தொப்புள் பற்றி வியப்பூட்டும் தகவல்கள் (Surprising facts about the Navel)

நம் தொப்புள் (Navel) என்பது நமக்குகிடைத்துள்ள அற்புத பரிசு. அறிவியல் படி, கருவுற்றவுடன் முதல் அணு உருவாகும் இடம் தொப்புள் தான்.

தொப்புள் உருவானவுடன், அது தாயின் நஞ்சுக்கொடியுடன் தொப்புள் கொடி மூலம் இணைக்கப்படுகிறது.

ஒரு மனிதன் இறந்தவுடன் 3 மணி நேரத்திற்கு தொப்புள் வெதுவெதுப்பாக இருக்குமாம்.

காரணம் ஒரு பெண் கருவுற்றதும், பெண்ணின் தொப்புள் மூலம் குழந்தையின் தொப்புள் வழியாக கருவிலுள்ள குழந்தைக்கு ஊட்டச்சத்து வழங்கப்படும்.

முழுமையாக ஒரு கரு குழந்தையாக உருவாவதற்கு 270 நாட்கள் ஆகின்றன.

நமது உடம்பில் உள்ள அனைத்து நரம்புகளும் தொப்புளுடன் இணைவதற்கு இதுவே காரணம்.

தொப்புளே (Navel) நமது உடம்பின் குவியப்புள்ளி. அதுவே உயிரும் கூட. தொப்புளுக்குப் பின்னால் 72000 க்கும் அதிகமான நரம்புகள் உள்ளன. நமது உடம்பில் உள்ள இரத்தத்தட்டுகளின் எண்ணிக்கை புவியின் இரு மடங்கு சுற்றளவிற்குச் சமம். 

தாயையும் குழந்தையையும் குறிக்கும் ஒரு அளவு கோளாக கூட இதனை கருதலாம்.
தொப்புளில் பல வகையான பாக்டீரிகள் வாழ்கின்றன.
கிட்டத்தட்ட 2,400 வகையான பாக்டீரியாக்கள் தொப்புளில் இருப்பதாக ஆராய்ச்சிகள் சொல்கின்றது. இவை நம் உடலில் உள்ள சில பாகங்களை போன்றே சுத்தம் செய்யாமல் இருப்பதால் ஏற்படுகின்றது.
அக்குபுஞ்சர் முறையிலும் தொப்புள் முக்கிய இடத்தை பிடித்துள்ளது. உடல் பிணிகளை போக்குவதில் தொப்புளின் பங்கு இன்றியமையாதது ஆகும்.
உடலின் செயல்பாட்டை குறிக்கின்ற முக்கியமான 7 சக்கரங்களில் இதுவும் ஒன்று. இதனை மருத்துவ முறையில் முக்கிய பாகமாக கருதுகின்றனர்.

தொப்புளில் எண்ணெய் போடுவது ஏன்? (Why put oil on the navel?)

கண்கள் வறட்சி, குறைந்த கண்பார்வை, கணையம் சீரற்றத் தன்மை, குதிகால் மற்றும் உதடு வெடிப்பு, முகப் பொலிவின்மை, பளபளப்பான முடியின்மை, மூட்டுவலி, நடுக்கம், உடல் சோர்வு, முழங்கால் வலி, வறண்ட சருமம் ஆகியவைகளில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.

கண்கள் வறட்சி நீங்க குறைந்த பார்வை சரியாக பளபளப்பான தலைமுடி பெற மெருகூட்டப்பட்ட சருமம் பெறஇரவில் படுக்கைக்குச் செல்லும் முன் 3 துளி சுத்தமான நெய் அல்லது தேங்காய் எண்ணெய் தொப்புளில் விட்டு ஒன்றரை இன்ச்  அளவிற்கு தொப்புளைச் சுற்றி பரவவிடவும்.

முழங்கால் வலி  குணமடைய

இரவில் படுக்கைக்குச் செல்லும் முன் 3 துளி விளக்கெண்ணெய் தொப்புளில் (Navel) விட்டு ஒன்றரை இன்ச் தொப்புளைச் சுற்றி பரவவிடவும்.

நடுக்கம் மற்றும் சோர்வு, மூட்டுவலி மற்றும் வறண்ட சருமத்திலிருந்து நிவாரணம் பெற

இரவில் படுக்கைக்குச் செல்லும் முன் 3 துளி கடுகு எண்ணெய் தொப்புளில் விட்டு ஒன்றரை இன்ச் தொப்புளைச் சுற்றி பரவவிடவும்.

தொப்புளில் எண்ணெய் விடுவதால் உடலின் எந்த நரம்பில் இரத்தம் வறண்டு உள்ளதோ அதனை உங்கள் தொப்புளால் கண்டுபிடிக்க இயலும்.

அதனால் தொப்புள் அந்த எண்ணெயைக் குறிப்பிட்ட வறண்ட நரம்பிற்கு அனுப்பி திறக்கச் செய்கிறது.

சிறு குழந்தைக்கு வயிறு வலியென்றால், பெரியவர்கள் காயப்பொடியுடன் தண்ணீர் அல்லது எண்ணெய் கலந்து தொப்புளை சுற்றி தடவுவது வழக்கம்.சில நிமிடங்களில் குணமாகும். எண்ணெயும் அவ்வாறே வேலை செய்கிறது.

அந்த வகையில் ஒரு சிசுவையும் தாயையும் இணைக்கும் பந்தமாக இருப்பது தொப்புள் கொடிதான். குழந்தை பிறந்த பிறகு இதனை நீக்கி விட்டாலும், அந்த வடுவை நாம் அழிக்க முடியாது.
ஏனெனில் அது தான் தொப்புள் என்ற ஒன்றாக நம்முடனே இறுதி வரை இருக்கும்.
நம் உடலில் எண்ணற்ற வடுக்கள் இருக்கத்தான் செய்யும். ஆனால், அவை அனைத்தும் நாம் விழும் போதோ, விளையாடும் போதோ ஏற்பட்டவை. ஆனால், நம் உடலின் இயற்கையாகவே ஏற்பட்ட முதல் தழும்பு இந்த தொப்புள் (Navel) தான்.
 
இன்றைய மருத்துவத்தில் பல வித முறைகளை நாம் பின்பற்றினாலும், பண்டைய கால மருத்துவம் எப்போதும் சிறப்பு பெற்றதாக தான் குறிப்பிடப்பட்டுள்ளது.
இன்றுதான் “ஸ்டெம் செல்” முறை என்பதை நவீன மருத்துவம் பயன்படுத்துகிறது.
ஆனால், பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே இந்த முறையை நம் முன்னோர்கள் பின்பற்றி வந்தனர். தொப்புள் கொடியை தாயத்தில் கட்டி வைத்து அதனை உயிருக்கு ஆபத்தான நிலைகளில் உபயோகித்தனர். 

சரியான தொப்புள் எது?

தொப்புளின் வடிவம் ஒவ்வொருவருக்கும் பல வகைகளில் மாற்றம் பெறும். அந்த வகையில் இவை வெளி தொப்புள், உள் தொப்புள் என இரு வகையாக பிரிக்கின்றனர்.
ஆனால், T வடிவ தொப்புள் சரியான தொப்புள் என்று ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிடுகின்றனர்.
வெளி தொப்புள்… பொதுவாக தொப்புள் பல விதமாக வகை படுத்தப்படுகிறது.
 

Leave a Reply

Your email address will not be published.