கழுத்து பராமரிப்பு (Neck care)
கழுத்தில் ஏற்படும் கருமை, சுருக்கம், தோல் தளர்ச்சி , சரும வரட்சி போன்றன கழுத்தின் அழகைக் கெடுக்கின்றன.
அவற்றை நீக்கும் (Neck care) எளிய முறைகளை இங்கே பார்ப்போம்.
கழுத்தில் கருவளையம் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. சில சத்துக் குறைபாடுகள், ஹார்மோன்களில் ஏற்படும் மாற்றம் , வெயிலில் அதிக நேரம்நிற்பது, தங்கம் அல்லது வெள்ளி நகைகள் அணிவது போன்ற காரணங்களால் சிலருக்கு கழுத்து கறுப்பாக மாறுகிறது.
கழுத்து பராமரிப்பிற்கான குறிப்புகள் (Neck care tips)
சிறிதளவு ரோஸ் வாட்டர், சிறிதளவு வெங்காய சாறு இரண்டு சொட்டு ஒலிவ் ஆயில் (Olive oil) மற்றும் பயத்த மாவு ஆகியவற்றை கலந்து கழுத்தில் தடவி ஒரு பத்து நிமிடம் கழுத்திலிருந்து தாடையை நோக்கி லேசாக மசாஜ் செய்துவிடுங்கள்.
இவ்வாறு தொடர்ந்து செய்ய நாளடைவில் உங்கள் கழுத்து பகுதியில் இருக்கும் கருப்பு நிறம் மாறி பளப்பளப்பாக காணப்படும்.
சிறிதளவு ரோஸ்வாட்டர் (Rose water), சிறிது வெங்காயச்சாறு, ஒலிவ் எண்ணெய் இரண்டு சொட்டு, இவற்றுடன் சிறிதளவு பயத்தம் மாவு கலந்து கறுப்பாக உள்ள இடத்தில் லேசாக மசாஜ் செய்து வந்தால் கழுத்தில் இருக்கும் கறுப்பு சிறிது சிறிதாக மறைய தொடங்கும்.
தயிரை கையில் எடுத்து கழுத்து பகுதியில் மெதுவாக தேய்த்து ஊறவைக்கவும். பின்னர் 5 நிமிடம் கழித்து சுடுதண்ணீரில் கழுத்து பகுதியை அழுத்தி துடைக்கவும்.இவ்வாறு செய்வதாலும் கழுத்தில் இருக்கும் கறுப்பு மறையும்.
வெள்ளரிச்சாறை கழுத்தில் அடிக்கடி தேய்த்து வந்தால் வறண்டு போன கழுத்து ஈரப்பதத்துடன் ஜொலிக்கும்.
கோதுமை மாவு, ஓட்ஸ் பவுடர், பாசிப்பயறு மாவு மூன்றையும் சம அளவு கலந்து பாலுடன் சேர்த்து கலவை ஒன்றை செய்து கொள்ளுங்கள்.
அதனை கறுப்பாக உள்ள இடத்தில் தேய்த்து, சிறிது நேரத்தில் குளிர்மையான நீரினால் கழுவ கழுத்திலுள்ள கருமை நீங்கும்.
கோதுமை மாவில் வெண்ணையை கலந்து கழுத்தைச் சுற்றிப் பூசி வர வேண்டும்.. பின் 20 நிமிடங்கள் கழித்துக் குளிக்கவும். இப்படி தொடர்ந்துதினமும் செய்து வந்தால் கழுத்தில் உள்ள கருவளையம் படிப்படியாக மறைந்து விடும்.
சிறிது சூடாக்கப்பட்ட நல்லெண்ணெய்யினால் கழுத்துப் பகுதியில் மசாஜ் செய்தால் கழுத்து பகுதியில் உள்ள சுருக்கம், கறுப்பு வளையம் படிப்படியாக நீங்கி விடும்.
கழுத்துப் பகுதிகளில் உள்ள கருமையை போக்கும் (Neck care) வழிகளை அறிய வீடியோவைப் பார்க்கவும்.
கழுத்து தசை தொய்ந்து தளர்வாகி வயதான தோற்றத்தை ஏற்படுத்தும். மனதில் விரைவில் வயதாகிவிட்டதாக எண்ணம் தோன்றி ஒரு வித பயத்தை ஏற்படுத்தும்.
கழுத்து சருமத்தை இறுக்குவதற்கான பயிற்சிகள் மூலம் ,இதை சரிப்படுத்தி உங்கள் பழைய தோற்றத்தை பெற்றுக் கொள்ளலாம்.
சூடான எண்ணெய் மசாஜ்
சூடான எண்ணெயால் மசாஜ் செய்வதால் , கழுத்திலுள்ள சுருக்கங்கள் ,வறட்சி,தளர்ச்சி போன்றன சரி செய்யப் படுகிறது.
இது தளர்வான சருமத்தை மீண்டும் நிரப்பி, ஈரப்பதமாகவும், மிருதுவாகவும் மென்மையாகவும் இருக்க வைக்கின்றது.
இப்படி மசாஜ் செய்வதால் சருமத்திலுள்ள செல் கள் புதுப்பிக்கப்படுகின்றன. இதன் காரணமாக, கழுத்தின் தோல் முன்பை விட இறுக்கமாகிறது.