அறுபடை வீடுகளில் பழனி முருகன் (Palani murugan) கோயில் முன்றாவது படை வீடு ஆகும். இந்தக் கோயில் 2,000 ஆண்டுகள் பழமை வாய்ந்த மிகவும் பிரசித்தி பெற்றது.
முருகபெருமான் ஞானத்தின் வடிவாக கோவில் கொண்டிருக்கும் புனித தலம் தான் “பழனி மலை ஸ்ரீ தண்டாயுதபாணி திருக்கோவில்”.தவவாழ்க்கை மேற்கொள்பவர்களுக்கும், ஆன்மீக தேடலில் இருப்பவர்களுக்கும் இங்கு சுலபத்தில் வந்துதவுவார் முருகபெருமான்.
இது தமிழ்நாட்டில், மதுரையில் இருந்து 115 கிமீ மேற்கே உள்ள பழனியில் அமைந்துள்ளது.ஆன்மீக ஞானம் பெற, திருமணம், குழந்தை பாக்கியம், வேலைவாய்ப்பு, தொழில், வியாபாரம் மேன்மை போன்றவற்றிற்காக அதிகளவில் பக்தர்கள் இங்கு வந்து வேண்டி கொள்கின்றனர்.
புராண காலங்களில் இந்த ஊர் “திருஆவினன்குடி” என்றும் “தென்பொதிகை” என்றும் அழைக்கப்பட்டிருக்கிறது. இந்த கோவிலின் இறைவனான முருகப்பெருமான் “தண்டாயுதபாணி” மற்றும் “குழந்தை வேலாயுதர்” என அழைக்கப்படுகிறார்.
பழனி கோவில் உருவாக ஏதுவான மாம்பழகதை (Palani murugan story)
ஒருநாள் நாரதர் மிக அரிதாக கிடைக்கும் ஞானப்பழத்தை பரமசிவனுக்கு படைப்பதற்காக கொண்டு வந்தார். அப்பொழுது அருகிலிருந்த உமையாள் அந்தப் பழத்தை தனது குமாரர்களான குமரனுக்கும், விநாயகனுக்கும் பகிர்ந்து கொடுக்க விரும்பினாள்.
ஆனால் பரமசிவனோ பழத்தை பகிர்ந்தால் அதன் தனித்தன்மை போய்விடும் எனக்கூறி தனது மைந்தர்கள் இருவருக்கும் ஒரு போட்டியை அறிவித்தார்.
அதில் உலகத்தை யார் முதலில் சுற்றிவருகிறார்களோ அவர்களுக்கு அந்த ஞானப்பழத்தை பரிசாக அறிவித்தார்.
குமரன் தனது மயில் வாகனத்தில் ஏறி உலகை சுற்றி வருவதற்குள்,விநாயகர் தனது பெற்றோரே உலகம் என கருதி அவர்களை சுற்றி வந்து மாம்பழத்தை பெற்றுக் கொண்டார்.
இதனால் ஏமாற்றமடைந்த முருகன் அனைத்தையும் துறந்து ஓரு மலையில் குடி அமர்ந்தார்.அவர் நின்ற இடமே பழனி ஆகும்.
தண்டாயுதபாணியின் சிறப்பு
பழனி முருகன்(Palani murugan) கோயில் பஞ்சாமிர்தம் உலகப் புகழ் பெற்றது. மிக்க அழகுடைய தங்கத் தேர், தங்க மயில் வாகனம் ஆகியவை உள்ள தலம்.
தமிழகத்தில் உள்ள கோயில்களிலேயே தினந்தோறும் தங்க தேர் இழுத்தலும் அதன் மூலம் ஏராளமான வருமானமும் வரும் கோயில் இதுதான். இத்தலம் ஏராளமான சித்தர்கள் வாழ்ந்த இடம்.
தமிழ்நாட்டில் உள்ள கோயில்களிலேயே அரசுக்கு மிக அதிகமான வருமானத்தை அள்ளித் தரும் முதல் கோயில் இதுதான்.
மலையில் நின்ற இவர் கையில் தண்டம் வைத்திருந்ததால், “தண்டாயுதபாணி’ என்று பெயர் பெற்றார்.
கல்வியை பயிற்றுவிக்கும் ஆசிரியர் எப்படி கையில் கொம்பை வைத்துக்கொண்டு மாணவர்களை அடிக்காமல், அவர்களை அதட்டி கல்வியை கற்பிக்கிறாரோ,அது போல் வாழ்க்கையில் எல்லாவற்றிலும் இருக்கும் நிலையாமையை நினைவுறுத்தி, மக்களை ஞானப்பாதைக்கு திருப்பும் “ஞானாசிரியனாக” இத்தலத்தில் கையில் தண்டத்துடன் காட்சியளிக்கிறார் பழனி ஆண்டவர்.
பழனிக்கோவிலைப் பற்றிய சுவாரஸ்யமான விடயங்கள் (Interesting Facts About Palani murugan)
பழனியில் முருகப்பெருமானை (Palani murugan) மூன்று கோலங்களில் தரிசிக்கலாம். பெரியநாயகி கோயிலில் மயில் வாகனம் இல்லாமல் வள்ளி, தெய்வானையுடன் திருமணக்கோலத்திலும், திருஆவினன்குடியில் மயில் மீது அமர்ந்து குழந்தை வடிவிலும், மலைக்கோயிலில் கையில் தண்டத்துடனும் காட்சி தருகிறார்.
ஒரே தலத்தில் இவ்வாறு முருகனின் மூன்று கோலங்களையும் தரிசிப்பது அபூர்வம்.
திருவண்ணாமலை யை சித்ராபவுர்ணமி அன்று எவ்வாறு கிரிவலம் வருகின்றனரோ அதுபோல் அக்னி நட்சத்திர நாளில் பக்தர்கள் இப்பழனி மலையை கிரிவலம் செய்வது மிகவும் சிறப்பானதாகும்.
நடந்து மலையை ஏற முடியாதவர்களுக்கு மலைக்கு மேல் செல்வதற்கு ரோப் கார் வசதியும் இருக்கிறது.
இங்கிருக்கும் முருகப்பெருமானுக்கு நல்லெண்ணெய், சந்தனம், பஞ்சாமிர்தம், விபூதி என்ற நான்கு பொருட்களை கொண்டு தான் அபிஷேகம் செய்யப்படுகிறது.
பன்னீர் அபிஷேகம் மார்கழி மாதத்தில் மட்டும் செய்யப்படுகிறது. சந்தனம், பன்னீர் தவிர்த்து மீதி அபிஷேக பொருட்கள் எல்லாம் முருகன் விக்கிரகத்தின் தலையில் வைத்து எடுத்துவிடுகின்றனர்.
முருகன் சிலை மீது வைத்து எடுக்கப்படும் “சிரசு விபூதி” சித்தர்களின் உத்தரவின் பேரில் பக்தர்களுக்கு வழங்கப்படும் அரிதான பிரசாதமாகும்.
ஒரு நாளில் ஆறு முறை முருகனுக்கு அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்யப்படுகிறது.இது ஐந்து முதல் ஏழு நிமிடத்துக்குள் முடிந்துவிடும். ஒரு முறை அபிஷேகம் செய்து அலங்காரம் செய்த பின்பு பூக்கள் அர்ச்சனை, மாலை சாற்றுவது போன்ற எதுவும் செய்யப்படுவதில்லை.
பழனி தண்டாயுதபாணிக்கு அபிஷேகம் செய்யப்பட்ட பழனி பஞ்சாமிர்தம் உலகப்புகழ் பெற்றது. இக்கோவிலின் பஞ்சாமிர்த பிரசாதத்தை சாப்பிடுபவர்களுக்கு அவர்களின் உடலில் இருக்கும் நோய்கள் நீங்குகிறது என்பது அனுபவம் பெற்றவர்களின் உறுதியான வாக்கு.
பழனியாண்டவரை வழிபடும் பக்தர்கள் சிலர் தங்களின் தொழில், வியாபாரங்களில் கூட்டாளியாக கருதி, மிகுந்த லாபம் பெற்ற பிறகு அந்த லாபத்தில் பழனி முருகனுக்குரிய பாகத்தை காணிக்கையாக இக்கோவிலின் உண்டியலில் செலுத்துகின்றனர்.
திருப்பதியில் எப்படி தலைமுடியை மொட்டையடித்து தங்களின் வேண்டுதலை நிறைவேற்றுகின்றனரோ அது போல் பழனி முருகனுக்கும் முடியிறக்கி காணிக்கை செலுத்துகின்றனர்.
பழனி முருகனின் நவபாஷாண சிலை (Navabhashana statue of Palani Murugan)
இத்தலத்து மூலவர் நவபாஷாணத்தால் ஆனவர். இந்த மூலவரை போகர் என்ற சித்தர் பிரதிஷ்டை செய்தார்.
இக்கோவிலின் சிறப்பான அம்சமே பக்தர்களுக்கு நன்மைகளை செய்யும் சக்தி கொண்ட சித்தர்களின் “ரசவாத கலையை” பயன்படுத்தி, “நவபாஷாணத்தில்” செய்யபட்ட முருகனின் சிலையே ஆகும்.
இந்த பழனி மலையிலேயே போகர் சித்தரின் சமாதி மற்றும் போகர் சித்தரின் தனி சந்நிதி இருக்கிறது.
இங்கிருக்கும் போகர் சித்தரின் சமாதியில் வழிபடுவதால் இன்றும் சூட்சம வடிவில் இந்த பழனி மலையில் வாழ்ந்து கொண்டிருக்கும் போகர் நமது குறைகள் அனைத்தையும் தீர்த்தருள்கிறார் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
இந்த சிலையை அபிஷேகம் செய்து கொடுக்கப்படும் பிரசாதம் பல்வேறு உடல் பிணிகளை போக்கும் அருமருந்தாக உள்ளது.
காவடி தூக்கும் வழக்கம் எப்படி உ ண்டானது?
பழனி மலைக்கு (Palani murugan)செல்லும் வழியில் இடும்பனின் சந்நிதி இருக்கிறது. இடும்பனுக்கு பூஜை செய்தபின்பே, மலைக்கோயிலில் முருகனுக்கு பூஜை நடக்கும்.
அகஸ்திய மாமுனிவர் தன் இருப்பிடத்திற்கு சிவகிரி, சக்திகிரி என்னும் இரண்டு மலைகளை எடுத்துச் செல்ல விரும்பினார். தன் சேவகனான இடும்பனிடம் இந்த மலைகளை தூக்கி வரச்சொன்னார்.
அவனும் காவடி போல் இரண்டு மலைகளையும் கம்பில் கட்டி தோளில் சுமந்து சென்றான்.
செல்லும் வழியில் தூக்கமுடியாமல் சோர்வுற்று மலையைக் கீழே வைத்தான்.
அச்சமயம் பார்த்து முருகன் ஞானப்பழம் கிடைக்காத கோபத்தில் சிவகிரி மலையின் மீது ஏற, இடும்பனால் மலையை தூக்க முடியவில்லை. கோபமுற்ற இடும்பன் முருகனைத் தாக்க முருகன் இடும்பனை அழித்தார்.
இடும்பனைப் போல் காவடி சுமந்து தன்னை வழிபடுவருக்கு சகல செளபாக்கியங்களும் உண்டாகும் என வரமளித்தார்.இத்தலத்ததில் தான் காவடி எடுக்கும் பழக்கம் உருவானது.
இடும்பன் தோளில் சக்திகிரி, சிவகிரி என்னும் இரண்டு மலைகளை சுமந்து வந்த கோலத்தில் காட்சி தருகிறார். இவரது சன்னதி எதிரில் நந்தி வாகனமும், இடும்பன், கடம்பன் பாதமும் இருக்கிறது.
இடும்பன் சன்னதியில் அவரது குரு அகத்தியர் உள்ளார். அகத்தியர் இங்கிருப்பதால், பக்தர்களுக்கு கமண்டலத்தில் நிரப்பப்பட்ட தீர்த்தம் தரப்படுகிறது.
இதனை அகத்தியரே தருவதாக ஐதீகம். இதனை பருகிட நோய்கள் நீங்குவதாக நம்பிக்கை.
I was very pleased to uncover this great site. I need to to thank you for ones time due to this fantastic read!! I definitely enjoyed every bit of it and I have you book-marked to see new things in your website.
I was very pleased to uncover this great site. I need to to thank you for ones time due to this fantastic read!! I definitely enjoyed every bit of it and I have you book-marked to see new things in your website.
Thank you very much