எண்ணெய் குளியலின் அவசியம் (oil bath)

எண்ணெய்க் குளியல் (oil bath) ஏன்?

வாரம் ஒரு நாள் எண்ணெய்க் குளியல்’ என வாழ்வின் ஒரு அங்கமாகவே  நம் முன்னோர் அதைக் கடைப்பிடித்து வாழ்ந்துள்ளனர். இது  உடலை நோய் அணுகாமல் காத்து, ஆரோக்கியத்தை மேம்படுத்த அவர்கள் பயன்படுத்திய உத்தி.

நவீன தொழில்நுட்ப வளர்ச்சி ,புவி வெப்பமாதல், அதிவேக வாழ்க்கை முறை,புதிய உணவு பழக்கங்கள் எனப் பல்வேறு காரணங்களால், நம்மில் பலருக்கு உடல் சூடும் , பித்தமும் கூடி பல நோய்களால் வருந்துகின்றோம்.முடி உதிர்வு, கண் எரிச்சல்.வறண்ட சருமம்,இளநரை, என பல…

எனவே நமது இந்த வாழ்வியல் போக்கில் மாற்றம் கொண்டு வரவேண்டியுள்ளது. உடலை குளிர்ச்சிபடுத்துவது அவசியமாகின்றது. இதற்கு தான் பழைய காலத்தில் எண்ணெய் குளியல் (Oil bath) செய்து வந்தார்கள். இயந்திரமயமாக்கப்பட்ட வாழ்வில் இவற்றை எல்லாம் மறந்து விட்டோம்.நேரமும் கிடைப்பதில்லை.

உடற்சூட்டை  குறைக்க  எண்ணெய்க் குளியல் நிச்சயம் ஒரு நல்ல தீர்வாக இருக்கும்.

வாரம் இருமுறை எண்ணெய் தேய்த்துக் குளிப்பதைக் கட்டாயம் செய்வது நம் உடல் ஆரோக்கியத்தை வளப்படுத்த பெரிதும் உதவியாக இருக்கும்.

எண்ணெய்க்குளியலின் மகத்துவம் புரிந்த அநேகமானோர் தற்போது எண்ணெய்க்குளியல் செய்யத் தொடங்கியுள்ளார்கள்.
முடி மற்றும் சருமம் இரண்டுக்கும் இயல்பிலேயே மிதமான கொழுப்பு மற்றும் எண்ணெய் சுரக்கும் தன்மை இருக்கிறது. இந்த இரண்டுமே நம் சருமத்தையும் கூந்தலையும் பாதுகாக்கும் ஆற்றலைப் பெற்றிருக்கின்றன.

இருப்பினும், பொதுவாகவே, நம் உடலின் வெப்பத்தன்மை அதிகரிப்பதால் பல்வேறு விதமான பிரச்சனைகள் ஏற்படுகின்றன.நமது உடலுக்கு எண்ணெய் சத்து என்பதும் அவசியமானது.

எண்ணெய் வைக்கும் முறை

எண்ணெய் குளியலுக்கு நல்லெண்ணெய் (Oil bath oil) தான் உகந்தது.

நல்லெண்ணெயை மிதமான சூட்டில் சூடுபடுத்தி, முதலில் தலையின் உச்சியில் சூடுபறக்கத் தேய்க்க வேண்டும்.

பிறகு, உடலின் ஒவ்வொரு பாகத்திலும் தேய்த்துவிட வேண்டும். பின், ஓரளவு வெதுவெதுப்பான நீரில் சீகைக்

காய் அல்லது அரப்பைச் சேர்த்து எண்ணெய் போக குளிக்க வேண்டும்.இல்லாவிடில் ஷாம்புவை பாவிக்கவும்.

காலை 5 மணி முதல் 7 மணி வரைதான் எண்ணெய் தேய்த்துக் குளிக்க சரியான நேரம்.

நன்றாக எண்ணெய் தேய்த்த பின்  15 முதல் 30 நிமிடங்களுக்குள் குளித்துவிட வேண்டும். 

 

Leave a Reply

Your email address will not be published.