ஆரோக்கியத்துக்கு பெரிதும் உதவும் நூல்கோல் (Noolkol)

நூல்கோல் (Noolkol) அரிதாகப் பயன்படுத்தும் காய்கறி வகைகளில் ஒன்று. இதனுடைய சத்துக்கள் மற்றும் மருத்துவப் பண்புகள் பற்றி அதிகம் தெரியாததால்  இக்காயை அடிக்கடி பயன்படுத்துவதில்லை.

நூல்கோலானது (Noolkol)  வயிற்று பிரச்சனைகளை நீக்கும் தன்மைக் கொண்டது. மேலும் ஜீரண சக்தியை அதிகரிக்க உதவும். நூல்கோல்தொடர்ந்து சாப்பிடுவதன் மூலம் குடல்  நாளங்கள் உறுதிப்படும், மேலும் எலும்புகளும் உறுதியாகும்.

இது ‘நூல்கோல்’ எனவும் ‘நூற்கோல்’ அழைக்கப்படுகிறது.
நூல்கோலை (Noolkol)அடிக்கடி உணவில் சேர்த்து கொண்டால் நரம்பு தளர்ச்சி ஏற்படாது. நூக்கலானது ரத்தத்தில் உள்ள சிவப்பணுக்களின் உற்பத்தியை அதிகரிக்கும்.

நூல்கோலை  எப்படி சமைப்பது

நூல்கோல் சற்று கடினமான காயாகும். எனவே இதனை நன்கு வேக வைத்து தான் சாப்பிட வேண்டும்.இதில் குழம்பு,பொரியல், கிரேவி  போன்றன செய்யலாம். சாம்பாருக்கும் பயன்படுத்தலாம்.

இதில் விற்றமின்களும், புரத சத்தும் நிறைந்துள்ளது. நூல்கோலை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்வது, நம் உடல் நலத்திற்கு நன்மை அளிக்கும். நூல்கோலில் காலோரிகள் குறைவு.

இதை சாப்பிடுவதால் உடல் எடை அதிகரிக்காது. உடல் எடையைக் குறைக்க விரும்புபவர்களுக்கு ஆரோக்கியமான காய் இது. நூல்கோலில் விற்றமின் ஏ, சி, இ, மாங்கனீசு, பீட்டாகரோட்டின் போன்றவை உள்ளன.

அறையின் வெப்பநிலையில் 3-5 நாட்கள் வைத்திருந்து இக்காயினை பயன்படுத்தலாம். இக்காயினை குளிர்சாதனப் பெட்டியில் ஒரு வாரம் வரை வைத்திருந்து பயன்படுத்தலாம்.

இக்காயின் மேற்பரப்பினை சீவி விட்டு தண்ணீரில் கழுவி வேண்டிய வடிவில் வெட்டிப் பயன்படுத்தலாம்.

நூல்கோல் அப்படியேவோ, சமைத்தோ உண்ணப்படுகிறது. சாலட்டுகள், ஊறுகாய்கள், சூப்புகள் தயாரிப்பிலும் இக்காய் பயன்படுத்தப்படுகிறது.

நூல்கோல் வயிற்று பிரச்சனைகளுக்கும், வயிற்றுப்புண்களுக்கும் காரணமான பாக்டீரியாவை எதிர்த்து போராட கூடியது.

நூல்கோலானது மார்பகப் புற்றுநோய், பெருங்குடல் மற்றும் மலக்குடல் புற்றுநோய்கள் வராமல் தடுக்கிறது.

நூல்கோலின் வேர்ப்பகுதிகளில் உள்ள பீட்டா கரோட்டின், ஆரோக்கியமான சவ்வுகள் உற்பத்தியாக உதவுவதுடன், நோய் எதிர்ப்புத் சக்தியையும் அதிகரிக்கிறது.

நூல்கோலில் உள்ள அதிகப்படியான விற்றமின் கே சத்தானது இதயக் கோளாறுகள் வராமல் தடுக்கிறது. நூக்கல் கீரையானது, உடலில் உள்ள கொழுப்பைப் பயன்படுத்தி பித்தநீரை உறிஞ்சிக் கொள்ளக்கூடியது.

இதன் விளைவால் கொலஸ்ட்ரால் குறைகிறது. நூல்கோலில் உள்ள ஃபோலேட்டும் இதயத்துக்கு நல்லது.

நூல்கோலின் மருத்துவப் பயன்கள் ( Medicinal benefits of Noolkol)

நல்ல செரிமானத்திற்கு

நூல்கோலானது அதிகளவு நார்ச்சத்தினையும், நீர்ச்சத்தினையும் கொண்டுள்ளது. இக்காயில் நார்ச்சத்தானது உடலில் நச்சினை கழிவாக எளிதில் வெளியேற்றகிறது.

இதனால் மலச்சிக்கல், வீக்கம், வயிற்று வலி ஆகியவை ஏற்படுவதில்லை. செரிமானப் பாதையில் உணவு செரிக்கும் தன்மையை இக்காயின் நார்ச்சத்து மேம்படுத்துகிறது.

மேலும் உணவில் உள்ள ஊட்டச்சத்துக்களை உடல் உறிஞ்சுவதை நார்ச்சத்து ஊக்குவிக்கிறது. எனவே இக்காயினை அடிக்கடி உடலில் சேர்த்து மலச்சிக்கல் உள்ளிட்ட செரிமான பிரச்சினைகள் நீங்கி நல்ல செரிமானத்தைப் பெறலாம்.

ஆரோக்கிய உடல்எடை குறைப்பிற்கு

நூல்கோலானது குறைந்த எரிசக்தியையும், அதிக நார்ச்சத்து, நீர்ச்சத்து மற்றும் ஊட்டச்சத்துக்களையும் கொண்டுள்ளது. எனவே

இக்காயினை உண்ணும்போது வயிறு நிரம்பிய உணர்வு ஏற்படுகிறது. மேலும் நீண்ட நேரத்திற்கு பசிப்பதில்லை. எனவே இடைவேளை உணவு, நொறுக்குத்தீனி தேவைப்படாது. இதனால் இக்காயினை உண்டு ஆரோக்கிய உடல்எடை குறைப்பினைப் பெறலாம்.

ஆரோக்கியமான தசைகள் மற்றும் நரம்புகள் செயல்பாட்டிற்கு
தசைகள் மற்றும் நரம்புகளின் செயல்பாட்டிற்கு பொட்டாசியம் மிகவும் அவசியமானது. இந்த ஊட்டச்சத்து நடத்தல், ஓடல், மூச்சு விடுதல் என அன்றாட செயல்பாட்டில் பங்கேற்கிறது.

பொட்டாசியம் மிகுந்த இக்காயினை உணவில் சேர்க்கும்போது நமது நரம்புகள் மற்றும் தசைகளின் செயல்பாடுகள் சீராகி நமக்கு புத்துணர்வினைத் தருகிறது.

இரத்த அழுத்தத்தை சீராக்க

பொட்டாசியம் இரத்த குழாய்களின் குழல்விரிப்பான செயல்பட்டு சிரைகள் மற்றும் தமனியில் இரத்த ஓட்டத்தை சீராக்குகிறது. இதனால் உயர் இரத்த அழுத்தம் குறைக்கப்பட்டு மாரடைப்பு, பக்கவாதம் உள்ளிட்ட நோய்கள் ஏற்படாமல் தடுக்கப்படுகின்றன.

மேலும் உடலில் உள்ள சோடியத்தின் அளவினை பொட்டாசியம் சமன்செய்து செல்களில் திரவநிலையைக் காக்கிறது.

அனீமியாவைத் தடுக்க

நூல்கோலில் இரும்புச்சத்து மற்றும் பொட்டாசியம் காணப்படுகிறது. இவை இரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கச் செய்கின்றன. இதனால் உடல்உறுப்புக்களுக்கு ஆக்ஸிஜன் எடுத்துச் செல்லப்பட்டு உறுப்புகள் சுறுசுறுப்பாக இயங்குகின்றன.

மேலும் இரத்த சிவப்பணுக்களின் குறைபாட்டினால் ஏற்படும் சோர்வு, தலைவலி, பலவீனம், நோய் எதிர்ப்பின்மை, அனீமியா போன்றவை தடைசெய்படுகின்றன.

இக்காயில் உள்ள சுண்ணாம்புச் சத்து உடல் உட்கிரக்கிக்கும் இரும்புச்சத்தின் அளவினை அதிகரிக்கிறது. இதனால் நூல்கோலை உணவில் சேர்த்து இரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கலாம்.

எலும்புகளின் ஆரோக்கியத்திற்கு

நூல்கோலில் எலும்புகளின் ஆரோக்கியத்திற்கு காரணமான கால்சியம், இரும்புச்சத்து, மாங்கனீசு ஆகியவை காணப்படுகின்றன.

நமக்கு வயதாகும்போது எலும்புகள் பாதிப்படைகின்றன. இதனால் வாதம், கீல்வாதம் உள்ளிட்ட பிரச்சினைகள் தோன்றுகின்றன. எனவே எலும்புகளின் ஆரோக்கியத்திற்குக் காரணமான நூல்கோலினை உணவில் அடிக்கடி சேர்த்துக் கொள்ள வேண்டும்.

பார்வைத் திறன் மேம்பட

நூல்கோலில் பார்வைத்திறன் மேம்பட காரணமான பீட்டா கரோடீன்கள் காணப்படுகின்றன. இவை வயதாகும் போது ஏற்படும் கண்தசை அழற்சி நோய், கண்புரை நோய் ஏற்படாமல் பாதுகாக்கின்றன.

ஊடலில் ஆக்ஸிஜனேற்றத்தினால் உண்டாகும் ப்ரீ ரேடிக்கல்களின் செயல்பாட்டினைத் தடுத்து பார்வைத் திறனை பாதுகாக்கின்றன. எனவே நூல்கொலினை உணவில் அடிக்கடி சேர்த்துக் கொள்ள வேண்டும்.

வளர்ச்சிதை மாற்றத்தினை சீராக்க

பி தொகுப்பு விட்டமின்கள் உடலில் உள்ள நொதிகளை சரிவர சுரக்கச் செய்து வளர்ச்சிதை மாற்றம் சீராக நடைபெற காரணமாகின்றன. நூல்கோல் அதிகளவு பி தொகுப்பு விட்டமின்களைக் கொண்டுள்ளது. எனவே இதனை அடிக்கடி உணவில் சேர்த்து சீரான வளர்சிதை மாற்றத்தினைப் பெறலாம்.

புற்றுநோயைத் தடுக்க

நூல்கோலானது அதிகளவு குளுக்கோசினலேட் உள்ளிட்ட பைட்டோ-நியூட்ரியன்களைக் கொண்டுள்ளது. இந்த ஆன்டி ஆக்ஸிஜென்ட்டுகள் புற்றுநோயை தடை செய்கின்றன. எனவே இக்காயினை உண்டு புற்றுநோயிலிருந்து பாதுகாப்பு பெறலாம்.

நூல்கோலினை வாங்கும் போது அவை மிதமான வடிவில் கையில் தூக்கும்போது கனமானதாகவும் ஒரே சீரான நிறத்துடனும் இருக்க வேண்டும்.

மேற்பரப்பில் வெட்டுக்காயங்கள், கீறல்கள், கையில் தூக்கும்போது எடை குறைவாக உள்ளவை, முதிர்ந்தவற்றை தவிர்த்து விடவும்.

குழந்தை பெற்ற பெண்கள் பிஞ்சு நூக்கலை  தொடர்ந்து சாப்பிட்டு வர  தாய்ப்பால் நன்றாக சுரக்கும்.

நூல்கோலானது வயிற்று பிரச்சனைகளை நீக்கும் தன்மைக் கொண்டது. மேலும் ஜீரண சக்தியை அதிகரிக்க உதவும்.

நூல்கோல் தொடர்ந்து சாப்பிடுவதன் மூலம் குடல் நாளங்கள் உறுதிப்படும், மேலும் எலும்புகளும் உறுதியாகும்.

நூல்கோலை அடிக்கடி உணவில் சேர்த்து கொண்டால் நரம்பு தளர்ச்சி ஏற்படாது.

நூல்கோலானது ரத்தத்தில் உள்ள சிவப்பணுக்களின் உற்பத்தியை அதிகரிக்கும்.

நூல்கோலின் வேர்ப்பகுதிகளில் உள்ள பீட்டா கரோட்டின், ஆரோக்கியமான சவ்வுகள் உற்பத்தியாக உதவுவதுடன், நோய் எதிர்ப்புத் சக்தியையும் அதிகரிக்கிறது.

நூல்கோலானது நுரையீரல் தொடர்பான பிரச்சனைகளைச் சரிசெய்யும். நூக்கலின் கீரையில் விட்டமின் ஏ அதிகமாக உள்ளது. அது நுரையீரல் ஆரோக்கியத்துக்குப் பெரிதும் உதவுகிறது.

நூல்கோல் ஜீரண சக்தியை அதிகரிக்கும். நூக்கலானது நார்ச்சத்து மிகுந்த காய் என்பதால் இயல்பிலேயே செரிமானத்தை சீராக்கும் குணம் இதற்கு உண்டு.

மேலும் வயிற்று பிரச்சனைகளுக்கும், வயிற்றுப்புண்களுக்கும் காரணமான பாக்டீரியாவை எதிர்த்து போராட கூடியது.

நூக்கலானது மார்பகப் புற்றுநோய், பெருங்குடல் மற்றும் மலக்குடல் புற்றுநோய்கள் வராமல் தடுக்கிறது.

இந்த காயில் அதிகளவு வைட்டமின்கள் மற்றும் நார்ச்சத்துக்கள் உள்ளதால் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. அதேப்போல் இந்த காயில் மிகவும் குறைவான அளவு கொழுப்பு சத்து உள்ளதால் உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் இந்த காயை சாப்பிடலாம்.

மேலும் குடல் ஆரோக்கியத்தை சீராக வைக்க உதவுகிறது.

மேலும் இந்த காய் ப்ரோக்கோலி, முட்டைகோஸ் போன்ற காய்கறிகளின் சுவையை போன்று இருக்கும். மேலும் இந்த காயின் இலைகளில் தாதுக்கள், கரோட்டின்கள், வைட்டமின் ஏ, வைட்டமின் கே, வைட்டமின் பி ஆகிய சத்துக்கள் உள்ளது.

நூக்கலில் உள்ள அதிகப்படியான விட்டமின் கே சத்தானது இதயக் கோளாறுகள் வராமல் தடுக்கிறது. நூக்கல் கீரையானது, உடலில் உள்ள கொழுப்பைப் பயன்படுத்தி பித்தநீரை உறிஞ்சிக் கொள்ளக்கூடியது.

இதன் விளைவால் கொலஸ்ட்ரால் குறைகிறது. நூல்கோலில் உள்ள ஃபோலேட்டும் இதயத்துக்கு நல்லது.

இந்த காய் சாப்பிடுவதால் இன்சுலின் எதிர்ப்பு மற்றும் நீரிழிவு நோய் ஏற்படும் ஆபத்தை குறைக்கும். மேலும் கண் சம்பந்தமான நோய்களையும் குணப்படுத்தும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *