உடற் பருமனாக இருப்பது நோயா?(Is obesity a disease?)

பொதுவாகவே உடல் பருமனாக இருப்பது நோய்கள் (obesity a disease?) வருவதற்கான சாத்தியங்கள் அதிகம் என்ற எண்ணம் அதிகமாக காணாப்படுகிறது. இதனாலே தற்போது அதிகமானோர் உடல் எடை குறைப்புகள் ஈடுபட்டு வருகின்றனர்.

உடல் பருமனாக இருப்பது என்பது (Obesity a disease?) உடல் மெலிவாக இருப்பது போன்றே. அவரவர் உடல்வாகைப் (Genetic) பொறுத்தது.

உடலில் தேக்கி வைத்துள்ள கொழுப்பு அதிகரிப்பதால் மட்டுமே உடல் பருமன் (Obesity) உருவாகின்றது. இது (Obesity) உடனடியாக தோன்றுவது அல்ல. உடல் கொழுப்பை சேகரித்து வைப்பது உடல் இயக்கத்தில் சாதாரண ஓர் இயல்பு தான்.
உடல் மற்றும் உடலுக்கு அடியில் சேமித்து வைக்கப்பட்டுள்ள கொழுப்பு, கூடுதல் உணவு, குறைந்த உடல் உழைப்பு, சில நேரங்களில் பரம்பரை காரணங்கள், ஓமோன் சுரப்பதில் ஏற்றத்தாழ்வு போன்ற காரணங்களால் உடல் பருமன் (Obesity) நோயை உருவாக்குகின்றது.

ஆனால், அதுவே தீவிரமாக நடைபெறும்போது அது உடல் நலத்துக்கு ஆபத்தானது என்பது மட்டுமன்றி, அது மருத்துவ வட்டாரத்தில் ஒரு நோயாக அடையாளப்படுத்தப்படுகிறது. இருப்பினும், இது ஒரு நோயா (Obesity a disease?) என்பதில் மாறுபட்ட கருத்துக்கள் நிலவுவதும் உண்மையே.

 

உடல் பருமன் ,Obesity,annaimadi.com,உடற் பருமனாக இருப்பது நோயா?,Is obesity a disease?,உடல்பருமனாக இருப்பது ஏன் அபாயத்தை அதிகரிக்கிறது? ,Why does obesity increase the risk?,What to do to stay healthy,ஆரோக்கியத்துடன் இருக்க செய்ய வேண்டியது,அன்னைமடி,உடல் பருமனை எப்படி ஆரோக்கியமாக குறைப்பது,How to lose weight healthily

உடலின் உயர எடைக் குறி (BMI ) இ விட சற்று கூடுதாலாக இருப்பது தவறு ஒன்றும் இல்லை. ஒருவர் தனது நாளாந்த பணிகளை எவ்வித சிரமமும் இன்றி செய்யக் கூடியதாக இருப்பின் உடல் பருமனாக இருப்பது ஒன்றும் குற்றமில்லை.

அழகும் ஆரோக்கியமும் எப்போதும் ஒன்றையொன்று சார்ந்திருக்கிறது. ஆரோக்கியம் இல்லாத அழகு, அத்திவாரம் இல்லாத கட்டடம் போன்றது.

தற்போது உடலின் பருமன் (Obesity a disease?) அழகுடன் தொடர்புபடுத்தப்படுகிறது. அதாவது வியாபார நோக்கில் வெளிப்படுத்தப்படும் விளம்பரங்களின் மூலம் தவறான எண்ணப்போக்கு எழுந்துள்ளது.

உடல்பருமனாக இருப்பது ஏன் அபாயத்தை அதிகரிக்கிறது? (Why obesity a disease?)

உடல் பருமனாக இருப்பது (obesity a disease?) இதய நோய், புற்றுநோய் மற்றும் நீரிழிவு உள்ளிட்ட பல நோய்கள்

ஏற்படுவதற்கான அபாயத்தை அதிகரிக்கும்.

ஒருவர் எவ்வளவு அதிக உடல் எடையை கொண்டு இருக்கிறாரோ அந்த அளவுக்கு அவர் கொழுப்பையும் கொண்டு இருக்கிறார் என்று அர்த்தம்.

அதுமட்டுமன்றி உடற் கட்டமைப்பு எவ்வளவு மோசமாக இருந்தால் அது நுரையீரலின் செயல்பாட்டையும் பாதிக்கிறது. இதன் காரணமாக ஆக்சிஜனை இரத்தத்திற்குள் கொண்டு செல்வதிலும், உடல் முழுவதும் கொண்டு செல்வதிலும் பிரச்சனை ஏற்படுகிறது. இதனால் இதயத்தின் செயல்திறன் பாதிக்கப்பட்டு, ஒட்டுமொத்த இரத்த ஓட்டமும் பாதிக்கப்படுகிறது.annaimadi.com,அன்னைமடி

உடல் பருமனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அதிக அளவிலான ஆக்ஸிஜன் தேவைப்படுகிறது. இதன் காரணமாக உடல் உறுப்புகள் அனைத்தும் மிகுந்த அழுத்தத்தின் கீழ் செயல்பட வேண்டியிருக்கும் என்றுமருத்துவ வட்டாரம் தெரிவிக்கிறது.

கொரோனா வைரஸ் போன்ற நோய்தொற்று காலத்தில் இது மேலதிக அபாயத்திற்கு வித்திடுகிறது.

“முக்கிய உறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் கிடைப்பதில் பிரச்சனை ஏற்படுவதால் உடல்பருமன் மிக்கவர்களின் நோய் தொற்று மேலும் தீவிரமடைகிறது” என்று கூறப்படுகிறது.

தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள அதிக எடை கொண்ட மற்றும் பருமனானவர்களுக்கு (Obesity a disease?) மூச்சு விடுவதற்கும், சிறுநீரக செயல்பாட்டிற்கும் ஆதரவு தேவைப்படுவதற்கு இதுவே முக்கிய காரணம்.

உடல் பருமன் என்பது உடல் அளவில் மட்டுமன்றி மனதளவிலும் மனிதர்களை பாதிப்படைய செய்கின்றது.

இவை எல்லாவற்றிற்கும் மேலாக, வைரஸை எதிர்த்துப் போராடும் திறன், அதாவது நோய் எதிர்ப்புத்திறன் உடற்பருமன் மிக்கவர்களுக்கு அதிகம் இருப்பதில்லை.

வேறு மறைமுக பிரச்சனைகள்(Obesity a disease?) 

உடல் பருமன் கொண்டர்வர்களுக்கு இதயம் அல்லது நுரையீரல் சார்ந்த பிரச்சனைகளும், சிறுநீரகம் செயல்பாட்டில் குறைபாடோ அல்லது இரண்டாம் வகை நீரிழிவு போன்ற பிற உடல்நலப் பிரச்சனைகளும் ஏற்படுகின்றன.

கோவிட்-19 போன்ற தீவிரமான நோய்த்தொற்று தாக்குதல் ஏற்படும் போது தான் மேற்குறிப்பிட்ட பிரச்சனைகள் இருப்பது ஒருவருக்கு தெரிய வருகிறது. இது உடலில் மேலதிக அழுத்தத்தை ஏற்படுத்துகிறது.

உடல் பருமனால், இரத்தக் கட்டிகளும் உருவாக அதிக வாய்ப்புள்ளது. இதற்கான காரணம் இதுவரை அறியப்படவில்லை.

ஆரோக்கியத்துடன் இருக்க செய்ய வேண்டியது

உடல் பருமனை கட்டுக்குள் வைப்பதற்கு நாம் எப்போதும் ஆரோக்கியமான வழியை மாத்திரமே தேர்ந்தெடுக்க வேண்டும்.

சரிவிகிதமாக சத்துக்கள் நிறைந்த நல்ல உணவை உண்பதுடன், சீரான இடைவெளியில் உடற்பயிற்சிகளை மேற்கொள்வது சாலச்சிறந்தது.

வேகமாக நடப்பது, ஜாகிங் செய்வது மற்றும் சைக்கிள் ஓட்டுதல் ஆகியவை நல்ல தெரிவுகள்.

மற்றபடி மெதுவாக உண்பதற்கு முயற்சி செய்யுங்கள். அளவுக்கு அதிகமாக உணவுப் பொருட்களை உண்ணும் உணர்வை ஏற்படுத்தும் சூழ்நிலைகளை தவிர்த்து விடுங்கள்.

கட்டுக்குள் அடங்காத வகையில் உடல் பெரிதாக சதை போடுவதை உடல் பருமன் (Obesity) அல்லது உடற்கொழுப்பு எனலாம்.

உடல் பருமன் ,Obesity,annaimadi.com,உடற் பருமனாக இருப்பது நோயா?,Is obesity a disease?,உடல்பருமனாக இருப்பது ஏன் அபாயத்தை அதிகரிக்கிறது? ,Why does obesity increase the risk?,What to do to stay healthy,ஆரோக்கியத்துடன் இருக்க செய்ய வேண்டியது,அன்னைமடி,உடல் பருமனை எப்படி ஆரோக்கியமாக குறைப்பது,How to lose weight healthily

அதோடு , அதிக உடல் எடையானது (Obesity a disease?) மனிதர்களில் பல்வேறு மாற்றங்களுக்கும் நோய்களுக்கும் வழிவகுக்கிறது. முக்கியமாக உயர் குருதி அழுத்தம், இரண்டாம் வகை சர்க்கரை நோய், மூச்சுத்திணறல், மூட்டுவலி, முதுகு வலி, மாரடைப்பு, மார்பக புற்றுநோய், பித்தப்பை கற்கள், குடலிறக்கம், மலட்டுத்தன்மை போன்றன உடல் பருமன் ஏற்படுத்தும் அபாயகரமான நோய்கள் என்பது நம்மில் பலரும் அறியாத விடயம்.

எனவே, இது குறித்து மக்கள் விழிப்புணர்வுடன் செயற்பட வேண்டியது காலத்தின் கட்டாயம்.

உடல் பருமனை குறைக்க பலரும் டயட் எனும் பெயரில் பட்டினி கிடப்பது வழக்கமாகிவிட்டது. இது தவறான முயற்சி. உடலுக்குத் தேவையான அளவு உணவை எடுத்துக்கொள்வது அவசியம். குறைவான கலோரியில் நிறைவான நார்ச்சத்து கொண்ட உணவை மட்டுமே தேர்ந்தெடுக்க வேண்டும்.

சர்க்கரை, எண்ணெயில் பொரித்த உணவுகளை முழுமையாக தவிர்க்க வேண்டும். கடைகளில் கிடைக்கும் உடன் உணவு வகைகளை நாடுவதை உடற்பருமன் உடையவர்கள் முற்றாக நிறுத்துவது அவசியம்.

மேலும், அக்கறையுடன் கூடிய தொடர் உடற்பயிற்சி மற்றும் யோகா போன்றவற்றுடன் ஆரோக்கியமான உணவுப் பழக்கத்தை கடைப்பிடித்தால் உடல் பருமனை இலகுவில் விரட்டியடித்துவிடலாம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *