பனீர் பிரியாணி செய்முறை (Paneer briyani receipe)

பனீர் பிரியாணி (Paneer briyani) சுவையான ,புரோட்டீன் நிறைந்த ஸ்பெஷல் சைவ உணவு!

பிரியாணி பலரது விருப்பமான உணவுத் தெரிவு. இந்த பிரியாணியில் பலவகை  இருந்தாலும் சைவ பிரியர்கள் அதிகம் விரும்பி சாப்பிடக்கூடியதாக இருப்பது பன்னீர் பிரியாணி ஆகும்.

நாம் நமது உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வதற்கு நமக்கு அனைத்து சத்துக்களும் தேவைப்படுகிறது.அவ்வகையில் புரோட்டீன் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. புரோட்டீனை நாம் சைவம் மற்றும் அசைவம் ஆகிய இரண்டிலும் இருந்து பெறுகிறோம்.

சைவ உணவில் பனீரை அதிக அளவில் சேர்த்துக் கொள்வர், அதற்கு காரணம் பனீர் சுவையானது மற்றும் அதிக அளவு புரோட்டீன்களை உள்ளடக்கியது.

பாலை விட பனீரில் சர்க்கரையின் அளவு குறைவாகவே உள்ளது.எனவே  நீரிழிவு நோயாளிகளும் பனீர் பிரியாணியை (Paneer briyani) தைரியமாக அளவோடு  சாப்பிடலாம்.

இலகுவாக சுவையான பனீர் பிரியாணி (Paneer briyani) செய்வோம்!

பனீர் பிரியாணியை வெங்காய சம்பலுடன் சேர்த்து சாப்பிடுவது சுவையை இன்னும் அதிகரிக்கும்.உங்களின் விருப்பத்தைப் பொறுத்து, இந்த பன்னீர் பிரியாணியை காய்கறிகளுடன் சேர்த்தும் செய்யலாம்.

பனீர் பிரியாணியை பிறந்தநாள்,திருமணநாள்,விருந்தினர் வருகை போன்ற கொண்டாட்டங்களிற்கு சமைத்து அசத்தலாம்.

பனீரை நாம் நமது உணவில் சேர்த்து சாப்பிடுவதனால் எழும்புத்தேய்மானம்,மூட்டுவலி, பல்வலி எனப் பலவற்றிற்கு நிவாரணம் கிடைக்கிறது.

பனீரில் பிரியாணி மட்டுமன்றி பனீர் பட்டர் மசாலா, கடை பனீர்,பாலக் பனீர்,பனீர் புலாவ், இனிப்புவகைகள் செய்தும் சாப்பிடலாம்.

பாஸ்பரஸ், புரோடீன், கார்போஹைட்ரேட் மற்றும் கொழுப்புச்சத்து ஆகியன அதிகமாகவே உள்ளன.

ஜீரணக்கோளாறு இருப்போர் இரவில் பனீர் சாப்பிடுவதைத் தவிர்க்கவும்.ஏனெனில் பனீரில் கொழுப்புச்சத்து அதிகமாக இருப்பதால் செரிமான பிரச்சனையை எற்படுத்தும்.

சுட்டீஸ் விரும்பும் பனீர் பால் கொழுக்கட்டை! - தினசரி தமிழ்

பனீரை கடைகளில் வாங்கி சாப்பிடுவது நல்லதல்ல.

ஏனெனில் அதில் ரசாயனம் கலக்க அதிக வாய்ப்புக்கள் உள்ளன. எனவே வீட்டில் செய்து சாப்பிடுவது உடலுக்கு மிகவும் நல்லது. அதுமட்டுமின்றி செலவு குறைவு.

பனீரில்  கொழுப்புச் சத்துக்கள் அதிகமாக இருப்பதால், உடல் எடையை அதிகரிக்க அதிக வாய்ப்புகள் உள்ளன.

எனவே இதில் அதிக சத்துக்கள் இருந்தாலும் நாம் அதனை அளவோடு  சாப்பிடுவது ஆரோக்கியத்துக்கு நன்மை தரும்.

Leave a Reply

Your email address will not be published.