கொரோனாவில் இருந்து காக்கும் ஊட்டச்சத்து பானங்கள் (Nutritional drinks)

கொரோனா அச்சுறுத்தி வரும் இக்கால கட்டத்தில்  ,எதிர்ப்புசக்தியை அதிகரிக்கும் பானங்களை (Nutritional drinks) குடித்து வருவது ,புத்திசாலித்தனமானது .

எதிர்ப்புசக்தி உடலில் இருந்தால் சளி, இருமல், காய்ச்சல் வராமல் இருக்கும். கடுமையான காய்ச்சல் காலங்களிலும் கூட எதிர்ப்புசக்தியை அதிகரிக்கும் இப்பானங்களை (Nutritional drinks) குடித்தால், அவற்றிலிருந்து இலகுவாக மீண்டுவர முடியும்.

இந்நிலையில் தற்போது பரவி வரும் கொரோனா வைரஸ் என்னும் கோவிட்- 19 தொற்று பரவாமல் இருக்க உடலுக்கு எதிர்ப்புசக்தி தேவைப்படுகிறது.

75% உணவின் மூலமாகத்தான் உடலுக்கு வேண்டிய சத்துகள் பெறமுடியும். அப்படி நாம் சாப்பிடும் உணவுகள் சத்துமிக்கவையாக உடலுக்கு ஊட்டம் தருவனவாக இருந்தால் உடல் எளிதில் சத்துக்களை கிரகித்து கொள்ள உதவியாக இருக்கும்.

இந்த பானங்கள் (Nutritional drinks)உங்கள் எதிர்ப்புசக்தியை இயற்கையாக அதிகரிக்க உதவும். இவை தான் இப்போது அனைத்து வயதினருக்கும் தேவையாக இருக்கிறது. படிப்பதோடு விடாமல்  இந்த பானங்களை தவிர்க்காமல்  அடிக்கடி பருகுங்கள்.

​தண்ணீர் (Nutritional drinks)

உடலில் இருக்கும் நோய் எதிர்ப்பு சக்தி இருக்கும் அளவிலேனும் போராட வேண்டும். இயல்பாக அவை செயல்பட வேண்டும். என்றால் உடலில் நீர்ச்சத்து முதலில் குறையாமல் இருக்க வேண்டும்.

நீர்ச்சத்து உடலில் போதுமான இருந்தாலே உடலில் இருக்கும் நச்சுகள் அவ்வபோது வெளியேற்றப்படும். இதனால் நோய் எதிர்ப்பு மண்டலும் சீராக வேலை செய்யும்.

சத்தான பானங்களை எடுத்துகொள்வதை காட்டிலும் முக்கியமானது உடலுக்கு தேவையான தண்ணீர் பருகுவது. முதலில் தினமும் 3 லிட்டருக்கு குறையாமல் தண்ணீர் பருகுவதை உறுதி செய்யுங்கள்.

​கரட் சாறு

கொரோனாவில் இருந்து காக்கும் ஊட்டச்சத்து பானங்கள் (Nutritional drinks)

காய்கறிகளில் கண்களை பறிக்ககூடிய நிறத்தை கொண்டது. இனிப்பு சுவையை கொண்டிருக்கும் கேரட் அனைவரின் விருப்பமான காயும் கூட. நீரிழிவு நோயாளிகள் சற்று அளவாகவும் மற்றவர்கள் அதிகமாகவும் எடுத்துகொள்ள வேண்டிய ஊட்டசத்து பானம் இது.

கரட்டில் பீட்டா கரோட்டின் நிறைந்திருக்கிறது. இது ஆன் டி ஆக்ஸிடண்ட் குணங்கள் நிறைந்தது. இவை உடலுக்கு செல்லும் போது விற்றமின் ஏ சத்தாக மாற்றப்படுகிறது. விற்றமின் ஏ சத்து வெள்ளை அணுக்கள் உற்பத்திக்கு மிகவும் துணைபுரியக்கூடும்.

வெள்ளை அணுக்கள் தான் உடலில் நோய் எதிர்ப்புசக்தி மண்டலத்துக்கு தேவையான ஒன்று என்பதால் கேரட் பானம் எடுக்கும் போது உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க உடனடியாக உதவுகிறது.

தினமும் ஒரு டம்ளர் கரட் சாறு எடுத்துகொள்ளுங்கள். உடன் சிறு துண்டு இஞ்சியும் சேர்த்துவிடுங்கள். மிதமான காரமும் அதிக இனிப்பும் நிறைந்திருக்கும் இந்த பானத்தில் விற்றமின் சி மற்றும் விற்றமின் ஏ அதிகமாகவே இருக்கிறது.

​பச்சை நிற பானம்

காய்கறி பழக்கலவைகள் நிறைந்த மற்றொரு பானம் இது. வாழைப்பழம், பச்சை நிற ஆப்பிள் தோல் உரிக்காமலும் கூட சேர்க்கலாம்.

இதனுடன் காலே என்று சொல்லகூடிய கீரை சிறிதளவு சேர்த்து நன்றாக மசித்து பிறகு ஆளி விதைகள் இரண்டு டீஸ்பூன் சேர்த்து மீண்டும் மசிக்கவும்.

அவை நன்றாக பழக்கலவை ஆன உடன் சிறிதளவு ஆரஞ்சு சாறு சேர்த்து குடிக்கலாம். பச்சை நிற பானம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை உடனடியாக தரக்கூடியது.

சுவை சற்று வித்தியாசமாக இருந்தாலும் கூட பலன் அதிகமாகவே கிடைக்கும்.

​தர்பூசணி (Nutritional drinks)

தர்பூசணியில் இருக்கும் லைகோபின் தான் இதற்கு சிவப்பு நிறத்தை அளிக்கிறது.

நிறமுள்ள இந்த பழம் சிறந்த ஆன்டி ஆக்சிடண்ட் குணத்தை கொண்டிருக்கிறது. இவை உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.

தினமும் காலை வேளையில் காலை உணவுக்கு மாற்றாக ஒரு கப் நிறைய தர்பூசணி பழத்துண்டுகளை சாப்பிடுவது உடலில் விற்றமின் ஏ மற்றும் விற்றமின் சி சத்தை அதிகரிக்க உதவும்.

காய்ச்சலின் போது தர்பூசணி சாப்பிடக்கூடாது என்று சொல்வார்கள். ஆனால் உடல் சோர்வையும் விரட்டி அடிக்க கூடியது தர்பூசணி. தர்பூசணியுடன் 10 புதினா இலைகளை சேர்த்து அரைத்து பானமாக்கி குடிக்கலாம்.

ஆரஞ்சு

விற்றமின் சி நிறைந்த ஆரஞ்சு பழச்சாறு உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க உதவும் சிறந்த பழச்சாறு.

உடலில் கண்ணுக்கு தெரியாத வைரஸ் நுண்ணிய கிருமிகளை அழித்து உடலை நோயிலிருந்து காக்க இது உதவுகிறது.

விற்றமின் சி நிறைந்திருப்பதால் உடல் உணவு வழியாக தேவையான இரும்புசத்தை உறிஞ்சுகொள்வதற்கு உதவுகிறது.

வெள்ளை அணுக்களை ஆரோக்கியமாக வைத்திருப்பதால் உடல் பலவீனமில்லாமல் வலுவாக எதிர்ப்பு சக்தி மிகுந்து வலிமையாக இருக்கும். ஆரஞ்சு பழச்சாறு அவ்வபோது உங்கள் உணவில் சேர்ப்பது சிறந்தது.

பெர்ரி

 கொரோனாவில் இருந்து காக்கும் ஊட்டச்சத்து பானங்கள் (Nutritional drinks)

அதிக ஆன்டி ஆக்சிடண்ட் விற்றமின் சி நிறைந்த பெர்ரியை அப்படியே சாப்பிடுவீ ர்கள் .எனினும் இதை பானமாக்கி குடிப்பதன் மூலம் அனைத்து சத்துகளையும் எளிதாக பெறலாம்.

ராஸ்பெர்ரி, ப்ளூபெர்ரி, பால் அனைத்தையும் சேர்த்து மிக்ஸியில் அடித்து பானம் போல் சேர்த்து குடிப்பதன் மூலம் பெர்ரி பழங்களின் நன்மைகளை ஒட்டுமொத்தமாக பெறமுடியும்.

குழந்தைகள் பழங்களை விட இந்த பெர்ரி மில்க் ஷேக் கலவையை விரும்பி குடிப்பார்கள்.

தயிர்

பால் கல்சியம் நிறைந்த உணவு பொருள். அதே நேரம் பாலை காய்ச்சி பக்குவப்படுத்தி அதிலிருந்து பெறப்படும் தயிர் அதைவிட முக்கியமான சத்துக்கள் பெற்றது.

தயிரிலிருக்கும் நல்ல பாக்டீரியாவான புரோபயாட்டிக் நொய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் என்சைமனா இம்யுனோகுளோபுவின் சுரக்க உதவுகிறது.

இந்த என்சைம்களுடலில் தொற்றை எதிர்த்து போராட உதவும் பாக்டீரியாக்களை அதிகரிக்கிறது இதனால் உடலில் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது.தயிருடன் மேற்கண்ட பழங்களில் பெர்ரி பழம் அடித்து மசித்து குடிக்கலாம்.

பீட்ரூட் பானம்

கொரோனாவில் இருந்து காக்கும் ஊட்டச்சத்து பானங்கள் (Nutritional drinks)

கண்ணை பறிக்கும் காய்கறிகளில் பீட்ரூட் ஒன்று. இதை பொரியலாக்கி சாப்பிடலாம். அல்லது அல்வா செய்தும் சாப்பிடலாம். ஆனால் இதை சாறாக்கி குடிக்க முடியுமா இனிப்பை மீறிய ஒரு துவர்ப்பு இதில் இருக்குமே என்று நினைப்பவர்கள் இனி அந்த எண்ணத்தை மாற்றிகொள்ளுங்கள்.

காய்ச்சல் மிகுந்திருக்கும் நேரத்ஹில் ஆன் டி ஆக்சிடண்ட் நிறைந்த பீட்ரூட்டை தோல் சீவி மிக்ஸியில் அடித்து இலேசாக தேன் கலந்து குடிக்கலாம்.அல்லது இஞ்சி சாறு சேர்த்து குடிக்கலாம்.

வெறும் பீட்ரூட் வேண்டாம் என்று நினைப்பவர்கள் பீட்ரூட் உடன் சம அளவு கரட் சேர்த்து இஞ்சி, சிட்டிகை மஞ்சள் தூள் கலந்து குடித்தால் பீட்ரூட் வாடை இருக்காது. உடலுக்கு சேர வேண்டிய எதிர்ப்பு சத்தும் உடனடியாக கிடைக்கும்.

​ஆப்பிள் +கீரை (Nutritional drinks)

ஒரு பொருளை மட்டும் கொண்டு பானம் தயாரிக்கும் போது அதன் ருசியை விட சத்து தரும் வேறு பொருள்களையும் கலந்து தயாரிக்கும் போது அதன் பலன் இரட்டிப்பு மடங்கு கிடைக்கும்.

ஆப்பிள் உடலுக்கு நன்மை தரக்கூடியது. அதே போன்று பச்சை நிற கீரைகளும் உடலுக்கு சத்து தரக்கூடியது. அதோடு கீரையில் கல்சியம் சத்து மிகுந்திருக்கிறது.

உடலில் எதிர்ப்புசக்தியில் கலந்திருக்கும் கிருமிகளை அடித்து விரட்ட உதவும் குணங்களை கொண்டது கீரை.

கீரைகளை சாலட் உடன் கலந்து சாப்பிடுவதுண்டு. அதே போன்று கீரைகள் கைப்பிடிக்கு குறைவாக எடுத்து மசித்து அதனுடன் விதை நீக்கிய ஆப்பிளை சேர்த்து மசித்து சாறு கலந்து குடித்தால் இரட்டிப்பு மடங்கு சக்தியை உடல் பெற்றுவிடும்.

அதுவும் உடனடியாக. கீரை சமையல் ஆப்ப்பிள் துண்டுகள் என்று கலந்து குழந்தைகளை சாப்பிட வைப்படை காட்டிலும் சிறந்தது ஆப்பிள் கீரை கலந்த பானம்.

​தக்காளி சாறு

தக்காளியைதான் சமையலில் சேர்க்கிறோமோ பிறகு அதை தனியாக வேறு குடிக்க வேண்டுமா என்ற கேள்வி எழும். ஆனால் தக்காளி வைட்டமின் சி நிறைந்தவை.

லைக்கோபின் தக்காளிக்கு சிவப்பு நிறத்தை தருவதோடு உடலுக்கும் நன்மைகளை தருகிறது.

விற்றமின் சி நிறைந்திருப்பதால் உடலில் நோய் எதிர்ப்பு சக்திக்கு தூண்டுதலாக இருக்கும் வெள்ளை அணுக்களின் உற்பத்தியை அதிகரிக்ககூடியவை.

தக்காளியில் இருக்கும் ஃபோலெட் சத்து தொற்று நோய் அபாயத்திலிருந்து உங்களை காப்பாற்றும்.

தக்காளியை மசித்து சாறாக்கி குடியுங்கள். அல்லது தக்காளி சூப் செய்தும் குடித்துவிடுங்கள். உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதால் தவிர்க்க வேண்டாம்.

மேற்குறிப்பிட்ட பானங்கள் எல்லாமே ஊட்டச்சத்து மிக்க பானங்கள். அனைத்துமே உடனடியாக உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க கூடியவை.

இப்போது வைரஸ் தொற்று பரவி வரும் நிலையில் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வேண்டியிருக்கிறது என்பதால் இத்தகைய பானங்களைபருகி நாமும் நம்மைச் சார்ர்ந்தவர்களையும் பாதுகாப்பாக இருப்போம்!!

Leave a Reply

Your email address will not be published.