அழகு கொடுக்கும் தலை முடியை காணிக்கையாகத் தருவது ஆண்டவனிடம் நம்மை ஒப்படைப்பதற்கு சமம் என்னும் நம்பிக்கையால் ,கடவுளுக்கு நேர்த்தி வைத்து மொட்டை அடித்துக்(Palani bald and sandalwood) கொள்ளப்படுகிறது.
ஏனெனில் , தலைமுடி மனிதனுக்கு அழகை தருவது ஒருபுறம் இருக்கட்டும். மறுபுறம் அது பெருமையான விடயம். இன்னும் சொல்லப் போனால், நான் என்ற ஓர் கௌரவமாக, ஒரு விதமான கர்வமாக பார்க்கப்படுகின்றது.
பழனி ,திருப்பதி, வாரணாசி,திருத்தணி, திருசெந்தூர், திருவண்ணாமலை, சமயபுரம் உள்ளிட்ட பல கோயில்களில் அதிகமாகவும் ஏனைய ஆலயங்களிலும் மொட்டை அடிக்கும் சடங்கு (Palani bald and sandalwood) பின்பற்றப்படுகிறது.
முதல் முடி காணிக்கை கொடுப்பதை விருப்பமான கோயிலிலோ குலதெய்வம் அல்லது கோயிலிலோ நிறைவேற்றுகிறார்கள்.மொட்டைஅடிப்பதால் தலையில் ஏற்படும் எரிவைக் குளிர்மை மூலம் போக்கவே சந்தனம் பூசப்படுகிறது.
பிளேடு போன்ற சாதனங்களால் குழந்தையின் தலையில் ஏற்பட்ட காயத்தின் எரிச்சலை குறைக்கவும், தலையில் குளிர்ச்சியை ஏற்படுத்தவும் தான்
இந்து சமயத்தில் மட்டுமன்றி புத்த சமயம், சமண சமயம், இஸ்லாம் சமயம், ரோமன் கேத்தோலிக்ஸ் போன்ற சமயங்களை பின்பற்றுபவர்கள், தங்கள் குழந்தைகளுக்கு மொட்டை அடிக்கும் பழக்கத்தைக் கொண்டுள்ளனர்.
குழந்தைக்கு முதல் முடி கொடுப்பது என்பது ஒவ்வொரு சமயத்திலும் வெவ்வேறு விதமாக செய்யப்படுகிறது.
ஆண் குழந்தை , பெண் குழந்தை என எந்த பேதமும் இன்றி எல்லா குழந்தைகளுக்கும் முதல் முறை மொட்டை அடிக்கப்படுகிறது.
மொட்டை போடுவதற்கு ஆன்மீக ரீதியான காரணங்கள்
கடவுளுக்குஒருவர் தன் தலைமுடியை காணிக்கையாக வழங்கி தன்னை ஏற்றுக்கொள்ளுமாறு கடவுளை வேண்டுதலே மொட்டையடித்தலின் உள் அர்த்தமாகிறது.
முடி இறக்குவது உடல் நலனுக்கும் நல்லதும் கூட. உயிர் ஆற்றல் மேல் நோக்கி எழும்ப தலை முடியை நீக்கிக் கொள்வது நல்லது என்றும் ஆன்மிகம் கூறுகிறது.பிறப்பு மற்றும் மறுபிறவி மீது அதிக நம்பிக்கை கொண்ட இந்து மதத்தினர் மொட்டை அடிப்பதன் மூலம் மறுபிறவியை தடுக்க முடியும் எனவும் நம்புகின்றனர்.
மொட்டை அடிப்பதால், உடலும் அந்த இடத்தில் தன் ஆற்றலை பாய்ச்சி சற்று உறுதியான, ஆரோக்கியமான முடியை வளர வைக்கும். முடி அடர்த்தியாகவே வளரும் என சில ஞானிகளால் சொல்லப்படுகிறது.
மொட்டை போடுவதற்கான அறிவியல் காரணங்கள்
இது ஆன்மீக ரீதியாக செய்யப்பட்டாலும், அறிவியல் ரீதியான காரணங்களும் இருப்பதாக நம்பப் படுகிறது.
தலையில் மொட்டை அடிக்கப்படுவதால் மீண்டும் முடிகள் ஆரோக்கியமாக வளரும் வாய்ப்பு உள்ளது.
தலையில் இருக்கும் அழுக்கு, கிருமிகள் அகலும். இதனால் முடி உதிர்வு பிரச்சனை சரியாகும். புதிதாக முடி வளர்வதற்கான ஆரோக்கிய சூழல் ஏற்படுகிறது.
விட்டமின் டி சத்து எளிதில் கிடைக்க உதவுகிறது. இதனால் எலும்பு, பல் வளர்ச்சி சீராக இருக்கும்.
குழந்தையின் முடி மிக மெலியதாக இருக்கும். மொட்டை அடித்த பின் திக்காக வளரும்.
குழந்தை வயிற்றில் உள்ள போது, இருந்த அசுத்தம், மண்டைத்தோலில் இருக்கும். அவை நீங்கும்.
ரத்த ஓட்டம் மேம்படும். முடி வளர்ச்சி நன்றாக இருக்கும்.
உடலும் ஆன்மாவும் சுத்தப்படுத்தப்படுவதாக நம்பப்படுகிறது.
மொட்டை அடிப்பதன் மூலம் 84 லட்சம் முற்பிறவிகளுடான நம்முடைய தொடர்பு துண்டிக்கப்படுகிறது என்பது இந்து சமுதாயத்தின் நம்பிக்கை. அதனால் முற்பிறவிப் பாவங்களின் தொடர்பு துண்டிக்கப்பட்டு குழந்தையின் எதிர்காலம் ஒளிமயமாகும் என்பது நம்பிக்கை.எடுக்கப்பட்ட முடி ,கோயில்களில் வைக்கப்பட்டுள்ள முடிக் காணிக்கை செலுத்தும் இடத்தில்போடப்படுகிறது.
இறைவனுக்கு செலுத்தப்படும் காணிக்கைகளில் மிகச் சிறந்த காணிக்கையாகக் கருதப்படுவது முடி காணிக்கை.
கடந்த பிறவியிலிருந்த தொடர்புகளைத் துண்டிப்பதற்காக மொட்டை போடுவதாக சொல்லப்படுகிறது.