ஒலிவ் எண்ணெயில் அழகின் இரகசியம் (Olive oil Beauty tips)
நம் தலை முடி, முகம் உள்ளிட்ட உடலின் அனைத்து பாகங்களையும் அழகாகப் பராமரிக்க ஒலிவ் எண்ணெய் (Olive oil Beauty tips) பேருதவியாக இருக்கிறது.
- முகத்தில் தோன்றும் பருக்கள் , தழும்புகளைப் போக்குவதற்கு ஒலிவ் எண்ணெய் மிகவும் உபயோகமாக இருக்கும்.
- முழங்கால், முழங்கை சொரசொரப்புக்களைப் போக்குகிறது.
- தோலில் உள்ள செல்கள் சேதமடையாமல் இதிலுள்ள வைட்டமின் இ சத்து பாதுகாகின்றது.
- ஆலிவ் எண்ணெய் மேக்கப்பை நீக்க பயன்படுகின்றது.
- உங்களது சருமத்தை மிருதுவாக்கவும் உதவுகிறது.
- ஆலிவ் ஒயில் மசாஜ் பொலிவான மிளிரும் சரும தோற்றத்தை தரும்.
- வயதாவதை தடுகின்றது.
அதாவது இளமை தோற்றத்தை பெற ஒலிவ் எண்ணெய் உதவி புரிகிறது .
ஒலிவ் எண்ணெயில் இருக்கும் அழகு ரகசியம் (Olive oil Beauty tips)
உதடுகள் வறட்சி உள்ளவர்கள், ஒலிவ் எண்ணெயில் சிறிது சர்க்கரை கலந்து, உதடுகளில் தடவி 5 நிமிடங்கள் மசாஜ் செய்வதால், இரத்த ஓட்டம் அதிகரிக்கிறது. உதடுகளும் லிப்ஸ்டிக் போடாமலேயே ஆப்பில் நிறத்தில் ஜொலிக்கும்.
இந்த எண்ணெய் அனைத்து வகையான சருமத்தினருக்கும் ஏற்ற ஒன்று. இதில் ஆன்டி-ஆக்ஸிடன்ட் பொருள் ஏராளமாக இருப்பதால் தான், இது சரும பராமரிப்பிற்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது.


வறண்ட தோல் உள்ளவர்களுக்கு ஒலிவ் எண்ணெய் சிறந்த மாய்ஸ்சரைஸராகப் பயன்படுகிறது.வ றட்சியால் ஏற்படும் சரும பாதிப்புகளைத் தடுக்க மாய்ஸ்சரைஸர் முக்கியம். அதற்கு இயற்கை முறையில் ஆலிவ் எண்ணெய் உதவுகிறது. பொடுகுத் தொல்லை இருப்பவர்கள் ஒலிவ் எண்ணெயை தலைக்குக் கண்டிஷ்னர் ஆக பாவிக்கலாம்.இது தலையில் உள்ள வறட்சியை போக்குகின்றது. பொடுகு தொல்லை தீரும். அதோடு தலைமுடியின் வேர்களையும் பாதுகாக்கிறது.
நகம் வளர்த்து அதில் வகை வகையான நெயில் ஆர்ட் செய்வதுதான் இன்றைய டிரெண்ட். ஆனால் நகங்கள் உறுதியாக இருந்தால் தான் அவை சாத்தியம். அதற்கும் ஆலிவ் எண்ணெய் தான் உதவுகிறது.ஒலிவ் எண்ணெயை கை விரல்களில் தடவி மசாஜ் செய்யாலாம் . அல்லது நகங்களை ஒலிவ் எண்ணெயில் ஊற வைக்கலாம்.இதன் மூலம் கை நகங்கள் உறுதியாகவும், பளபளப்பாகவும் மாறும்.