பனங்கற்கண்டின் பயன்கள் (Benefits of Palm sugar)

பனங்கற்கண்டு”  (Benefits of Palm sugar), பனை மரத்திலிருந்து கிடைக்கும் பதநீரில் இருந்து தயாரிக்கப்படுகிறது. பனங்கற்கண்டு, எந்த கலப்படமும் இல்லாமல் இயற்கையாக கிடைக்கும் இனிப்பாகும். இதில், 24 வகையான இயற்கைச் சத்துக்கள் உள்ளன. இது மிகச்சிறந்த மருத்துவ குணம் உடையது.
நீரிழிவு நோயின் பிடியிலிருந்து காப்பாற்றிக் கொள்வதற்கு பனங்கற்கண்டு (Benefits of Palm sugar) பேருதவி புரிகிறது. வாதம், பித்தம் நீக்கவும், பசியை தூண்டி விடவும் பயனுள்ள மருந்து. உடலுக்கு புஷ்டி தருகிறது.
நாட்டு மருந்து தயாரிப்புக்கு கருப்பட்டி,பனங்கற்கண்டு பயன்படுத்தப்படுகிறது. கருப்பட்டி, ரத்தத்தை சுத்திகரித்து உடலுக்கு சுறுசுறுப்பைக் கொடுக்கும். மேனிக்கு பளபளப்பை தரும்.
பனை மரத்தின் பயன்கள் ஏராளம்.

பனங்கற்கண்டு பயன்கள் (Benefits of Palm sugar)

பனை மரத்திலிருந்து கிடைக்கும் உணவு பொருட்கள் பொருட்கள் குளிர்ச்சி தன்மை வாய்ந்தது என்றாலும் குளிர்காலங்களில் ஏற்படும் ஜலதோஷத்தால் தொண்டைக் கரகரப்பு, நெஞ்சுசளி, இருமல் ஆகியவற்றை போக்குவதில் பெரும்பங்காற்றுகிறது.
சிறிதளவு பனங்கற்கண்டை வெறும் வாயில் போட்டு அந்த உமிழ் நீரை முழுங்கினால் மேற்கூறிய பிரச்சனைகள் சீக்கிரம் தீரும்.
   
ஜுரம் என்பது பொதுவாக உடலின் சராசரியான வெப்பநிலையை அதிகரிக்க செய்து உடலை பலவீனமாக்கி செயல்பட முடியாமல் செய்து விடும் ஒரு நோயாகும்.
ஜுரங்களில் டைபாய்டு, வைரல் சுரம் மற்றும் உடலின் நுரையீரலில் ஏற்படும் நீர்க்கட்டு போன்ற வியாதிகளை போக்குவதில் பனங்கற்கண்டு சிறப்பாக செயல்படுகிறது.
மூளையின் செல்கள் எப்போதும் புத்துணர்ச்சியுடன் இருக்கும் நபர்களுக்கு ஞாபகத்திறன் அதிகம் இருக்கிறது. ஞாபத்திறன் மேம்பட நினைப்பவர்கள் சிறிது பனங்கற்கண்டு, பாதாம் பருப்பு மற்றும் சீரகம் சேர்த்து இரவில் படுப்பதற்கு முன் சாப்பிட்டு வந்தால் உங்கள் நினைவாற்றல் அதிகரிக்கும். கண்பார்வை திறனும் அதிகரிக்கும்.
இதிலிருக்கும் கல்சியம் பற்களை உறுதிப்படுத்தி, ஈறுகளில் ரத்தக்கசிவு ஏற்படுவதை தடுப்பதோடு பற்களின் பழுப்பு நிறத்தையும் மாற்றுகிறது. இதிலிருக்கும் இரும்புச்சத்து பித்தத்தை நீக்கி சொறி, சிரங்கு உள்பட சகல தோல் வியாதிகளையும்  நீக்குவதுடன் கண் நோய், ஜலதோசம், காசநோய் இவைகளையும் நீக்குகிறது.
கர்ப்பம் தரித்திருக்கும் பெண்கள் குழந்தையை பெற்றெடுக்கும் காலம் வரை ஒரு சில உடல் ரீதியான பிரச்சனைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. பனங்ககற்கண்டை கருவுற்ற பெண்கள் சாப்பிட்டு வந்தால் மகப்பேறு காலத்தில் பெண்களுக்கு ஏற்படுகின்ற மலச்சிக்கல், வயிற்றுப் புண் முதலியவைகளை குணமாகிறது. இரத்த அழுத்தத்தை சீராக்குகிறது.
நுரையீரல் மற்றும் தொண்டை பாதிப்புகளுக்கு கொடுக்கப்படும் ஆயுர்வேத மருந்துகளில் பனைவெல்லம் சேர்க்கப்படுகிறது.

பனங்கற்கண்டில் வீட்டு மருத்துவம் (Medicinal properties of Palm sugar)

தினந்தோறும் கடுமையான உடலுழைப்பில் இருப்பவர்களுக்கு உடல் இழந்த சத்துகளை மீண்டும் பெறுவது அவசியம் ஆகும்.
 உடல்சோர்வு நீங்கவும், உடல் இழந்த சத்துகளை மீண்டும் பெறவும் 1/2 டேபிள் ஸ்பூன் பசு மாட்டு நெய்யுடன் சிறிது பனங்கற்கண்டு மற்றும் சிறிது நிலக்கடலை சேர்த்து சாப்பிட்டால் உடலுக்கு மிகுந்த சத்துகள் கிடைக்கும்.
உடல் மற்றும் மனதில் சுறுசுறுப்பை அதிகரிக்கிறது.

உடலின் நோய் எதிர்ப்பு சக்தி வீரியமிக்கதாக இருக்க பனங்கற்கண்டை பாதாம் மற்றும் மிளகுத் தூளுடன் சேர்த்து வாரத்திற்கு 2 முறை சாப்பிட்டு வந்தால் சிறந்த பலன்களை பெறலாம்.

கல்சியம் அதிகம் நிறைந்த உணவுகளை சாப்பிடுவதால் சிறுநீரகங்களில் கற்கள் உருவாவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கிறது.

இப்பிரச்சனையை தீர்க்க 2 டேபிள் ஸ்பூன் வெங்காய ஜூஸ் மற்றும் 1 டேபிள் ஸ்பூன் பனங்கற்கண்டு சேர்த்து வாரத்திற்கு ஒரு முறை சாப்பிட்டால் சிறுநீரகக் கற்கள் சுலபத்தில் கரையும். சிறுநீரகங்களின் செயல்படும் மேம்படும்.

அசைவ உணவுகளை அதிகம் சாப்பிடுபவர்கள் மற்றும் சாப்பிட்டவுடன் வாயை தண்ணீர் கொண்டு கொப்பளிக்கும் பழக்கம் இல்லாதவர்களுக்கு வாய் துர்நாற்ற பிரச்சினை ஏற்படுவது சகஜம்.

வாய் துர்நாற்றம் நீங்க கொஞ்சம் சீரகம் மற்றும் பனங்கற்கண்டை வாயில் போட்டு மென்று தின்றால் வாய் துர்நாற்றம் முற்றிலும் நீங்கும்.
தொண்டைக்கட்டு ஜலதோஷ பாதிப்பால் சிலருக்கு தொண்டையில் தொற்று ஏற்பட்டு தொண்டை கட்டிக்கொள்கிறது இதனால் அவர்களால் சரியாக பேசமுடியாமல், சாப்பிட முடியாமலும் அவதிப்படுகின்றனர்.
இதனை போக்க 1/2 டேபிள் ஸ்பூன் மிளகுத்தூள், 1/2 டேபிள் ஸ்பூன் நெய் மற்றும் 1/2 டேபிள் ஸ்பூன் பனங்கற்கண்டு சேர்த்து சாப்பிட்டால் தொண்டை வலி மற்றும் தொண்டை கட்டு சீக்கிரம் குணமாகும்.
கோடைகாலங்களில் பலருக்கும் உடல் வெப்பத்தால் உடலில் கட்டிகள் தோன்றுவது, நீர் சுருக்கு, உஷ்ணத்தால் ஏற்படும் வயிற்றுப்போக்கு என பல பிரச்சனைகள் ஏற்படுகின்றன.
இக்காலங்களில் பனங்கற்கண்டை அதிகம் சாப்பிடுவதாலும், பானங்களில் பனங்கற்கண்டுகளை கலந்து பருகுவதால் உடல் வெப்பம் மற்றும் உஷ்ண வியாதிகளை நீக்க முடியும்

பனை  வெல்லத்தின் சிறப்பு

பனை மரத்தின் வெல்லத்தை இரண்டு வகையாக சொல்வார்கள்.

முற்றிலும் சுத்தப்படுத்தாத, கெட்டியான கரு நிற வெல்லத்தை “கருப்பட்டி” என்பார்கள். இதை சுத்தப்படுத்தப்பட்ட படிகங்களாக உருவாகும் சர்க்கரை ‘பனங்கற்கண்டு’ எனப்படும்.
பாலில் பனங்கற்கண்டை சேர்த்து காய்ச்சி குடித்தால் மார்புச்சளி இளகும். முக்கியமாக தொண்டைப்புண், வலி இவை அகலும்.  பனங்கற்கண்டு, உடல் உஷ்ணம், காங்கை, நீர் சுருக்கு, ஜுரத்தினால் ஏற்படும் வெப்பங்கள் இவற்றுக்கு நல்லது.
வேர் முதல் நுனி வரை பனையின் ஒவ்வொரு பகுதியும் நமக்கு பயன் தருபவை.
இதனாலேயே
கேட்டதைக் கொடுக்கும் தேவலோகத்து மரமான கற்பகதருவுக்கு ஒப்பிட்டு, பூலோகத்து கற்பகதரு
என்றார்கள் நம் முன்னோர். பனை, குறைந்தது, 60 வருடங்களுக்கு மேல் வாழும்.
பனை மரத்தில் இருந்து கிடைக்கும் பதநீர் பலவிதமான நோய்களை தீர்க்கும் மருந்தாக உள்ளது. பனை நீரிலுள்ள சீனி சத்து உடலுக்கு தேவையான வெப்பத்தை தருகிறது.
இதிலிருக்கும் குளுக்கோஸ் மெலிந்து தேய்ந்து வாடிய உடலுடைய குழந்தைகளின் உடலை சீராக்கி நல்ல புஷ்டியை தருகிறது.பணகங்கற்கண்டின் பயன்கள்.அன்னைமடி,
அதில் இருந்து தயாரிக்கப்படும் உபபொருட்களில் முக்கியமானது, பனங்கற்கண்டு. பனை மரத்தில் இருந்து கிடைக்கும் பதநீரை காய்ச்சி பெறப்படும் இது, பழங்காலம் முதலே, மருத்துவ ரீதியாக  பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது.

கரும்பு சர்க்கரைக்கு பதில், கருப்பட்டியை பயன்படுத்தினால் பற்களும், எலும்புகளும் உறுதியாகும். குழந்தைகள் முதல் பெரியவர் வரை, இதை சாப்பிடலாம்.

நமக்கு தேவையான கல்சியம், இதில் கிடைக்கிறது. சுக்கு கருப்பட்டி பெண்களின் கர்ப்பப்பைக்கு ஏற்றது.

சுக்கு, மிளகு கலந்த கருப்பட்டியை, குழந்தை பெற்ற பெண்கள் சாப்பிட்டால், பால் நன்றாக சுரக்கும். குழந்தைகளுக்கும் ஊட்டச்சத்து கிடைக்கும்.

இயற்கை இனிப்பை உணவில் சேர்ப்போம். ஆரோக்கியம் காப்போம்!!

Leave a Reply

Your email address will not be published.