மந்திரங்களுக்கு எல்லாம் மூலாதாரமாக, முதன்மையானதாக, உயிராக இருப்பது ‘ஓம் (Om Mandra) எனும் மந்திரமாகும். இந்த மந்திரத்துக்கு ‘பிரணவ மந்திரம்‘ என்ற பெயரும் உண்டு.
நாம் சொல்லும் மந்திரங்களிலும் நாமங்களிலும் “ஓம்’ என்ற பிரணவத்தை முதலில் கூறக் காரணமே, சொல்லும் மந்திரங்களும் தெய்வங்களின் நாமங்களும் உயிரோட்டமாக இருக்க வேண்டும் என்பதற்காகத் தான்.
‘ஓம்’ (Om Mandra) என்ற மந்திரத்தை நாம் தினசரி உச்சரிப்பதன் மூலம் உடலுக்கும் மனதுக்கும் மிகப்பெரிய பலன்கள் கிடைக்கின்றன என்பது பலரால் அனுபவப்பூர்வமாக நிரூபிக்கப்பட்டிருக்கிறது.
அநேகமாக நாம் பேசும் போது உள்காற்று வெளியேற்றப்படுகிறது; ஆனால் “ஓம்’ என உச்சரிக்கும் போது வெளிக்காற்று உள்வாங்கப்படுகிறது.
அ, உ, ம் என்ற எழுத்துகள் சேர்ந்தே ‘ஓம்’ என்ற பிரணவ ஒலி பிறக்கிறது. உலகளாவிய ஒலியான ஓம் என்னும் மந்திரம் ‘ ஆ ‘ , ‘ஓ ‘ ,’ம்’ ஆகிய மூன்று அசைகளால் உருவானது.
நாம் ‘ஆ’ என்று ஓசை எழுப்பும் போது உடம்பின் கீழ் பகுதி முதல் வயிற்றுப் பகுதிவரை இயக்கம் பெறுகிறது. ‘ஓ’ என்று உச்சரிக்கும்போது மார்புப் பகுதிகள் இயக்கம் பெறுகின்றன.’ம்’ என்று ஒலி முகத்தசைகள் மற்றும் மூளைப் பகுதியைத் தூண்டும்.
இதற்கு ‘பரமாத்மாவே’ ஜீவனாகிய என்னை உன்னோடு சேர்த்துக்கொள்’ என்று அர்த்தம். அதனால் தான் கடவுள் பெயரை உச்சரிக்கும் முன்பும் ஓம் நமசிவாய, ஓம் நமோ நாராயணா, ஓம் சக்தி, ஓம் முருகா என்று சொல்கின்றோம்.
இந்த பிரபஞ்சமே ஓம் எனும் அச்சாணியில் தான் சுழன்று கொண்டிருக்கின்றது. எனவே ஓம் என்று சொல்ல… சொல்ல…பஞ்சபூத சக்திகளும் உடலில் ஊடுருவி மின்சக்தி, காந்த சக்தியை உருவாக்குகிறது.
இதனால் நோய்கள் நீங்கி உடலும், உள்ளமும் ஆரோக்கியத்துடன் புத்துணர்ச்சியாக இருக்கும்.
மனிதனுக்குள் எப்போதும் தெய்வத் தன்மையும், அசுரத்தன்மையும் போரிட்டுக் கொண்டேதான் இருக்கும். இந்த அசுரத் தன்மையை வெல்லும் சக்தி கொண்டது தான் ‘ஓம்’ என்ற புனித சொல். இதனை சற்று சத்தமாகவும் சொல்லலாம் அல்லது மனதிற்குள்ளேயும் சொல்லலாம்.
மனதில் ‘ஓம்’ என்ற எழுத்தினை கவனத்தில் நிறுத்தியும் தியானம் செய்யலாம். ‘ஓம்’ என்ற உச்சரிப்பு நீண்டு நிதானமாய் சொல்ல வேண்டியது அவசியமாகும்.
‘ஓம்’ சொல்வது யாகம் செய்வதற்கும், தானம் செய்வதற்கு ஒப்பானது என்றும் விவரிக்கப்படுகின்றது. 3 – இந்த முறையில் ‘ஓம்’ எழுதப்படும் பொழுது முதல் வளைவு விழித்திருக்கும் நிலையையும், ஒரு வளைவு கனவு நிலையையும், கீழ் விளைவு ஆழ்நிலை தியானத்தினையும் குறிப்பிடுவதாகக் கூறப்பட்டுள்ளது.
மேல் உள்ள புள்ளி துரிய நிலையினை உணர்த்துவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வடிவமைப்பு மகா கணபதியின் வடிவமைப்பாக குறிப்பிடப்படுகின்றது.
‘ஓம்’ மந்திரத்தை தொடர்ந்து சொல்லுவதால்
இம் மந்திரம் நம்மை தியான நிலைக்குக் கொண்டு செல்கிறது. உடலையும் மனதையும் தளர்த்தி, ஆற்றலை சேமிக்கச் செய்கிறது.எண்ண ஓட்டங்களையும், கவனச்சிதறல்களையும் சரிப்படுத்தி மனதை ஒருமுகபடுத்துகிறது.
ஓம் என்னும் மந்திரத்தை, 11 முதல் 18 முறை உச்சரித்து விட்டுச் தூங்கசென்றால், ஆழமான உறக்கம் கிடைக்கும். ஆழ்ந்த உறக்கத்தில் தான் மூளைக்கு அவசியமான ‘மெலடோனின்’ என்ற ஹார்மோன் சுரக்கிறது.
நாளும் ‘ஓம்’ என்று உச்சரித்து வர நம் எண்ணங்களின் மீது சுயக்கட்டுப்பாடு அதிகரிக்கிறது. இதனால், தேவையற்ற சிந்தனைகள், எண்ணங்கள், உணர்வுகள் உருவாவது தடுக்கப்படுகிறது.
சோர்வாகவும், களைப்பாகவும், பணியில் சரியான கவனம் செலுத்த முடியாமலும் இருப்பவர்கள், தினமும் காலை எழுந்தவுடன் 20 நிமிடங்கள் ‘ஓம்’ என்ற மந்திரத்தைச் சொல்லி வர மூளையில் ‘எண்டார்பின்’ என்னும் ஹார்மோன் சுரப்பு அதிகரிக்கிறது. இதனால், நாள் முழுதும் உற்சாகமான, மகிழ்ச்சியான மனநிலை கிடைக்கும்.
‘ஓம்’ மந்திரத்தை தொடர்ந்து சொல்லிவர, ஹார்மோன் குறைபாடுகள் சரியாகும். மாதவிடாய் காலங்களில் மற்றும் மெனோபாஸ் காலங்களில் மன ஊசலாட்டம் (மூட் ஸ்விங்ஸ்) கட்டுப்படும்.
இந்த மந்திரத்தை தொடர்ந்து உச்சரித்துக்கொண்டிருந்தால், உடலுக்குத் தேவையான ஆற்றல் கிடைத்து, நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாவதுடன், இன்சுலின் சுரப்பும் சீராக உள்ளது என்று சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரிந்துள்ளது
ஓம் எனும் புனித சத்தம்
அ+உ+ம் என்பவற்றின் சேர்க்கை
பூமி + ஆகாயம் + தேவ உலகம்
ப்ரம்மா + விஷ்ணு + சிவம்
ரிக் / யஜீர் + சாம வேதங்கள்
என்பதினை ‘ஓம்’ உணர்த்துகின்றது.
அ+உ+ம் மூன்றினையும் இணைத்து ‘ஓம்’ என்று உச்சரிக்கும் போது வயிறு, தண்டு வடல் தொண்டை, மூக்கு, மூளை பகுதிகள் உயிர்ப்பிக்கப்படுகின்றன.
ஒலியினால் உருவாகும் சக்தி இவ்விடங்களை புதுப்பித்து பாதுகாக்கின்றது.
யோகா பயிற்சி செய்பவர்கள் ஓம் சொல்லும் பயிற்சியினை அன்றாடம் யோகாபயிற்சிக்கு முன்னால் மேற்கொள்ளவது சால சிறந்தது.
இதனால் அவர்கள் கவனத்திறன் அமைதி, ஆற்றல் திறன் கூடுவதாகவும் மன அழுத்தம் நீங்குவதாகவும் கூறுவர்.
மனதின் முழு அழுத்தமும் ‘ஓம்’ என்ற சொல்லின் உச்சரிப்பில் முழுவதுமாகத் தீர்வதாக ஆய்வில் அறியப்பட்டது.
இந்த ‘ஓம்’ சத்தமே வெட்ட வெளியில் சூரியினைச் சுற்றி இருப்பதாக நாசா ஆய்வு மையம் கூட கூறியுள்ளது. படிப்பு, விளையாட்டு என எந்த துறையிலும் ‘ஓம்’ நாமம் தினம் சொல்லி பழகுபவர்கள் சிறந்த திறமையினை வெளிக் கொண்டு வருவதினை அனுபவ ரீதியாக குறிப்பிடுகின்றனர்.
மனநிலை சீராவதால் அவரது சொல், செயல் அனைத்தும் பண்பானதாக இருக்கின்றது.
உடலும், மூட்டுகளும் மென்மையானதாக இருக்கின்றன.
அடுத்து, காதுகள் “ஓம்’ என்ற பிரணவ எழுத்து வடிவத்திலேயே அமைந்துள்ளன. நமது காதுகளுக்குள்ள தனிச்சிறப்பு என்னவெனில், இது எப்போதும், எக்காலமும் நிறம் மாறாத ஓர் உறுப்பு
பிறந்த குழந்தை பெரியவனானதும் எந்த நிறத்திலிருக்கும் என்பதை அறிய குழந்தையின் காதுகளின் நிறத்தை வைத்தே தெரிந்துகொள்ளலாம். காரணம் காதுகள் ஒருபோதும் நிறம் மாறுவதில்லை.
ஆக, நாம் கருவில் “ஓம்’ என்ற பிரணவத்தின் எழுத்து வடிவத்திலிருந்தோம். ஒலி அதிர்வுகளைக் கேட்க வைக்கும் காதுகள் “ஓம்’ என்ற எழுத்து வடிவத்தில் நிலையாக அமைந்துவிட்டது.
இன்றைய நவீன உலகில் தினந்தோறும் நாம் எவ்வளவோ ஒலிகளைக் காதுகளால் கேட்கிறோம். கண்களால் எவ்வளவே காட்சிகளைக் காண்கி றோம். ஆனால் அவற்றிலெல்லாம் கிடைக்காத சுகத்தை, மன அமைதியை “ஓம்’ என்ற பிரண வத்தை உச்சரிப்பதாலும் காதுகளால் கேட்பதாலும் பெற முடிகிறது.
மந்திரம் சொல்லும் முறை (Om Mandra)
வீட்டிற்குள் ஒரு அமைதியான இடத்தினை தேர்வு செய்யுங்கள். 15-20 நிமிடம் இதற்கென தனி நேரம் ஒதுக்குங்கள். சிறிது நேரம் அமைதியாய் அமர்ந்து உங்கள் மூச்சினை கவனியுங்கள்.
கண்கள் மென்மையாய் மூடி இருக்கட்டும். பின் ‘ஓம்’ என்ற சொல்லினை அ, உயரம் என்ற முறையில் சத்தமாகசொல்லுங்கள்.
முடிந்த வரை கண்களை மென்மையாய் மூடி மூச்சினை கவனியுங்கள். தினமும் இதனை செய்யுங்கள்.
கருப்பையில் இருக்கும் குழந்தை ஓம் வடிவில் தான் உள்ளது என்பதே ஓம் மந்திர சொல்லுக்கும், மனித வாழ்விற்கும் உள்ள நெருங்கிய தொடர்பினை உணர்த்தும்.
ஆலயத்தினுள் எழுப்பப்படும் “ஓம்’ என்ற மந்திர அதிர்வலைகள் நம் உடலெங்கும் பாய்ந்து, நம்மை ஒரு பரவச நிலைக்குக் கொண்டு செல்கின்றன. அது மந்திர ஜாலமா, மாயா ஜாலமா, இந்திர ஜாலமா என்பதை நாமறியோம். ஆனால் அது நமது ஐம்புலன்களையும் ஒரு சேர அதிரவைத்து, அடக்கி கட்டுக்குள் வைக்கிறது என்பது மட்டும் உண்மை.
“ஓம்’ (Om Mandra) என்ற பிரணவத்தை உச்சரிக்கும்போது முதல் முதல் நாபியில் அதிர்வலைகள் உருவாகி, உடலெங்கும் மின் ஆற்றல் பாய்வதை உணர முடியும். இந்த அதிர்வலைகளில் ஒருவித காந்த சக்தி இருப்பதை உணரலாம். இன்று மருத்துவ உலகில் மின்காந்த சிகிச்சையினால் பல நோய்கள் குணப்படுத்தப்படுகின்றன.
“ஓம்’ என்ற மந்திரத்தை உச்சரித்தாலே உடல் நோய்கள் அனைத்தும் சூரியனைக் கண்ட பனிபோல மறைகின்றன. இந்த மந்திரம் உச்சரிப்போரையும் கேட்போரையும் எந்த நோய்களும் எளிதில் அண்டுவதில்லை.
காரணம் “ஓம்’ என்ற மந்திரத்தின் அதிர்வலைகள் உடலிலுள்ள அனைத்து உறுப்புகளையும், ரத்த நாளங்கள் மற்றும் நரம்பு மண்டலங்களையும் தட்டி எழுப்பி, சீராக இயங்கச் செய்து, யோகம் செய்த பலனைத் தருகிறது.
“ஓம்’ மந்திரத்தின் சிறப்பின் சாட்சியாக இயற்கை
உத்ராஞ்சல் வழியாக திருக்கயிலை செல்லும் போது, இமயமலைத் தொடரில் “நாபிதாங்’ என்றொரு இடம் இருக்கிறது. “நாபி’ என்பதற்குத் தொப்புள் என்பதே பொருள் .இந்த நாபிதாங் என்ற இடத்தில் மூன்று பெரிய மலைச் சிகரங்கள் அமைந்துள்ளன.
அவற்றுள் “ஓம் பர்வதம்’ (ஓம் மலை) என்றழைக் கப்படும் மலையானது நம்மை பிரமிக்க வைக்கிறது. காரணம், அந்தப் பெரிய மலையில் “ஓம்’ (ற்) என்ற வடமொழி எழுத்தை, மலை முழுக்க எழுதியிருப்பதைப் போன்று இயற்கையாகவே பனிப்போர்வைகளால் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த மலைக்குப் பக்கத்தில் “நாபி பர்வதம்’ (தொப்புள் மலை) என்ற மற்றொரு மலை உள்ளது. மனித உடலிலுள்ள தொப்புளைப் போல இயற்கையாகவே அமைந்துள்ளது இந்த மலை. இந்த அமைப்பி னாலேயே அந்த இடத்தின் பெயரும் “நாபிதாங்’ என்ற காரணப் பெயராயிற்று.
மூன்றாவதாக அமைந்துள்ள “திரிசூல பர்வதம்’ (திரிசூல மலை) மூன்று சிகரங்களுடன் அந்த லோகநாயகன்- லோக நாயகியை நினைக்க வைக்கிறது. இந்தக் காட்சிகளை மனக்கண்ணில் நிறுத்தி நினைத்து பார்த்தால் ஓம் என்னும் பிரணவ மந்திரத்தின் மகிமைகள் உண்மையிலேயே நம்மை சிலிர்க்க வைக்கிறதல்லவா.
யார் “ஓம்”, “ஓம்”, “ஓம்” என்று சதா உச்சரிக்கின்றார்களோ அவர்கள் நவக்கிரகங்களின் கதிர்வீச்சுகளால் அதிகம் பாதிக்கப்படுவதில்லை.
தொடர்ந்து ‘ஓம்’ என்று சொல்லும் பயிற்சி செய்ய மனது அமைதி ஆகும். மூச்சு சீராகும். தேவையில்லா எண்ணங்கள் நீங்கும். உடல் சக்தி கூடும்.
எனவே ஓம் எனும் மந்திரத்தைநாளும் சொல்லி பலன் பெறுவோம் !