சுவையான பனீர் 65 (Paneer 65 recipe)

பனீர் 65 (Paneer 65 recipe) மாலை வேளையில் குறிப்பாக மழை காலத்தில் சாப்பிட சிறந்த ஒரு ஸ்னாக். சிக்கன் 65 போன்று பனீர் 65 மிக ருசியாக இருக்கும். இதனை குழந்தைகள் அதிகம் விரும்பி உண்பார்கள். உணவகங்களில் இதனை starter ஆக பரிமாறுவார்கள்.

பனீர் 65 செய்ய தேவையான பொருட்கள் (Paneer 65)

200 கிராம்  –  பனீர்
சோளமா – 4 டேபிள் ஸ்பூன்
அரிசி மா – 2 டேபிள் ஸ்பூன்
மஞ்சள் தூள் – சிறிதளவு
கரம் மசாலா – 1/2 டீஸ்பூன்
மிளகாய்த்தூள் – 1 டேபிள் ஸ்பூன்
இஞ்சி பூண்டு விழுது – 1 டேபிள் ஸ்பூன்
சோயா சாஸ் – 1 டேபிள் ஸ்பூன்
கருவேப்பிலை – சிறிதளவு
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – தேவையான அளவு
எலுமிச்சை சாறு – சிறிதளவு
annaimadi.com,paneer recipe,paneer 65 recipe in tamil.paneer 65 recipe,paneer starter,paneer snacks,paneer spicy snacks,easy snacks,healthy snacks,vege´ starter,

பன்னீர் 65 செய்முறை (Paneer 65 receipe)

பன்னீரை சிறிய சதுர  துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.

சோள மா, அரிசிமா ஆகியவற்றை அகன்ற பாத்திரத்தில் கொட்டி போதுமான அளவு தண்ணீர் ஊற்றி பிசைந்து கொள்ளவும்.

அவற்றுடன் மிளகாய் தூள், கரம் மசாலா, மஞ்சள் தூள் ஆகியவற்றை கலந்து கொள்ளவும்.

அவற்றோடு சோயா சாஸ், இஞ்சி பூண்டு விழுது, எலுமிச்சைச்சாறு, உப்பு போன்றவற்றுடன் சிறிதளவு தண்ணீர் சேர்க்கவும்.

annaimadi.com,paneer recipe,paneer 65 recipe in tamil.paneer 65 recipe,paneer starter,paneer snacks,paneer spicy snacks,easy snacks,healthy snacks,vege´ starter,

இறுதியில் பனீர் துண்டுகளை போட்டு நன்றாக கலந்து அரை மணி நேரம் ஊற வைக்கவும்.

வாணலியில் எண்ணெய் ஊற்றி அது சூடானதும்  மசாலா கலவையில்  ஊறிய பனீர் துண்டுகளை கொஞ்சம் கொஞ்சமாக போட்டு பொன்னிறமாக பொரித்தெடுக்கவும்.

சுவையான பன்னீர் 65 (Paneer 65 ) ரெடி.

பனீர் 65  வீடியோ செய்முறை (Paneer 65 receipe) பார்ப்போம்.

பல ஆரோக்கிய நன்மைகள் தரும் பனீர் ரெசிபிக்கள்

உடல் எடையை குறைக்க வேண்டும் என்றால் கார்போஹைட்ரேட் குறைவான உணவை தினம் சாப்பிட வேண்டும். அதோடு உடல் ஆரோக்கியத்திற்கு புரதம் நிறைந்த உணவுகள் மிகவும் அவசியம்.

பனீரில் கார்போஹைட்ரேட் மிகவும் குறைவாகவும் புரதசத்து அதிகமாகவும்  உள்ளது.சைவ உணவு உண்பவர்களுக்கு பனீர் உணவுகள் சிறந்த புரதசத்தைக் கொடுக்கும்.

annaimadi.com,paneer recipe,paneer 65 recipe in tamil.paneer 65 recipe,paneer starter,paneer snacks,paneer spicy snacks,easy snacks,healthy snacks,vege´ starter,

கொழுப்பு நிறைந்த உணவுப் பொருட்கள் மற்றும் எண்ணெயில் பொரித்த உணவுகள் உடல் எடையை அதிகரிப்பதுடன் ஆரோக்கியத்தையும் கெடுக்கும். ஆனால் ,புரதம் நிறைந்த உணவுகளை சாப்பிட்டு வந்தால் நீண்ட நேரம் நீங்கள் நிறைவாக இருப்பதை உணர முடியும்.

புரதம் அதிகமாக உள்ள உணவுகளான இறைச்சி, மீன் மற்றும் முட்டை மட்டுமல்லாமல் பனீர் அல்லது காட்டேஜ் சீஸில் புரதம் அதிகமாக உள்ளது. மேலும்  பனீரில் பொட்டாசியம் உள்ளது. அதே போல் கல்சியமும் அதிகமாக இருக்கிறது. பனீரில் பிரியாணி, சாண்ட்விச், கிரேவி, புலாவ், பக்கோடா, கட்லெட் ,பனீர் குருமா,  பட்டர் மசாலா, பனீர் 65, பாலக் பனீர், என பல நூறு விதமாக சமைத்து சுவைக்கலாம்.

Leave a Reply

Your email address will not be published.