நவராத்திரியில் கொலுவழிபாடு ஏன்? (Navarathri Golu)

மனிதன் படிப்படியாக தன் ஆன்மிக சிந்தனைகளை வளர்த்து, இறுதியாக இறைவனுடன் கலக்க வேண்டும் என்ற தத்துவத்தை உணர்த்துவதற்காகவே, கொலுவில்  (Navarathri Golu) படிகள் அமைக்கப்பட்டு, அதில் பொம்மைகள் அடுக்கி வைக்கப் படுகின்றன.

நவராத்திரியின் சிறப்பு அம்சம் கொலு(Navarathri Golu) வைப்பதே ஆகும். கொலு என்பது பல படிகளை கொண்ட மேடையில் பலவித பொம்மைகளை நேர்த்தியாக அலங்கரித்து வைப்பது என்பது பொருளாகும்.

ஐம்பூதங்களில் ஒன்றான மண்ணினால் செய்யப்பட்ட பொம்மைகளை சக்தியின் அம்சங்களாக எண்ணி நவராத்திரியில் பூஜிப்பவர்களுக்கு சகல நலங்களையும் அம்பிகைதருவாள் என்பது நம்பிக்கை.

நவராத்திரியில் வீட்டில் வைக்கப்படும் கொலு மேடையானது, 9 படிகள் கொண்டதாக அமைக்கப்பட்டு இருக்க வேண்டும். இந்த ஒவ்வொரு படிகளும் ஒவ்வொரு தத்துவத்தை மிக எளிதாக சொல்லிச் செல்கின்றன.

அன்னைமடி,நவராத்திரி விழா,நவராத்திரி கொலு ,நவராத்திரி கொலு ஏன்,சரஸ்வதி பூஜை கொலு,கொலு தத்துவம்,annaimadi.com,navarathri golu,why navarathri golu,golu pommaikal

நவராத்திரியில் வீட்டில் வைக்கப்படும் கொலு மேடையானது, 9 படிகள் கொண்டதாக அமைக்கப்பட்டு இருக்க வேண்டும். இந்த ஒவ்வொரு படிகளும் ஒவ்வொரு தத்துவத்தை மிக எளிதாக சொல்லிச் செல்கின்றன.

நவராத்திரி கொலு ‘ஐம்பூதங்களில் ஒன்றான மண்ணால் ஆன பொம்மையால் என்னை பூஜித்தால், பூஜிப்போருக்கு சகல சுகங்களையும், சௌபாக்கியங்களையும் அம்பிகை அளிப்பாள்’ என்று தேவி புராணத்தில்  கூறப்பட்டுள்ளது.

அதன்படி செயல்பட்டு வெற்றிபெற்றவன், சுரதா என்ற மன்னன். அவன் ஒரு முறை தன்னுடைய எதிரிகளை அழிப்பதற்காக, தன் குருவிடம் ஆலோசனை கேட்டான்.

அதற்கு அவனது குரு, “தூய்மையான களிமண்ணைக் கொண்டு காளியின் சொரூபத்தைச் செய்து, உண்ணாவிரதம் இருந்து வழிபாடு செய்தால் உன்னுடைய எண்ணம் நிறைவேறும்” என்று கூறியருளினார்.

அன்னைமடி,நவராத்திரி விழா,நவராத்திரி கொலு ,நவராத்திரி கொலு ஏன்,சரஸ்வதி பூஜை கொலு,கொலு தத்துவம்,annaimadi.com,navarathri golu,why navarathri golu,golu pommaikal

அதன்படியே ஆற்றுக் களிமண்ணைக் கொண்டு காளி ரூபத்தைச் செய்தான். அதை பிரதிஷ்டை செய்து உண்ணாவிரதம் இருந்து காளி தேவியை வேண்டினான் சுரதா மன்னன். அந்த வேண்டுதலின் பயனாக அந்த மகாராஜா தன் பகைவர்களை அழித்து, பின் ஒரு புதுயுகத்தையே உண்டு பண்ணினான்.

எனவே அம்பிகைக்கு பிடித்த பொம்மைகளைக் கொண்டு கொலு வைத்து வழிபாடு செய்வது, நவராத்திரி வழிபாட்டின் முக்கிய அங்கமாக இடம்பெற்றுள்ளது.

அன்னைமடி,நவராத்திரி விழா,நவராத்திரி கொலு ,நவராத்திரி கொலு ஏன்,சரஸ்வதி பூஜை கொலு,கொலு தத்துவம்,annaimadi.com,navarathri golu,why navarathri golu,golu pommaikal

கொலுமேடை அமைக்கும் ஒழுங்கு (Navarathri Golu)

1 வது படி – ஓரறிவு உயிரினம் (மரம், செடி, கொடி, புல்,மர பொம்மைகள்).
2 வது படி – இரண்டறிவு உயிரினம் (நத்தை, சங்கு, ஆமை பொம்மைகள்).
3 வது படி – மூன்றறிவு உயிரினம் (எறும்பு, கரையான் பொம்மைகள்).
4 வது படி – நான்கறிவு உயிரினம் (நண்டு, வண்டு, பறவை பொம்மைகள்).
5 வது படி – ஐந்தறிவு உயிரினம் (ஆடு, மாடு, சிங்கம், புலி, நாய் பொம்மைகள்).
6 வது படி – ஆறாவது அறிவு கொண்ட மனிதர்கள் (மனித பொம்மைகள்).
7 வது படி – மனித நிலையிலிருந்து உயர் நிலையை அடைந்த சித்தர்கள், ரிஷிகள், மகரிஷிகள் (ரமணர், வள்ளலார்)
8 வது படி – தேவர்கள், பஞ்சபூத தெய்வங்கள்,அட்டதிக்கு பாலகர்கள், நவக்கிரக அதிபதிகள், தேவதைகள் 
9 வது படி –  பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய முப்பெரும் தேவர்கள், சரஸ்வதி, லட்சுமி, பார்வதி தேவி போன்ற    முப்பெரும் தேவிகள் ஆகிய தெய்வங்களையும், அவர்களின் நடுவில் நடுநாயகமாக ஆதிபராசக்தியின் உருவ   பொம்மையையும் வைத்து ஒன்பதாவது படியை நிறைவு செய்ய வேண்டும்.
 
அன்னைமடி,annaimadi.com,
 
இம்முறைப்படி கொலு வைத்து, முப்பெரும் தேவியரை வணங்கி வரும் போது கல்வி, செல்வம், வீரம் இம்மூன்றும் நம்மிடம்  செழித்தோங்கும் என்பதில் ஐயமில்லை.

அன்னைமடி,சரஸ்வதி பூஜை கொலு,கொலு தத்துவம்,annaimadi.com

கொலுமேடை(Navarathri Golu) 9 படிகள் கொண்டதாக அமைப்பது சிறப்பு. சிலர் 5, 7, 9, 11 என வசதிக்கு ஏற்ப படி அமைத்து கொலு பொம்மைகளை அலங்கரிப்பார்கள்.

Leave a Reply

Your email address will not be published.