நீரிழிவுநோயைக் கட்டுப்படுத்தும் பேலியோ (Paleo)

பேலியோ (Paleo) டயட்டை மேற்கொள்வது சிறந்த ஆரோக்கியத்தையும் மேம்படுத்தவும் உடலில் வளர்ச்சிதை மாற்ற விகிதத்தை வேகப்படுத்தும் உதவுகிறது.

பலர் முறையாக இந்த உணவு முறையை கடைபிடித்து வருடக் கணக்கில்  சர்க்கரை நோயை கட்டுப்பாட்டில் வைத்து வாழ்ந்து வருகிறார்கள்.

நாம் உண்ணும் உணவுகளே பல நோய்களுக்குக் காரணம். அந்த உணவை நிறுத்தும் போது, நோயும் நின்று போகிறது. இதுவே பேலியோ (Paleo) உணவு முறையின் சிறப்பு அம்சம்.

வாழ்நாள் முழுவதும் பேலியோவை முறையாக கடைபிடித்தால் நமக்கு பலன் கிடைக்கும். ஆனால் விரும்பினால் , நாம் அடைய வேண்டிய எடை மற்றும் ரத்த சர்க்கரை  அளவை அடைந்த பிறகு ஒருவேளை மட்டும் குறைந்த அளவில் மாவுசத்து உணவுகளை உணவில் சேர்த்து உண்ண முடியும்.

எடை இழப்புக்காக மக்கள் ஏராளமான டயட் முறைகளை பின்பற்றுவது உண்டு. அவற்றில் ஒரு முக்கியமான டயட் முறை தான் பேலியோ டயட்.

கலோரி குறைந்த உணவுகளை எடுத்துக் கொள்வதன் மூலம் எடை இழப்பை சாத்தியப்படுத்த முடியும் என்கிறது இந்த டயட்.

மெட்டபாலிக் பிரச்சனை உள்ளவர்களுக்கு  பேலியோ உணவு முறை  ஏற்ற உணவு.

பேலியோ டயட் (Paleo Diet) சில உணவுகளை முற்றிலுமாக தவிர்க்க சொல்கிறது.

பேலியோ டயட்டும் சர்க்கரை நோயும் Paleo & Diabetes,அன்னைமடி,annaimadi.com,பேலியோ உணவு முறை ,Paleo & Diet,பேலியோவினால் என்ன  நன்மைகள்,benefits of Paleo

பேலியோ டயட்டினால் என்ன  நன்மைகள் (Benefits of Paleo)

சர்க்கரை வியாதியும் அதனைத் தொடர்ந்து வரும் நோய்களான , இரத்த அழுத்தம், கொழுப்பு, தைராய்டு, சொரி யாசிஸ், உடம்பு வலி, முட்டி வலி, யூரிக் ஆசிட் பிரச்சினை, ஆஸ்துமா , கிட்னி கோளாறு , கல்லீரல் பிரச்சனை, உடல் பருமன், உள்ளிட்ட பல்வேறு நோய்கள் சரியாகிறது.

இந்த உணவு முறையால் பெரும்பாலான நோய்கள் முற்றாகவே  குணமாகிறது. சில நோய்கள் கட்டுபாட்டுக்குள் வருகிறது.

இறைச்சி உணவு உட்கொண்டால் சித்த மருத்துவத்தில் எலுமிச்சைச் சாற்றையும் சேர்த்து எடுத்துக்கொள்வது நல்லது என வலியுறுத்தப்படுகிறது.

இதன் மூலம் அதிகமான சிட்ரிக் அமிலம் வெளியேறுவது தடுக்கப்பட்டு, கல்லடைப்பு உருவாகாமலும் தடுக்கப்படுகிறது.

பேலியோ உணவுமுறையைக் கடைப்பிடிக்கும் போது கவனிக்க வேண்டியவை

பேலியோ டயட் (Paleo) உணவு முறையில் சில நல்ல அம்சங்கள் இருக்கும் அதேநேரம், அதிலுள்ள பாதகங்களையும் பரிசீலிக்க வேண்டும்.

ஆதிமனித உணவு முறையில் அதிக அளவு இறைச்சியை உட்கொள்வதால் சிறுநீரில் கல்சியம், ஆக்சலேட், யூரிக் அமிலம் போன்றவற்றின் அளவு அதிகரிக்கும். இதனால் சிறுநீரின் அமில காரச் சமநிலை பாதிக்கப்படலாம்.

சிட்ரிக் (Cedric acid) அமிலம் அதிகமாக வெளியேறும். அதனால் கல்லடைப்பு (Hypocitraturia) ஏற்படலாம்.

நம் உடல் உறுப்புகள் இளமையில் இருப்பது போன்றே, முதுமையிலும் இருப்பதில்லை. நாளாக நாளாக  உணவை செரிக்கக்கூடிய தன்மை ஜீரண உறுப்புக்களில் குறைந்து கொண்டு வரும்.அப்போது  அதிக கொழுப்பு உள்ள உணவு சிலருக்கு பிரச்சினையாகும் என்பதைக் கவனத்தில் கொள்ளவும்.

பேலியோ டயட்டும் சர்க்கரை நோயும் Paleo & Diabetes,அன்னைமடி,annaimadi.com,பேலியோ உணவு முறை ,Paleo & Diet,பேலியோவினால் என்ன  நன்மைகள்,benefits of Paleo

ர்க்கவியாதி, உயர் குருதி அழுத்தம் போன்ற நோயின் காரண கர்த்தா எம்முடைய கட்டுப்பாட்டில் இல்லாத உடல் எடை. உடல் எடையின் அதிகரிப்பால் பல ஆரோக்கிய கேடுகள் சொல்லாமலேயே வருகின்றன.

பேலியோ உணவு முறையால் (Paleo) உடல் எடையை அளவாக குறைத்து, இரத்த அழுத்தம் குறைந்து, சர்க்கரையின் அளவு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து ஆரோக்கியமாக வாழமுடியும் என்பதற்கு பலர் உதாரணமாக இருக்கிறார்கள்.

ஊட்டச்சத்து நிபுணர்கள் இந்த பேலியோ டயட் குறித்து பல்வேறு கருத்து வேறுபாடுகளை முன்வைத்தாலும், அமெரிக்காவிலுள்ள ஹுஸ்டன் பல்கலை கழக விஞஞானிகள், இதனை பரிசோதித்து இந்த டயட்டை பின்பற்றுவதால் உடல் எடை குறைகிறதோ இல்லையோ மாரடைப்பு உள்ளிட்ட இதய நோய் வராமல் தடுக்கப்படுகிறது என்பதை கண்டறிந்திருக்கிறார்கள். 

நீங்கள் எடையை குறைக்க பேலியோ (Paleo diet) டயட் இருந்தால் அதில் என்ன செய்யலாம் என்ன செய்யக் கூடாது என்பதை அறிந்து கொண்டு செயல்படுங்கள். மருத்துவர் ஆலோசனையை பெற்று செயற்படுத்துங்கள்.

ஏனெனில் நீங்கள் சில உணவுகளை தவிர்ப்பது உங்களுக்கு ஊட்டச்சத்து பற்றாக்குறையை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது என்கிறார்கள் ஊட்டச்சத்து நிபுணர்கள்.

பேலியோ உணவு முறை (Paleo & Diet)

பேலியோ (Paleo) டயட்டில் முட்டை, காய்கறிகள், பழங்கள், கொட்டைகள் மற்றும் விதைகள் போன்ற உணவுப் பொருட்கள் அடங்குகின்றன.

மற்ற எடை இழப்பு டயட்களை போலல்லாமல், குறைந்த கொழுப்பு பொருட்களான அழற்சி எதிர்ப்பு பண்புகள் கொண்ட மற்றும் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்த பொருட்களான அவகேடா, தேங்காய், ஆளி விதைகள் மற்றும் ஒலிவ் எண்ணெய் சேர்க்க ஊக்குவிக்கிறது.

சிக்கலான கார்போஹைட்ரேட் உணவுகளை தவிர்க்க வேண்டும் என பேலியோ டயட் கூறுகிறது. காய்கறிகள், பழங்கள், தானியங்கள், பருப்பு வகைகள் ஆகியவற்றை சேர்க்க வலியுறுத்துகிறது.

அனைத்து வகையான சுத்திகரிக்கப்பட்ட உணவுகள் மற்றும் செயற்கை சர்க்கரைகளை தவிர்க்க சொல்லுகிறது. ரொட்டி, பீன்ஸ், வேர்க்கடலை, பருப்பு வகைகளின் பயன்பாடு ஆகியவற்றை நீக்குகிறது.

பால் மற்றும் ஆல்கஹாலையும் (Alcohol) தவிர்க்க சொல்லுகிறது. பாலிற்கு பதிலாக நீங்கள் தேங்காய் மற்றும் பாதாம் பாலை பயன்படுத்தி கொள்ளலாம். பேலியோ உணவு ஸ்டார்ச் நிறைந்த காய்கறிகளையோ அல்லது அதிக சர்க்கரை உள்ள பழங்களையோ குறைவாகவே பயன்படுத்த அனுமதிக்கிறது.

பேலியோ உணவு முறையில் முறையான புரதம், கொழுப்பு உண்ணும்போது நம்முடைய வேலைகளை செய்ய பலம் அதிகமாக இருக்கும்.

பேலியோ டயட்டும் சர்க்கரை நோயும் Paleo & Diabetes,அன்னைமடி,annaimadi.com,பேலியோ உணவு முறை ,Paleo & Diet,பேலியோவினால் என்ன  நன்மைகள்,benefits of Paleo

பேலியோ டயட்டும் சர்க்கரை நோயும் (Paleo Diet and Diabetes)

டைப் 1 சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்களின் உடலில் கணையம் இன்சுலின் சுரக்கும் தன்மை முழுவதும் இல்லாமல் இருக்கும்.

இவர்கள் பேலியோ உணவு முறையை பின்பற்றும் போது அவர்களுக்கு எடுத்துக் கொள்ளும் இன்சுலின் அளவுகளை முற்றாக நிறுத்த முடியாவிட்டாலும்  குறைக்க முடியும்.

முறையாக பேலியோ உணவு முறையை கடைபிடிக்கும் டைப் 2 சர்க்கரை நோயாளிகள்  மாத்திரைகள் இன்சுலினை நிறுத்த முடிகிறது.

இரத்தத்தில் சர்க்கரைஅளவு கட்டுப்பாட்டில் இருக்கும் போது அவர்கள் சர்க்கரை நோய் இல்லாதவர்கள் போல ஆரோக்கியமாக இருக்கிறார்கள்.

சர்க்கரை நோயினால் வரக் கூடிய இருதய,கிட்னி,மூளை போன்ற உடல் உள்ளுறுப்பு பாதிப்புகள் ஏற்படாது.

முறையாக பேலியோ உணவுமுறை கடைபிடித்து, கூடவே  உடற்பயிற்சி செய்து வர மாத்திரைகள் இன்சுலின் ஊசிகள் போன்றவற்றை  நிறுத்த முடிகிறது .சிலரால் மாத்திரைகள், இன்சுலின் அளவு குறைக்க முடிகிறது.

பேலியோ உணவு முறை மாற்றத்தால் சர்க்கரை நோயை கட்டுப்பாட்டுக்குள் வைக்க முடியும். முற்றாக குணப்படுத்த முடியாது. இன்சுலின் ரெசிஸ்டன்ஸ்-பேலியோ உணவுமுறை மூலம் கட்டுப்படுத்த முடியும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *