வு வாழ்ந்து வருகிறார்கள்.
எனவே ஒருவேளையாவது தேங்காய், பழங்களையே உண்டு, நீரைப் பருகி, இனிய காற்றை சுவாசித்து, எளியவாழ்வு வாழ விரும்புவோம்.
பசித்த பின்பு தான் எந்த உணவையும் சாப்பிட வேண்டும். அதைப்போல பசியெடுத்து சாப்பிடாமல் இருப்பதும் நமது உடலுக்கு கெடுதலே. பசியெடுத்து சாப்பிடும்போது உமிழ்நீர் நன்கு சுரக்கும். உண்ணும் உணவு செரித்துவிடும். எனவே, பசித்தபின் புசி என்கிற பழமொழிக்கேற்ப உண்பது மிகவும் சிறந்தது.
அதோடு பசியே எடுத்தாலும் இரவில் மாமிச உணவுகள், இனிப்பு, எண்ணெய் பதார்த்தங்கள், பால், தயிர், புளிப்பு சுவையுடைய உணவுகளை சாப்பிடுவதைத் தவிர்த்தல் நலம்.
மனிதனுக்கு உரிய உணவாகிய தேங்காய் பழங்களையே உணவாகப் பெரும்பாலும் உண்டு வாழ முயலும் போது, உடலிலுள்ள கழிவுகள் வெளியேறி, உடலும் ரத்தமும் சுத்தமாகி, உடல் தூய்மையானதாக உருவாகிறது.
வாத, பித்த, கப நாடிகள் சீரடைகின்றன. சுவாசமும் சீராகிறது.
உலகிலுள்ள துன்பங்களுக்கெல்லாம் காரணம், சமைத்துண்ணும் பழக்கமே!
உணவை மாற்றினால், உலகையே மாற்றலாம்!
பகவத் கீதை, திருக்குறள், திருமந்திரம், அஷ்டாங்கயோகம், சாந்தோக்ய உபநிடதம் போன்றவை இக்கருத்தையே மனிதருக்கு வலியுறுத்தி உள்ளன.
இயற்கை உணவை உண்டு ,நோயின்றி இனிய வாழ்வு வாழ்வோம்.