கழுத்துவலிக்கு மூலிகை வைத்தியம் (Neck pain)
மனிதனை பாடாய்ப்படுத்தும் வலிகள் பல. அதிலும் இந்த கழுத்துவலி (Neck pain) இருக்கிறதே..! அது வந்து அதை அனுபவித்து பார்த்தவர்களுக்கே தெரியும்.
உட்காரும், நிற்கும் நிலைகள் தவறாக இருந்தால், முதுகெலும்பு பகுதியும் பாதிக்கப்படலாம். முதுகெலும்பில்
இப்படி நேரும் போது நரம்புகள் அழுத்தப்படும் அல்லது முதுகெலும்பு அமுக்கப்படும். இத்தகைய பிரச்னையில் எலும்புகளை விட நரம்புகளின் பாதிப்புதான் பிரதானமாக இருக்கும்.
அழுத்தமோ, சிரமமோ தராதவகையில் கழுத்தை வைத்துக்கொள்ள வேண்டியது முக்கியம். போன் பேசியபடி வண்டி ஓட்டுவது, கழுத்துக்கும் தோள்பட்டைக்கும் இடையில் மொபைலை வைத்தபடி வேலை செய்வது போன்றவற்றால் நரம்புகள் அதிக அளவில் இழுக்கப்படும்.
அதனால் கழுத்தில் வலி (Neck pain) வரலாம். இத்தகைய செயல்களைத் தவிர்ப்பது தான் வலிக்கான முதல் சிகிச்சை.
பத்து, பதினைஞ்சு வருசத்துக்கு முன்னாடி கழுத்துவலி வந்திச்சி. தெரிஞ்ச டாக்டர்கிட்ட போய் பார்த்தேன். கழுத்து எலும்பு தேஞ்சிருக்கு. சில எக்சசைஸ் பண்ணினா சரியாயிடும்னு சொன்னார். எலும்பு தேயுற அளவுக்கு நான் ஒண்ணும் பெரிய வேலை பார்க்கல.
ஆனா அடுத்து வந்த நாட்கள்ல இதே கழுத்து வலி வந்திச்சி. அதை இப்போ புரிஞ்சிகிட்டேன். தலையணை வைத்து தூங்கும் பழக்கம் உள்ளவங்களுக்கு பெரும்பாலும் இந்த கழுத்து வலி இருக்குறதா கேள்விப்பட்டிருக்கேன். ஆகவே கழுத்து வலி வந்தா முதல்ல தலையணை வச்சி தூங்குறத நிறுத்துங்க.
கழுத்துவலி ஏற்படக் காரணம் என்ன? (What causes neck pain?)
பெரும்பாலும் சரியான நிலைகளில் உட்காராதது, நிற்காதது, டிவி மற்றும் கம்ப்யூட்டர்போன்ற டிஜிட்டல் திரைகளைப்(Digital screen) பாவனையின் போது கழுத்தை சரியாக வைத்துக்கொள்ளாதது போன்ற காரணங்களாலேயே கழுத்துவலி (Neck pain) ஏற்படுகிறது.
நம் உடலில் கழுத்து மிக முக்கியமான ஒரு பகுதி. மூளையிலிருந்து கைகளுக்குச் செல்லும் நரம்புகள் எல்லாமே கழுத்துப் பகுதியில் தொடங்கும் முதுகெலும்பு இடைவெளி வழியேதான் வரும்.
கைகளுக்குச் செல்லும் அந்த நரம்புகள் மிக முக்கியமானவை. அதே போன்ற ஒருபகுதி நரம்புகள் கால்களுக்கு வரும். இந்த இரண்டு பகுதி நரம்புகளுமே மிக முக்கியமானவை.
கழுத்தெலும்பு மிக மென்மையாக இருக்கும். நரம்புகள் வரும் அந்த இடைவெளியும் சிறியதாக இருக்கும்.
எனவே, ஒருவர் அசாதாரண நிலைகளில் (posture) கழுத்தை வைத்துக்கொள்ளும் போது அந்த நரம்புகள் அழுத்தப்படும். மனித உடலில் முக்கியமான முதுகெலும்புப் பகுதிகூட கழுத்திலிருந்து தொடங்கி தான் கீழ்நோக்கிப் போகும்.
கழுத்துவலிக்கு மூலிகை தீர்வு (Herbal remedy for neckpain)
- மென்மையான மெத்தையில் உறங்காமால் சமதரையில் பாய் விரித்து தூங்குவது சிறந்தது.
- நொச்சி இலையை நல்லெண்ணையில் போட்டு காய்ச்சி அதை தலைக்கு தேய்த்து அரை மணி நேரத்தின் பின் வெந்நீரில் குளிக்கவும்.
- ஒருநாள் நொச்சி இலை குளியல் என்றால் அடுத்த நாள் வாதமடக்கி (வாத நாராயணன்) இலை,மறுநாள் யூகலிப்டஸ் இலையை கொதிக்க வைத்து குளிக்கலாம்.
காலை டிபனுக்கு முடக்கத்தான் இலையை இட்லி, தோசை மாவில் கலந்து சாப்பிட நல்ல பலன் கிடைக்கும் . - மத்தியான வேளையில மிளகு ரசம் அல்லது கண்ட திப்பிலி ரசம் வச்சி சாப்பிடுங்கள். முடக்கத்தான் ரசமும் சாப்பிடலாம். பூண்டு, மிளகு குழம்பு சாப்பிடலாம். கடல் நண்டு கிடைச்சா இஞ்சி பூண்டு காரமா சேர்த்து சாப்பிடலாம்.
- ராத்திரி வேளையில நறுக்குமூலத்தை (கண்டதிப்பிலி) இடிச்சி பால், தண்ணி சேர்த்து வேக வச்சி பனங்கல்கண்டு அலல்து சர்க்கரை சேர்த்து சாப்பிடுங்கள்.
கழுத்துவலி தானாக போய்விடும். உடம்பு வலி, கை-கால் அசதி இருந்தாலும் இதே மாதிரி வைத்தியம் செய்யலாம். நல்ல பலன் கிடைக்கும்.