வருடத்தில் ஏன் இரண்டு நவராத்திரிகள் (Navarathri Fasting)

நவராத்திரி (Navarathri Fasting) வருடத்தில் இரண்டு முறை கொண்டாடப்படுகிறது என்பது நம்மில் பலருக்கும் தெரியாது. குளிர் கால தொடக்கத்தில் (செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களின் இடைப்பட்ட காலத்தில்) கொண்டாடப்படும் அஷ்வினா நவராத்திரியை தான்பலரும் அறிந்திருப்போம்.

கோடைக்கால தொடக்கமான மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களின் இடைப்பட்ட காலத்தில்  கொண்டாடப்படும் மற்றொரு நவராத்திரியான (Navarathri) சைத்ர நவராத்திரியை (Navarathri) பற்றி வெகு சிலருக்கே தெரியும். 

இந்த இரண்டு நவராத்திரிகளுமே (Navarathri) துர்கை, பார்வதி என பல இடங்களில் பல விதமாக அழைக்கப்படும்  தாயான சக்தி தேவிக்காக கொண்டாடப்படுகிறது.

நவராத்திரியை ஒன்பது நாட்களுக்கு கொண்டாடுவதற்கும். வருடத்தில் இரண்டு தடவை கொண்டாடுவதற்கும் சில முக்கியமான காரணங்கள் உள்ளது. ஆன்மிகம், இயற்கை மற்றும் புராண காரணங்கள் இதில் அடக்கம். இந்த அனைத்து காரணங்களால் தான் நவராத்திரி ஒவ்வொரு வருடமும் இரண்டு முறை கொண்டாடப்படுகிறது.

காலநிலை மாற்றத்தின் போது தான் இரண்டு நவராத்திரியும் கொண்டாடப்படுகிறது என்பதை கூர்ந்து கவனித்தால் புரியும். கோடை மற்றும் குளிர் காலம் தொடங்குவதற்கு சற்று முன்பாக தான் இயற்கை அன்னை பெரிய மாற்றங்களுக்கு உள்ளாவார்.

அதனால் தான் அதனை கொண்டாடும் விதமாக, இயற்கையாக கருதப்படும் சக்தி தேவியை வழிபட்டு நவராத்திரி கொண்டாடப்படுகிறது.

நவராத்திரி (Navarathri Fasting) ஏன் கொண்டாடப்படுகிறது?

‘நவ’ எனில் ஒன்பது; ‘ராத்ரீ’ எனில் இரவு. ஆக ‘நவ ராத்ரீ’ (நவராத்தி ரி) எனில், 9 இரவுகள் கூடிய நாட்கள். ‘நவ’ எனில் ‘புதுமையான’ என்றும் பொருள் உண்டு. இந்த நாட்களில் நாம் கடைப்பிடிக்கும் பூஜைகளினால் நமக்குப்

புதுமையான புத்துணர்ச்சி கிடைக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.

அதுமட்டுமா? நவகிரகங்களினால் ஆபத்து ஏற்படாமல் இருக்க இந்த நவராத்திரி காலங்களில் அனைவரும் அம்பிகை யை வழிபடுதல் வேண்டும்.

அவள் தானே உலகுக்கெல்லாம் மூலகரு (‘விச்வஸ்ய பீஜம்’) அவளை வழிபடுவதால், நம் உலகம் என்றில்லை. இந்த பிரபஞ்சம் முழுக்க வாழும் அனைத்து ஜீவராசிகளுக்கும் நன்மை உண்டாகும் என்பது நிச்சயம்.

பகல் மற்றும் இரவின் நீளம் பகல் மற்றும் இரவின் நீளம் விஞ்ஞானத்தின் படி, மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களுக்கு நடுவே உள்ள நாட்களிலும், செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களுக்கு நடுவே உள்ள நாட்களிலும், பகல் மற்றும் இரவின் நீளம் சரிசமமாக இருக்கும்.

அதனால் கோடைக்காலம் மற்றும் குளிர்காலம் தொடங்கும் வேளையில் சரியாக நவராத்திரி கொண்டாடப்படுகிறது என்பது விஞ்ஞான ரீதியாக புலப்படுகிறது.

இரண்டு நவராத்திரிகளும் காலநிலை இனிமையாக இருக்கும் போது கொண்டாடப்படுகிறது. கொளுத்தும் வெயிலையும் அனுபவிக்க தேவையில்லை.

அதே போல் உறைய வைக்கும் குளிரையும் அனுபவிக்க தேவையில்லை.

 

வியாச‌ர் கூறிய இரண்டு ந‌வராத்திரிகள்

அகில உலகங்களையும் படைத்து ரட்சிக் கும் ஜகன் மாதாவான பராசக்தி, கருணை கொண்டு உயிர்களுக்கெல்லாம் அருட்கடாட்சம் அற்புதமான காலம் தான் நவராத்திரி.

ஸ்ரீமத் தேவிபாகவத புராணத்தில், ஸ்ரீவியாச முனிவரிடம் நவராத்திரி காலத்தின் மகத்துவத்தையும், அந்த

விரதத்தை அனுஷ்டிக்கும் விபரங்களையும் கேட்கிறான் ஜனமஜேயன்.

அதற்கு வியாச மகரிஷி, ‘நவராத்திரி இரண்டுவகை. ஒன்று வஸந்த ருதுக் காலத்தில் (சித்திரை மாதம் அமாவாசைக்கு பிறகு 9 நாட்கள்) கொண்டாடப்படும் வஸந்த நவராத்திரி(Navarathri Fasting).

மற்றொன்று சரத் காலத்தில் (புரட்டாசி அமாவாசை க்குப் பிறகு 9 நாட்கள்) கொண்டாடப்படும் சரத் நவராத்திரி’ என்று விளக்குகிறார்.

இந்தக் காலங்களில் நோய்கள், இயற்கை சீற்றங்கள், மனக்குழப்பங்கள் போன்றவையும் ஏற்படலாம் என்பதால் புத்திமான்களும், நல்லதையே விரும்புபவர்களும் சண்டிதேவியை ஆராதனம் செய்யவேண்டும் என்று வியாசர் கூறுகிறார்.

நவராத்திரி (Navarathri Fasting) வழிபாடு செய்யும் வழிமுறைகளை தேவி பாகவதம் நமக்கு அழகாகச் சொல்லித் தருகிறது.

புரட்டாசி அமாவாசை அடுத்த பிரதமை துவங்கி 9 நாட்கள் நவராத்திரி அனுஷ்டிக்க வேண்டும்.பலவிதமான பழரசங்கள், இளநீர், மாதுளை, வாழை, மா, பலா முதலானவற்றையும், அன்னத்தையும் (சித்ரான்னங்கள்) நைவேத்தி யம் செய்து வழிபட வேண்டும்.

நவராத்திரி விரத பலன்கள் (Benefits of Navarathri Fasting)

நவராத்திரி விரதத்தைப் (Navarathri Fasting) போன்று எளிமையானதும் அதேநேரம் மிகுந்த பலன்களைத் தரக்கூடியதுமான வேறு விரதங்கள் இல்லை என்கின்றன புராணங்கள்.

எவரொருவர் இந்த விரதத்தைத் தொடர்ந்து 9 நாட்கள் கடைப்பிடிக்கிறார்களோ, அவர்களுக்கு தேவர்களுக்கும் கிட்டாத இன்பமும், பிணியின்மையும் வரமாகக்கிட்டும். சத்ருக்கள் தொல்லையும் நீங்கும்.

தனம், தானியம், நிலையான இன்பம், நீண் ட ஆயுள், ஆரோக்கியம், ஸ்வர்க்கம், மோட்சம் என ஒரு மனிதனுக்கு வேண்டிய அனைத்தை யும் தரக்கூடிய விரதம் நவராத்திரி விரதம்.

குழந்தைப்பேறு இல்லாதவர்களுக்கு நிச்சயம் குழந்தை பாக்கியம் கிட்டும் . படிப்பில் மந்தமாக இருப்பவர்கள் இந்த விரதத்தைக் கடை ப்பிடிப்பதால், உயர்ந்த நிலையை அடையலாம்.

ஒன்பது நாட்களும் வழிபட இயலாதவர்கள் அஷ்டமியன்று துர்கையை வழிபட்டு அன்று இரவு விழித்திருந்தால், அவர்களின் வாழ்க்கையை துர்காதேவியானவள் காப்பாள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *