அழகான கூந்தலுக்கு இயற்கை ஹேர் மாஸ்க்ஸ் (Natural Hair Masks)
அழகான கூந்தலுக்கு ஆரோக்கியமான ஹேர் மாஸ்க்ஸ்
நீங்களே வீட்டில் செய்யக்கூடிய தலைமுடி பாதுகாப்பிற்கான மாஸ்க் (Natural Hair Masks) தலைமுடி உதிர்வு, இளநரை, முடி அடர்த்தியின்மை, பொடுகு, என பல தலை முடி சார்ந்த அனைத்து பிரச்சனைகளுக்கும் ஆண்,பெண்பாலினருக்கு இயற்கை முறையில் பொதுவானதீர்வுகள் .
ஹேர் மாஸ்க் என்பது ஒரு வகையான சிகிச்சையாகும். ஹேர் மாஸ்க் தலைமுடிக்கு சரியான ஊட்டச்சத்தை அளிக்கின்றது. ஹேர் கலரிங், ஸ்ப்ரேக்கள் மற்றும் ஜெல் ஆகியவற்றின் பயன்பாட்டால் ஏற்படும் சேதத்தை இதன் மூலம் குறைக்க முடியும்.
இயற்கையான பொருட்களைக் கொண்டு, இ ந்த மாஸ்க்களை தயாரிப்பதால் (Natural Hair Masks) இவற்றை பயன்படுத்துவதால் ,எந்தவித கெடுதலும் இல்லைமாறாக ஏராளமான நன்மைகளே., வாரத்திற்கு ஒரு முறை இதைச் செய்து வருவது நல்லது.
முட்டை வெண்கரு, தேசிக்காய் மாஸ்க்
இந்த மாஸ்க் எண்ணெய் தன்மையான முடிக்கு ஏற்றது. உச்சந்தலையில் அதிகப்படியான எண்ணெய்த்தன்மையால் அழுக்கு மற்றும் தூசி அதிகரிக்கிறது, இது முடி உதிர்தல் மற்றும் முகப்பருவுக்கும் வழிவகுக்கும்.
தேவையான பொருட்கள்
- முட்டை வெள்ளைக்கரு
- எலுமிச்சை சாறு – 1/2 தேக்கரண்டி
முடியின் நுனிகளிலிருந்து உச்சந்தலை வரை தடவி 30-45 நிமிடங்கள் வரை ஷவர் கேப் போட்டு மூடி வைக்கவும். பின்னர் இளஞ்சூட்டு நீரில் கழுவவும். சாதாரணமாக குளிப்பது போல ஷாம்பு மற்றும் கண்டிஷனர் போட்டு கழுவவும்.
அவகாடோ ,ஒலிவ் ஒயில்
சிகை அலங்காரங்கள், கலரிங் மற்றும் சூழல் மாசுபாடு ஆகியவற்றால் சேதமடைந்த முடிக்கு சிகிச்சையளிக்க இந்த மாஸ்க் முக்கியமானது.
தேவையான பொருட்கள்
அவகாடோ -1/2 ,முட்டை – 1 ஒலிவ் எண்ணெய் – 1 மேசைக்கரண்டி தேன் – 1 மேசைக்கரண்டி
இதையெல்லாம் ஒன்றாக சேர்த்து ஒரு பேஸ்ட் போல செய்துகொள்ளவும். அதில் உள்ள மேலதிக நீரை நன்கு பிழிந்து எடுத்து விட்டு, அதை தலையில் மேலிருந்து கீழாக மெதுவாக தடவி விட்டு, நகங்களால் தலைமுடியில் குடைந்து மசாஜ் செய்யவும். பிறகு ஷவர் கேப் ஒன்று போட்டு 30 நிமிடங்கள்வரை வைத்து விட்டு பிறகு குளிக்கும் போது சாதாரணமாக கழுவி ஷாம்பு மற்றும் கண்டிஷனர் மூலம் வழக்கம் போல் கழுவவும்.
கறுவாதூள் ,தேங்காய் எண்ணெய் மாஸ்க்
தலைமுடி வளரவில்லை என்று கவலைப்படுவோருக்கு இந்த மாஸ்க் மிகவும் பொருத்தமானது. இதனை உச்சந்தலையில் மசாஜ் செய்வது நல்ல இரத்த ஓட்டம் மற்றும் ஆரோக்கியமான, அழகான கூந்தலை பராமரிக்க உதவும்.
இலவங்கப்பட்டை தூள் மற்றும் தேங்காய் எண்ணெய் சம விகிதத்தில் எடுத்துக்கொள்ளவும். இரண்டையும் நன்றாக கலந்து முடி வேர்கள் மற்றும் உச்சந்தலையில் தடவி நன்கு மசாஜ் செய்யவும். தலைமுடியை மேல் நோக்கி கட்டி, 30-45 நிமிடங்கள் ஷவர் கேப் போட்டு, பின்னர் வழக்கம் போல் ஷாம்பு மற்றும் கண்டிஷனர் போட்டு கழுவவும்.
கிரீன் டீ ,ஆப்பிள் சைடர் வினிகர் மாஸ்க்
இந்த மாஸ்க் அடிக்கடி உச்சந்தலையில் அரிப்பு இருக்கும் ஒருவருக்கு ஏற்றது. தலை அரிப்பு பெரும்பாலும் வறட்சியால் ஏற்படுகிறது. இந்த நிலையைத் தடுக்க இந்த மாஸ்க் ஒரு வெற்றிகரமான தீர்வாகும்.
தேவையான பொருட்கள்
- கிரீன் டீ கப் – 1
- பெப்பர்மிண்ட் ஒயில் – 2 துளிகள்
- ஆப்பிள் சைடர் வினிகர் – 1 மேசைக்கரண்டி
இதை நன்றாக கலந்து உச்சந்தலையில் தடவி 5-6 நிமிடங்கள் ஷவர் கேப் போட்டு வைத்து, பிறகு கழுவி விடவும்.
தேன், ஆப்பிள் சைடர் வினிகர் , எண்ணெய் மாஸ்க்
எந்தவொரு ஊட்டமளிக்கும் தோற்றமும் இல்லாமல் உலர்ந்த கூந்தலுக்கு புதிய மற்றும் ஆரோக்கியமான தோற்றத்தை வழங்கும் மாஸ்க் இது.
தேன், ஆப்பிள் சைடர் வினிகர் மற்றும் தேங்காய் எண்ணெய் ஆகியவற்றை சம விகிதத்தில் எடுத்துக்கொள்ளுங்கள். இதை நன்றாக கலந்து ஈரமான கூந்தலில் தடவவும். ஷவர் கேப் போட்டு 20 நிமிடங்கள் வைத்து பிறகு ஷாம்பு மற்றும் கண்டிஷனர் மூலம் கழுவுங்கள்.
தேன், முட்டை , ஆப்பிள் சைடர் வினிகர் மாஸ்க்
உலர்ந்த கூந்தலுக்கு ஏற்ற மாஸ்க் இதுவாகும். கூந்தலின் ஈரப்பதத்தை மீண்டும் பெற இது ஒரு நல்ல மாஸ்க். சிறந்த ஊட்டச்சத்துக்காக இதை எல்லோரும் பயன்படுத்தலாம்.
தேவையான பொருட்கள்
- தேன் ஒரு டீஸ்பூன்
- 1 முட்டை
- ஆப்பிள் சைடர் வினிகர் ஒரு மேசைக்கரண்டி
இவை அனைத்தையும் கலந்து முடி மற்றும் உச்சந்தலையில் தடவி, ஷவர் கேப் போட்டு 30-40 நிமிடங்கள் வரை மூடி வழக்கம் போல் கழுவ வேண்டும்.