கிராமத்து முறை நெத்தலிக்கருவாட்டு குழம்பு (Nethili Karuvadu Kulambu)

நெத்தலிக்கருவாட்டு குழம்பு (Nethili Karuvadu Kulambu) சாதாரணமாகவே சுவையாக இருக்கும்.எல்லோருமே விரும்பி சாப்பிடுவார்கள்.

கிராமத்துமுறையில் பல  மசாலாக்களை சேர்த்து ,அரைத்து சமைத்தால் ,அதன் சுவையும் மனமும்  மிக அருமையாக இருக்கும்.

நெத்திலி மீனில் கல்சியம் அதிகமாக நிறைந்துள்ளது. இது பற்கள் மற்றும் எலும்புகளுக்கு மிகவும் அத்தியாவசியமான ஓர் ஊட்டசத்து.நெத்தலிக்கருவாட்டு குழம்பு பிட்டு , இடியப்பம், சாதத்துடன் சேர்த்து சாப்பிட மிக சுவையாக இருக்கும்.

வளருங் குழந்தைகளின் எலும்பு பல் வளர்ச்சிக்கு தேவையான கல்சியத்தைக் கொண்டு ஏற்ற உணவாக நெத்தலிமீன் இருக்கிறது.

நெத்தலிக்கருவாட்டு குழம்பு (Nethili Karuvadu Kulambu) செய்முறை

வீடியோவில் பார்ப்போம்.

நெத்திலி கருவாட்டு குழம்பின்  வாசனையே பசியைத்  தூண்டி,  சாப்பிட வைக்கும். நீங்களும் இந்த குழம்பை வீட்டில்  சமைத்து சாப்பிட்டு பாருங்கள். கண்களின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும் விற்றமின் ஏ சத்து நெத்திலி மீனில் அதிகமாக  நிறைந்துள்ளது.

annaimadi.com

நெத்திலிமீன் சாப்பிடுவதால்  கிடைக்கும் நன்மைகள்

இவற்றை வாரம் ஒருமுறை உட்கொண்டு வந்தால்,  சத்துக் குறைபாட்டால் கண்களில் ஏற்படும் பிரச்சனைகளைத் தவிர்க்கலாம்.

நெத்திலி மீனில் கலோரிகள் குறைவு மற்றும் புரோட்டீன் அதிகம் என்பதால், இது உடல் எடை குறைப்பதற்கும் உதவும்.

நெத்திலி மீனில் அத்தியாவசிய ஃபேட்டி அமிலங்களுடன், விற்றமின் ஈ, செலினியம், போன்ற சருமத்தின் ஆரோக்கியத்திற்கு தேவையான சத்துக்களும் உள்ளன.

அடிக்கடி நெத்திலி மீனை உணவில் சேர்த்து வந்தால், சரும பிரச்சனைகள் வருவது தடுக்கப்படுவதோடு, சருமம் பொலிவோடு இருக்கும்.

நெத்திலி கருவாட்டில்  தேங்காய்ப்பூ போட்டு வறை , மாங்காய் சேர்த்து தீயல் செய்தும் சாப்பிடலாம். அவையும் மிகவும் சுவையாகவே இருக்கும்.

நெத்திலி மீன் அல்லது கருவாட்டை உப்பு, மிளகாய்த்தூள் போட்டு பொரித்து, அதிக தேங்காய்ப்பூ சேர்த்த புட்டுடன் சாப்பிட மிக அருமையாக இருக்கும்.

நெத்தலி மீனில் குழம்பு,பொரியல்,மாங்காய் போட்டு பால்க்கறியும் செய்வார்கள்.எதுவாக இருந்தாலும் சுவை மிக அருமை தான்!Check price

இடுப்பு வலி, முதுகுவலி, முழங்கால் வலியால் வருந்திவருபவர்கள் நெத்தலி மீனை உணவாக எடுத்துக் கொள்ள வலிகள் நீங்கும்.

அதே போல் உடல் சோர்வு, இருந்து விட்டு எழும்பும் போது தலை சுற்றல், போன்ற நோய்கள் உள்ளவர்கள் நெத்தலி மீனை தொடர்ந்து ஒரு வாரம் சாப்பிட்டு வந்தாலே போதுமானது.

கண் வலி, பார்வை கோளாறுகள் போன்ற நோய்களால் அவஸ்த்தை படுபவர்கள் நெத்தலி மீனை சாப்பிட்டு வர நல்ல தீர்வு கிடைக்கும். நெத்தலி மீன் வேகமாக கொழுப்பை கரைக்க கூடியது .இதனை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் ,உடலில் உள்ள கெட்ட கொழுப்புகள் கரைந்து விடும். இதனால் உடல் எடை குறைந்து விடும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *