ஓம கசாயம் எளிய செய்முறை (Oma kashayam)

ஓமம் கசாயம் (Oma kashayam) ஒரு மூலிகைத்தேநீராகக் குடித்து வரலாம்.இருமல், சளி, நெஞ்சு சளி,ஆகியவை வெளியேறாமல் துன்பப்படுபவர்கள் இந்தக் கசாயத்தைக் குடித்து உடனேயே இருமும்போதே நெஞ்சுக்குள் இருக்கும் சளி வெளியேறி நுரையீரல் சுத்தமடைவதைப் பார்க்க முடியும்.
நுரையீரல் மண்டல பிரச்சினைகள், அடிக்கடி ஏற்படும் சளி ,இருமல் ,தும்மல் ,காய்ச்சல், மூச்சு விடுவதில் ஏற்படும் சிரமம், குழந்தைகளின் தூக்கமின்மையால் மனதில் ஏற்படும் பிரச்சினைகளையும் தீர்க்கும் அழகான அரு மருந்து ஓமக்கசாயம்(Oma kashayam).
குழந்தைகளுக்கு, ஆஸ்துமா நோயாளிகளுக்கு நெஞ்சு சளி மிகப்பெரிய சவாலாக இருக்கின்றது.நெஞ்சுக்குள் நிறைய சளி இருந்து வெளியில் வராமல் துன்பப்படுத்தும் ஒரு நிலை.இதற்கு ஓமகஷாயம் நல்ல பலன் தரும்.
இந்த கசாயம் நுரையீரலில் ஏற்படும் எல்லாவிதமான அழற்சிகளையும் தேவையற்ற கபங்களின் சேர்க்கையையும் குறைத்து உடலை ஆரோக்கியமாக வைக்க உதவுகின்றது.
குழந்தைகளுக்கு ஏற்படும் சளி ,இருமல், தும்மல், காய்ச்சல் தொடர்பான பிரச்சினைகள் அடிக்கடி மருத்துவமனை செல்ல வேண்டிய நிலை, வாரம் ஒருமுறை தான் தலைக்கு குளிக்க முடிகிறது, அப்படி குளித்தாலும் தலைக்கு குளித்த உடன் தும்மல் வந்து விடுகிறது, மூக்கில் தண்ணீர் வடிகிறது, மாலையில் தொண்டை பாதிப்பு ,இரவில் காய்ச்சலுடன் கூடிய சளியினால் அவதிப்படுகிறார்கள் இந்தக் கசாயம் குடித்து வர இந்தப் பிரச்சினைகள் குறைந்து கொண்டே வரும்.
simple recipe to make the oma kashayam,annaimadi.com,அன்னைமடி,ஓம கஷாயம் ,ஓம தேநீர்,ஓமம் கசாயம் செய்யும் முறை,benefits of omam,ஓமத்தின் பயன்கள் ,To recover from Astma,ஆஸ்துமாவிற்கு தீர்வு,ஆஸ்துமாவிற்கு இயற்கை மருந்து, oma kashayam recipe,ajwain tea,Carom seed ,

ஓமகசாயம் செய்யும் முறை (Oma kashayam recipe)

1.ஓம தூள்- இரண்டு கிராம்
2.கசகசா- இரண்டு கிராம்
3.திப்பிலி தூள்- இரண்டு கிராம்
4.ஆடாதொடை இலை /இலை தூள்- இரண்டு கிராம்
 
நான்கு பொருட்களையும் எடுத்து நானூறு மில்லி தண்ணீரில் போட்டுக் காய்ச்சி நூறு மில்லி கசாயமாக சுருக்கி வடிகட்டி உணவுக்கு அரை மணி நேரம் முன்னதாக குடித்து வர வேண்டும்.
தேவைப்பட்டால் நாட்டு சர்க்கரை,பனை வெல்லம் ,பனங்ககற்கண்டு அல்லது தேன் கலந்தும் குடிக்கலாம்.
 
பன்னிரெண்டு வயதுக்கு கீழ் உள்ளவர்கள் தினமும் இரண்டு வேளைகள் ஒரு வேளைக்கு ஐம்பது மில்லி இந்தக் கசாயம் குடித்து வர வேண்டும்.
பன்னிரெண்டு வயதுக்கு மேற்பட்டவர்கள் தினமும் இரண்டு வேளைகள் உணவுக்கு அரை மணி நேரம் முன்னதாக ஒரு வேளைக்கு நூறு மில்லி இந்தக் கசாயம் குடித்து வர வேண்டும்.
ஆஸ்துமா இருப்பவர்களுக்கு இயற்கையாக உண்ணக் கூடிய சிலபொருட்களை மருந்தாகவோ உணவாகவோ தொடர்ந்து சாப்பிட்டு வருவதை வழக்கமாகக் கொண்டு வந்தால்  நோயிலிருந்தும் அதன் பக்க விளைவுகளில் இருந்தும்  தப்பிக்கலாம்.
 
simple recipe to make the oma kashayam,annaimadi.com,அன்னைமடி,ஓம கஷாயம் ,ஓம தேநீர்,ஓமம் கசாயம் செய்யும் முறை,benefits of omam,ஓமத்தின் பயன்கள் ,To recover from Astma,ஆஸ்துமாவிற்கு தீர்வு,ஆஸ்துமாவிற்கு இயற்கை மருந்து, oma kashayam recipe,ajwain tea,Carom seed ,
தற்போது தூக்கமின்மை பெரியவர்களை மட்டுமன்றி குழந்தைகளையும் பாதிக்கின்றது அதனால் அப்படிபட்ட குழந்தைகள் ,கோபம்,பிடிவாதம், முரட்டுதனம் போன்றவற்றால் பாதிக்கப்படுகின்றனர் அந்த பிரச்சினைகளில் இருந்து படிப் படியாக விடுபட இந்தக் கசாயம் உதவும்.
குழந்தைகளின் மனதில் இருக்கும் எதிர்மறை உணர்வுகள் படிப்படியாக குறைந்து நேர்மறையான எண்ணங்கள் அதிகமாகி படிப்படியாக இயல்பு நிலைக்கு திரும்புவார்கள்.
குழந்தைகளின் மன அழுத்தம் மன இறுக்கம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளைத் தீர்க்கும் அழகான அரு மருந்து இது.
 

ஓம கஷாயம் (தேநீர்) செய்வதற்கான எளிய செய்முறை 

உங்கள் சுவைக்கு ஏற்ப மற்ற மசாலாப் பொருட்களைச் சேர்க்கலாம்.

தேவையான பொருட்கள்

ஓமம் – 2 டீஸ்பூன்

இஞ்சி – 2 டீஸ்பூன் துருவியது அல்லது நசுக்கியது

சீரகம் – 2 டீஸ்பூன்

தண்ணீர் – 2 கப்

ஒரு கடாயில் ஓமம் மற்றும் சீரகத்தை வறுக்கவும். தண்ணீர் மற்றும் இஞ்சி சேர்த்து ஒரு கொதி வர விடவும். வெப்பத்தை அணைத்து, மூடியை மூடி, குளிர விடவும். வடிகட்டி குடிக்கவும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *