கழுத்துவலிக்கு காரணமும் தீர்வும் (Neck pain)
பணிச்சூழல் காரணமாகவும் , வாழ்க்கை முறை மாற்றம் காரணமாகவும் அதிகமானோர் கழுத்துவலி (Neck pain) , முதுகுவலியால் வருந்துவது, சாதாரண விடயமாகி விட்டது. இது வயது வித்தியாசமின்றி எல்லோரையும் பாடாய்ப் படுத்துகிறது.
கழுத்துவலி ஏற்பட காரணம்
கழுத்து வலிக்கு முக்கிய காரணம், சரியான முறையில் அமரும் பழக்கம் இல்லாதது தான். தவறான முறையில் அமர்ந்திருப்பது, நமக்கே தெரியாமல் நிகழ்ந்து விடுகிறது.
குனிந்தபடி அதிக நேரம் வேலை பார்ப்பது, படுக்கையில் படுத்தபடி புத்தகம் படிப்பது கூட, வலியை ஏற்படுத்தி, கழுத்தைப் பதம் பார்த்து விடும்.
தூங்கும் போது சரியான நிமுறையில் படுக்காமல் இருந்தாலும், கழுத்து வலி ஏற்படும். சில வேளைகளில் எம்மை அறியாமல் ஒரே பக்கமாக படுத்திருப்போம்.
சில தலையணைகளும் நமது கழுத்துக்கு பொருந்தாமல் நோவை ஏற்படுத்தும்.
இயற்கை இறகால் ஆன தலையணைகள் மிகச் சிறந்தவை. அவை தான், கழுத்து, தலைக்கு ஏற்றவாறு வளைந்து கொடுக்கும் தன்மை கொண்டவை.
முக்கியமாக கார் ஓட்டும் போது சரியான முறையில் அமர்வது அவசியம். சாலையில் பார்வை நன்றாகப் படும் வகையிலும், கழுத்தை அதிகமாக வளைக்காத வகையிலும் அமர, உங்கள் சீட்டை சரிசெய்தல் வேண்டும்.
மொபைல் போன்,லப்டப்,ரப்லேட் போன்ற நவீன டிஜிட்டல் ஸ்க்ரீன் பாவனை அதிகரித்திருப்பது.அதாவது ஆர்வமிகுதியால் குனிந்தபடி, குழந்தைகள் கூட மொபில்களைபாவிக்கின்றார்கள்.
கம்ப்யூட்டர் முன், மணிக் கணக்காக அமர்ந்து பணிபுரிவோர், கழுத்தை சாதாரண நிலையில் வைத்து அமர்வது தான் நல்லது.
தையல் வேலைகள் ,கேக் டிசைன் மற்றும் இது போன்ற அநேகமான கைவேலைகளில் அதீத கவனம் செலுத்தும்போது, கழுத்தை முன்னோக்கி நகர்த்தி வைத்துக் கொள்கின்றனர்.நெடுநேரம் இப்படி வைத்திருந்தால், கழுத்தில் வலி ஏற்படும்.
நாள்பட்ட இந்த பழக்கம், கழுத்து நரம்புகளில் பாதிப்பை ஏற்படுத்தி விடும். நீங்கள் அடிக்கடி பாவிக்கும் மேசை , கதிரை,கொம்பியூட்டர் ஆகியவற்றை சரியான கோணத்தில் வைத்திருப்பது அவசியம். இதன் மூலம் வேலை செய்யும் போடு கழுத்தை சரியான முறையில் வைத்திருக்க வழி கிடைக்கும்.
கழுத்தை முன் பக்கமாக நீட்டுவதைத் தவிர்ப்பதற்கு , கம்ப்யூட்டர் மானிட்டரை அருகில் வைத்துக் கொள்ளுங்கள். வெகு அருகில் வைத்துக் கொல்வதும் கண்களுக்கு நல்லதல்ல.அ
கழுத்து வலிக்கு (Neck pain) தீர்வு
இடுப்புக்கு சற்றே கீழாக முட்டி இருக்குமாறு அமர வேண்டும். நாற்காலியின் கைப்பிடியில் கைகளை வைத்திருப்பது நல்லது.நாற்காலியின் கைப்பிடி மீது கை வைத்து அமர்வதால் நிமிர்ந்து அமரும்நிலை ஏற்படும்.
கார் ஓட்டும் போதும், சரியான முறையில் அமர்வது அவசியம்.
கழுத்தை அதிகமாக வளைக்காத படி , சீராக இயக்கும் வகையில், காரின் இருக்கையை சரிசெய்து கொள்ளவும்.
கழுத்தில் ஐஸ் கட்டி, சூடுநீர் ஒத்தடம் ஆகியவற்றை, செய்து கொள்ளவது வலியைக் குறைக்கும்.
ஐஸ் கட்டி ஒத்தடம் கொடுப்பதற்கு மருத்துவ நிபுணர்களும் பரிந்துரைக்கின்றனர்.
கழுத்தை சாதாரண நிலையில் எப்போதும் வைத்திருந்தால் போதும். கழுத்துவலி வர வாய்ப்பில்லை.
ஒரே கோணத்தில், வெகு நேரம் அமர்ந்திருப்பதையும் தவிர்க்க வேண்டும். வெகு நேரம் அமர நேர்ந்தால், சரியான முறையில் அமர்ந்துள்ளீர்களா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டியது அவசியம்.
கழுத்து நேராகவும், முதுகுப்பகுதியைத் தாங்கக் கூடிய தலையணை பொருத்தியும் அமர வலி குறையும்.