இயற்கை வழியில் பாதஎரிச்சலில் இருந்து நிவாரணம்(Natural relief from foot Irritation)
சர்க்கரை நோய்,இரத்த அழுத்தம் காரணமாக ஏற்படும் பாத எரிச்சலால் நல்ல தூக்கத்தை தொலைத்து தவிப்பவர்கள் பலர்.இயற்கை வழியில் இலகுவாக போகும் வழிமுறைகளை(Natural relief from foot Irritation) பின்பற்றி நல்ல பலனைப் பெறலாம்.
சர்க்கரை நோய் இல்லை.இரத்த அழுத்தம் இல்லை ஆனால் பாத எரிச்சல் இருக்கிறது என்பவர்களுக்கும் இது எந்த பாதிப்பும் இல்லாத மிக சிறந்த தீர்வுகளே.
ஆவாரம்பூ பொடி
என்னென்ன தேவை
காய்ந்த மிளகாய் 15
உலர்ந்த ஆவாரம் பூ
கடலைப் பருப்பு தலா அரை கப்
உளுந்து அரை கப்
பூண்டு 6 பல்
பெருங்காயம் சிறிதளவு
எண்ணெய்இயற்கை வழியில் பாதஎரிச்சலில் இருந்து நிவாரணம்
உப்பு தேவையான அளவு
எப்படிச் செய்வது
வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு, காய்ந்த மிளகாய், பூண்டு இவற்றைத் தனித்தனியாக வறுத்துக்கொள்ளுங்கள். பெருங்காயத்தையும் எண்ணெயில் பொரித்துக்கொள்ளுங்கள்.
ஆவாரம்பூ, கடலைப் பருப்பு, உளுந்து ஆகியவற்றை வெறும் வாணலியில் வறுத்துக்கொள்ளுங்கள். ஆறியதும் அனைத்தையும் உப்பு சேர்த்து மிக்ஸியில் கொரகொரப்பாக அரைத்துக்கொள்ளுங்கள்.
பாத எரிச்சல்வெயில் காலத்தில் வயதானவர்களுக்கு பாத எரிச்சல் வருவது இயல்பு. இதற்குத் தினமும் இரவில் அரை பக்கெட் குளிர்ந்த நீரில் ஒரு கைப்பிடி கல் உப்பு, ஒரு கைப்பிடி எப்சம் உப்பு (கெமிக்கல் கடைகளில் கிடைக்கும்), பத்து மில்லி விளக்கெண்ணெய் விட்டு, பக்கெட் நீரில் பாதங்களை கால் மணி நேரம் ஊறவிடவும்.
விளக்கெண்ணெய் நக இடுக்கில் சென்று, பாதத்துக்கு குளிர்ச்சி தரும்.
இயற்கை முறையில் பாத எரிச்சலுக்கு நிவாரணம்(Natural relief from foot Irritation)
- மருதாணி இலைகளுடன் எலுமிச்சைச்சாறு கலந்து நன்கு அரைத்துப் பாதத்தில் பூசி அரை மணி நேரம் கழித்து சுடுநீரில் கழுவி வந்தால் பாத எரிச்சல் குறையும்.
- வெயில் காலம் வந்தாலே, பலருக்கு பாத எரிச்சல் வந்து விடும்.
- குறிப்பாக நீரிழிவுக்காரர்களுக்கு2 டீஸ்பூன் சிவப்பு சந்தனத்துடன், சிறிது பன்னீரும், 1 டீஸ்பூன் விளக்கெண்ணெயும் கலந்து, பாதத்தில் தடவிக் கொண்டு, கால்களை சற்று உயர்த்தி வைத்தபடி ஓய்வெடுத்தால்,பாத எரிச்சல் குணமாகும்.
- சோற்றுக்கற்றாழையில் உள்ள சோற்றை பாதத்தில் தடவி ஒரு மணி நேரம் கழித்து சுத்தம் செய்தால் பாத எரிச்சல் குறையும்…பாத வெடிப்பு குணமாகும்.
- பாத எரிச்சல் குணமாக.சுத்தமான சந்தனப்பொடி ஒரு கிராம் அளவு எடுத்து 20 மிலி நெல்லிச்சாற்றுடன் கலந்து தொடர்ந்து குடித்து வர நீரிழிவால் வரும் பாத எரிச்சல் குணமாகும்(Natural relief from foot Irritation).
- சுத்தமான சட்டியில் எட்டிப்பழத்தை வெதுப்பி பின் அதை தரையில் கொட்டி வெது வெதுப்பான சூட்டோடு இருக்கும் பொழுது பாதத்தில் மிதித்து பின் பாதத்தை சுத்தம் செய்தால் பாத எரிச்சல் குறையும்.
- சோற்றுக்கற்றாழையில் உள்ள சோற்றை பாதத்தில் தடவி ஒரு மணி நேரம் கழித்து சுத்தம் செய்தால் பாத எரிச்சல் குறையும், பாத வெடிப்பிலிருந்து பாதத்தை காப்போம் (Foot cracks)பாத வெடிப்பு குணமாகும்.
- பாத எரிச்சல் குணமாக சுரைக்காயின் சதையை உள்ளங்காலில் வைத்துக்கட்டபாத எரிச்சல்(Natural relief from foot Irritation) பறந்து போகும்.
மேலும் சில குறிப்புகள்
அதிகாலை எழுந்ததும் பாதங்களைகுறைந்தது பத்து நிமிடம் மசாஜ்செய்துவிடுங்கள்.வெதுவெதுப்பாக வெண்ணீர் போட்டு பக்கெட்டில் ஊற்றி, அதில் பாதங்களை இருபது நிமிடம் வைத்து இருக்கவும்.
வெண்ணீரில் கொஞ்சம் கல்உப்பும் போட்டால் நல்லது. இதனால் பாதஎரிச்சல் குறையும்.
நடைப்பயிற்சிக்கு வெளியில் செல்ல வேண்டாம். வீட்டிற்குள்ளேயோ, மொட்டை மாடியிலோ எட்டு வடிவில் இருபது நிமிடம் நடக்கலாம்.
அப்படி நடைப்பயிற்சி செய்யும் போது, சிறிய பிள்ளைகள் காரோட்டி விளையாடுவது போல்,(கார் ஓட்டும் போது ஸ்டியரிங்கை வளைப்பது போல்) கைகளை இருபுறமும் வளைக்க வேண்டும்.முக்கியமாக வெறும் காலில் எட்டுபோடவேண்டும்.
காலணிகள் சிறிது தேய்ந்து விட்டாலும் மாற்றவும்.ஏனெனில் செருப்புகள் பழசாகிவிட்டால் சிலருக்கு பாதத்தில் எறிச்சலையும், அறிப்பையும் உண்டாக்கும்.
அப்படி இருந்து சிரமப்படுபவர்கள் தொடர்ந்து பாதங்களில் இரவில் மருதாணி, மஞ்சள் தூள், எலுமிச்சைசாறு கலந்து பூசி வந்தால் பாதத்தில் எரிச்சல் நீங்கும்.