இயற்கையை காக்கும் இயற்கைவிவசாயம் (Organic farming)

இயற்கை விவசாயம் (Organic farming) என்பது “இயற்கையின் சுழற்சிகளை மையமாக கொண்டு செயல்படும் வேளாண்மை முறை” இயற்கையின் போக்கில் இணைந்து விவசாயம் செய்வது தான் இயற்கை வேளாண்மை (Organic farming).
“சுழன்றும் ஏர் பின்னது உலகம் அதனால்
உழந்தும் உழவே தலை”
இயற்கையை ஆழ்ந்து கவனித்தாலே இயற்கை வேளாண்மையை (Organic farming) கற்றுக்கொள்ளலாம்.
காட்டிலுள்ள மரங்களை பார்த்தாலே இயற்கை வேளாண்மையை கற்று கொள்ளலாம்.
காட்டில் யாரும் விதைகளை விதைப்பதும் இல்லை. உழுவதும் இல்லை. களை எடுப்பதும் இல்லை.
அவை தானாகவே வளருகின்றன.அதன் நல்வளர்ச்சிக்கு காரணம் நல்ல வளமான மண் அங்கு இருப்பதேயாகும்.
மேலும் மரங்களிலிருந்து விழும் இலை தழைகள் போன்றவை அப்படியே நிலத்தில் விழுந்து உரமாகி மண்ணிற்கு ஈரப்பதத்தை கொடுகின்றது. இது தான் இயற்கை வேளாண்மையின் அடிப்படை.
 
உலகில் எண்ணற்ற தொழில்கள் நடந்து வந்தாலும் ஏர்த்தொழிலாம் விவசாயத்தின் பின்னால் தான் இந்த உலகம் இயங்குகின்றது. விவசாயம் தான் உலக ஜீவராசிகள் அனைத்திற்கும் உயிர் ஊட்டுகிறது.
மனிதன் நாகரிகம் அடைவதற்கு வழிவகுத்தது விவசாயம் தான்.
வேளாண்மை என்பது உலக உயிர்களின் பசியைப் போக்குவதற்கு பயிர்களை விளைவிப்பதாகும்.
இயற்கை வேளாண்மை ,Organic farming,annaimadi.com,இயற்கை விவசாயமும் இயற்கை பாதுகாப்பும்,அன்னைமடி,Natural agriculture,பாரம்பரிய வேளாண்மை,Traditional agriculture,Basic stages of organic farming

இயற்கை பற்றாளர் தந்தை மசானபு ஃபுகோகா(Father Masanabu Fukoka)

இயற்கை வேளாண்மை (Organic farming) பற்றி பேசும் இந்த நேரத்தில் நாம் கண்டிப்பாக இயற்கை வேளாண்மையின் தந்தை மசானபு ஃபுகோகா அவர்களின் கருத்துகளைப் பற்றியும் நினைவு கூற வேண்டும்.
ஜப்பான் நாட்டை சேர்ந்த ஃபூகோகா அவர்கள் இயற்கையின் பின்னணியில் செடிகள் வளர்ப்பில் பல ஆராய்ச்சிகள் செய்து தமது “ஒற்றை வைக்கோல் புரட்சி” எனும் நூலின் மூலம் இவ்வுலகிற்கு இயற்கை வேளாண்மையின் இன்றியமையாமை பற்றி எடுத்துரைத்துள்ளார்.
இயற்கை விவசாயத்திற்கு
 • எந்த ஒரு இரசாயன உரங்களும் தேவை இல்லை
 • பூச்சிக்கொல்லி மருந்துகள் தேவை இல்லை
 • அடிக்கடி களை எடுக்கத்தேவை இல்லை
 • அடிக்கடி மண்ணை உழத்தேவை இல்லை
 • இயந்திரங்களும் தேவை இல்லை
இயற்கையே அனைத்தையும் நிகழ்த்தும். மனிதன் எதுவும் செய்யத் தேவை இல்லை என்கிறார். அவருடைய ஆராய்ச்சியை அடிப்படையாகக் கொண்டு இன்று உலகில் பல இடங்களில் இயற்கை விவசாயம் நடை பெற்று வருகிறது .

இயற்கை விவசாயம் என்பது என்ன?(Organic farming or Natural agriculture)

இயற்கை வேளாண்மை என்பது இயற்கையை இம்சைப்படுத்தாமல் ,இயற்கையின் போக்கில் இணைந்து விவசாயம் செய்வது.
(Organic farming) உயிருக்கு தீங்கு விளைவிக்கின்ற இரசாயன உரங்களையோ, வேதியியல் பூச்சிக்கொல்லிகளையோ, களைகொள்ளிகளையோ பயன்படுத்தாமல் இயற்கை முறையில் விவசாயம் செய்வதாகும்.
இன்றிருக்கும் நிலையில் நம் மண் வளம் தரமற்றதாகிவிட்டது.மலடாகிய மண்ணை நல்ல மகசூல் கிடைக்கும் மண்ணாக மாற்ற நாம் சில தொழில்நுட்பங்களை இயற்கை வேளாண்மையில் புகுத்த வேண்டிய அவசியத்தில் உள்ளோம்.
அவை பயிர் சுழற்சி முறை, கலப்பு பயிர் பயிருடுதல், உயிர் பூச்சிக்கொல்லிகள் போன்றவற்றை பயன்படுத்துவதாகும்.
மேலும் ஒற்றை நாற்று நடவு, மூடாக்கி போடுதல், உரக்குழிகள் வெட்டுதல், பயிர்களுக்கு இடையே காற்றோட்டத்தை பராமரிப்பது, நாட்டு விதைகளை பயன்படுத்துவது போன்ற தொழில்நுட்பங்களும் இயற்கை வேளாண்மையுடன் இணைந்ததாகும்.
இயற்கை வேளாண்மை ,Organic farming,annaimadi.com,இயற்கை விவசாயமும் இயற்கை பாதுகாப்பும்,அன்னைமடி,Natural agriculture,பாரம்பரிய வேளாண்மை,Traditional agriculture,Basic stages of organic farming

பாரம்பரிய வேளாண்மை (Traditional agriculture)

இந்தியாவின் முதுகெலும்பே விவசாயம் தான். அதன் புகழை தரணியில் உயர்த்தியதே அதன்  தங்கப்புதல்வர்களாகிய விவசாயிகள் தான்.
நம் முன்னோர்கள் எந்த ஒரு இரசாயன உரங்களையோ, களைகொள்ளிகளையோ பயன்படுத்தாதலால் தான் மாடு கட்டி போரடித்தால் மாளாது என யானை கட்டி போரடித்தனர். அதிகளவு மகசூல் பெற்றனர்.
 
ரசாயன உரங்களை பயன்படுத்தியதன் விளைவாக நாம் இன்று பல நோய்களை அனுபவிக்கின்றோம் நீரழிவு, புற்றுநோய், மலட்டுதன்மை, பிறவி ஊனம், கண் பார்வை குறைவு போன்ற பல நோய்கள் இன்று எங்கும் பரவியதற்கு காரணம் நம் மண்ணில் கலந்துள்ள ரசாயன மற்றும் பூச்சிக்கொல்லி இவற்றின் எச்சங்களால் தான்.
 
மண் வளத்தை பொறுத்து தான் மகசூல் உள்ளது. வளமான மண் இன்று வளம் குன்றி கலங்கமானதற்கு விவசாயத்தில் ரசாயன பூச்சிக்கொல்லிகளையும் உரங்களையும் பயன்படுத்தியதே காரணம்.
 
தற்கால நவீன விவசாயத்தில் அதிக அளவு ரசாயன உரங்களை பயன்படுத்தியதன் விளைவாக முதலில் மகசூல் அதிகமானாலும், பின்னால் மண்ணின் வளம் குன்றி விவசாயத்தின் வளர்ச்சி குன்றி விட்டது. சுற்றுசூழல் சீர்கேட்டையும், மனித ஆரோகியத்தையும் கெடுத்து விட்டன.
 
செடி வளர்வதற்கு தேவையான தழைச்சத்து (நைட்ரஜன்) கிடைப்பதற்கு நாம் நவீன ரசாயானத்தை மையமாகக்கொண்ட விவசாயத்தில் யூரியா போன்ற உரங்களை போடுகின்றோம். ரசாயன உரங்களில் உள்ள நைட்ரேட் மழைபெய்யும் காலங்களில் மழை நீரால் அடித்து செல்லப்பட்டு நிலத்தடி நீரை அசுத்தப்படுத்துகிறது.
 
இயற்கை வேளாண்மை முறையில் தழைச்சத்து, மணிச்சத்து, சாம்பல்சத்து போன்றவை கிடைப்பதற்கு பல வழிகள் உள்ளன. அவற்றுள் ஒன்றுதான் கலப்பு பயிர் முறை.
ரைசோபியம் எனும் பாக்டீரியா தான் தழைச்சத்தை வளிமண்டலத்திலிருந்து கிரகித்து செடிகளுக்கு கொடுக்கிறது. கலப்பு பயிராக நாம் துவரை, அவரை போன்ற இரு வித்திலை தாவரங்களை பயிரிடும் போது ரைசோபியம் எனும் பாக்டீரியாக்கள் அத்தாவரங்களின் வேர் முடிச்சுககளில் பல்கி பெருகுகின்றது. இதனால் மண்ணிற்கு தழைச்சத்து கூடுகிறது மண்ணும் வளமடைகிறது.

இயற்கை வேளாண்மையின் அடிப்படை நிலைகள்(Basic stages of organic farming)

 • பயிர் சுழற்சி முறை
 • கலப்பு பயிர் மற்றும் ஊடுபயிர் சாகுபடி
 • இயற்கை பூச்சி விரட்டிகளைப் பயன்படுத்துதல்
 • மூடாக்கி போடுதல்
 • இயற்கை உரங்கள் மற்றும் பயிர் வளர்ச்சி ஊக்கிகளைப் பயன்படுத்துதல்
 • தரமான நாட்டு விதைகளைப் பயன்படுத்துதல்
பழங்காலத்திலிருந்தே நம் முன்னோர்கள் பலதரப்பட்ட பயிர் வகைகளை கலந்து பயிரிட்டு வந்தனர். இப்படி கலந்து பயிரிடுவதால் ஒரு செடியின் தேவையை மற்றொரு செடி நிறைவேற்றும். எடுத்துக்காட்டாக தக்காளி மற்றும் சணப்பு கலந்து பயிரிட்டனர்.இதன் மூலம் தக்காளி மகசூல் கூடியது.சோளத்துடன் தட்டை பயிரை கலந்து பயிரிடும் போது தட்டை பயிரின் நெடி சோளத்தைத் தாக்கும் தண்டு தாக்குதல் நோயைத் தடுக்கும்.
 
 
தற்போது உலகில் யாரும் கற்பனை செய்து பார்த்திராத வகையில் பூமி அதிர்வுகள், ஆழிப்பேரலைகள் (சுனாமி) பூகம்பம், பனிகட்டி உருகுதல், கடல் நீர் மட்டம், உயர்வு உடைதல், பூமி வெப்பம் ஆகுதல், விளை நிலங்களெல்லாம், களர் நிலமாகவும், உவர்நிலமாகவும், உப்பு படிந்த நிலமாகவும், உப்பு தண்ணீராகவும், நஞ்சுடைய நீராகவும் மாறிவிட்டது.
இவற்றிலிருந்து நம்மையும் நமது  பூமித்தாயையும் காப்போம்!
இயற்கை விவசாயம்(Organic farming) செய்வோம்!
முடியாதவர்கள் விளை பொருட்களை நியாயமான விலைக்கு வாங்கி செய்வோரை ஊக்குவிப்போம்! 
இயற்கையுடன் இணைந்து செல்வோம்!
இளையோருக்கும் உலகை விட்டு வைப்போம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *