அல்சர் நோய்க்கு பாட்டி வைத்திய தீர்வுகள்( Nature remedies for Ulcers)

பாட்டி வைத்தியத்தில் அதாவது இயற்கையில் கிடைக்கும் மரம்,செடி,கொடி,இலைகளை வைத்தே அல்சரைப் போக்கும் ( Nature remedies for Ulcers) வழிமுறைகளை அறிந்து கொள்வோம்.

உடலின்  பிறப்பு முதல் இறப்பு வரை இடைவிடாமல் பல்வேறு இயக்கங்களைச் செய்து கொண்டிருக்கும் ஜீரண மண்டலத்தில் ஏற்படும் பிரதானமான பிரச்சனையே அல்சர்.

புண் இரைப்பையிலும், குடலின் ஆரம்பப் பகுதியான ட்யோடினத்திலும் (Duodenum) ஏற்படும்போது ‘அல்சர்’ எனப்படுகிறது.

உணவுகள், அதிக/தேவையில்லாமல் உட்கொள்ளும் வலி மாத்திரைகள், மன அழுத்தம் போன்றவை அல்சர்  ஏற்பட பொதுவான காரணங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.புகைபிடித்தல் அல்சர் ஏற்படும் வாய்ப்பை அதிகரிக்கிறது.

அல்சரைப் போக்கும் பாட்டி வைத்தியம் ( Nature remedies for Ulcers)

1. மணத்தக்காளி கீரையை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொண்டால் வயிற்றுப் புண் மற்றும் அல்சர் விரைவில் குணமாகும். மணத்தக்காளி கீரை வயிறு மற்றும் வாய் அல்சருக்கு மிகவும் நல்லது. எனவே அந்த கீரையை சூப் செய்தோ அல்லது பொரியல் செய்தோ வாரத்திற்கு 3 முறை உட்கொண்டு வர விரைவில் அல்சர் குணமாகும்.

அல்சரைப் போக்கும் பாட்டி வைத்தியம், Nature remedies for Ulcers,annaimadi.com,nature medicine for ulcer,ulcer,foods for ulcer,அல்சர்நோயக்கான மருந்துகள்,அன்னைமடி,அல்சருக்கான உணவுகள்,அல்சருக்கு இயற்கை மருத்துவம்

2. அல்சர் இருப்பவர்கள், தினமும் சாதத்தில் தேங்காய் பால் சேர்த்து உட்கொண்டு வர, விரைவில் வயிற்றில் உள்ள புண் குணமாகும். மேலும் கொப்பரை தேங்காயை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர குணமாகும்.  

3. பச்சை வாழைப் பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், குடல்களில் பழுதுபட்ட மெல்லிய சவ்வுத் தோல்களை விரைவில் வளரச் செய்து புண்ணை ஆற்றிவிடும்.

4. சீரகம், அதிமதுரம், தென்னம் பாளைப்பூ, சர்க்கரை சம அளவு எடுத்துப் பால்விட்டு அரைத்து, சிறு எலுமிச்சை அளவு எடுத்துப் பாலில் கலந்து பருகலாம். 

  5. பாகற்காயை விட பாகற்பழம் சிறந்தது. இதனை சமைத்து உண்ண வயிற்றில் உள்ள கிருமிகளை அழிப்பதுடன் குடல் பலம் பெறும். மலத்தை இளக்கி வெளிப்படுத்துவதுடன் பித்தத்தை தணிக்கும். 

6. வேப்பிலையை தினமும் காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் சிறிது உட்கொண்டு வர, அல்சர் மட்டுமின்றி, வயிற்று பிரச்சனைகளும் நீங்கும்.

  7. தண்டுக் கீரையில் இரும்புச்சத்தும், சுண்ணாம்புச்சத்தும் மிகுந்துள்ளதால் உடல் குளிர்ச்சியடைந்து மூலநோய் மற்றும் குடல்புண் ஆறும்.  

8. அல்சர் உள்ளவர்கள், தினமும் முட்டைக்கோஸை உணவில் சேர்த்து வந்தால், விரைவில் அல்சரை குணமாக்கலாம்.  

9. புழுங்கல் அரிசி சோற்றின் வடிகஞ்சியை வயிற்றுப் புண் உள்ளவர்கள் குடித்தால் நல்ல குணம் கிடைக்கும்.  

அல்சரைப் போக்கும் பாட்டி வைத்தியம், Nature remedies for Ulcers,annaimadi.com,nature medicine for ulcer,ulcer,foods for ulcer,அல்சர்நோயக்கான மருந்துகள்,அன்னைமடி,அல்சருக்கான உணவுகள்,அல்சருக்கு இயற்கை மருத்துவம்

10. அல்சருக்கு அகத்திக்கீரை நல்லது. தினமும் ஒரு கப் அகத்திக்கீரையை சமைத்து உட்கொண்டு வர அல்சர் சீக்கிரம் நீங்கும். அகத்திக்கீரை சூப் செய்தும் குடிக்கலாம்.

  11. துளசி இலை சாற்றில் மாசிக்காயை, வயிற்றுப் புண் உள்ளவர்கள் குடித்தால் நல்ல குணம் கிடைக்கும்.  

12. வயிற்று அல்சருக்கு மற்றொரு சிறப்பான தீர்வு நெல்லிக்காய். அதிலும் நெல்லிக்காய் ஜூஸில் தயிர் சேர்த்து கலந்து குடித்து வர நல்ல நிவாரணம் கிடைக்கும்.

  13. அத்தி மரப்பட்டை சாற்றுடன் சம அளவு பசும்பால் சேர்த்து சிறிதளவு கற்கண்டும் கூட்டி 100மிலி அளவு குடித்துவர வயிற்றுப் புண் மற்றும் வாய் புண் குணமாகும்.

  14. அத்தி இலையுடன் சம அளவு வேப்பிலை சேர்த்து தண்ணீர் விட்டு காய்ச்சி வடிகட்டி குடித்து வரவும்.  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *