பனீர் டிக்கா செய்யும் முறை (Paneer Tikka recipe)

சூப்பரான பன்னீர் டிக்கா மசாலா  (Paneer Tikka recipe) செய்யவோம்.இதை அடுப்பில் தவாவில் செய்யலாம். அல்லது  வெளியே கிரிலில்  செய்யலாம்,  சைவ உணவு உண்பவர்களுக்கு கிரில் செய்ய  பனீர் டிக்கா சிறந்தது.

தேவையான பொருட்கள்

தயிர் – 1/2 கப்
மஞ்சள் தூள் – 1/2/ ஸ்பூன்
மிளகாய் தூள் – 1 ஸ்பூன்
பன்னீர் – 250 கிராம்
கரம் மசாலா – 1/2 ஸ்பூன்
சீரகத் தூள் – 1 ஸ்பூன்
சோம்பு – 1/2 ஸ்பூம்
Paneer Tikka recipe,annaimadi.com,indian recipes,paneer marinade recipe,paneer recipe,veg recipe,
எண்ணெய் – தேவையான அளவு
இஞ்சி, பூண்டு விழுது – 1 ஸ்பூன்
எலுமிச்சை சாறு – 2 ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
கடலை மாவு – 1 1/2 ஸ்பூன்
தனியா தூள் – 1/2 ஸ்பூன்
குடை மிளகாய் – 2 சதுரமாக நறுக்கியது
வெங்காயம் – 1 சதுரமாக நறுக்கியது
தக்காளி – 1 சதுரமாக நறுக்கியது
மூங்கில் குச்சி – தேவையான அளவு
பனீர் டிக்கா  வீடியோ செய்முறையை  இங்கே பாருங்கள்.

பனீர் டிக்கா செய்யும் முறை (Paneer Tikka recipe)

பன்னீரை  சிறிய சிறிய சதுர துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.

வெங்காயம், தக்காளி, குடைமிளகாய் போன்றவற்றையும் சதுர வடிவில் நறுக்கி வைக்கவும்.

ஒரு பாத்திரத்தில் தயிர், மஞ்சள் தூள், மிளகாய் தூள், தனியா தூள், கரம் மசாலா தூள், சீரகத் தூள், இஞ்சி பூண்டு விழுது, சோம்பு, ஒரு ஸ்பூன் ஒலிவ் ஒயில் (Olive oil), எலுமிச்சை சாறு மற்றும் தேவையான உப்பு ஆகியவற்றை சேர்த்து ஒரு கரண்டியாழ்  நன்கு கலந்து  கொள்ளவும்.
பின்பு கடலை மாவு சேர்த்து, அதில்  நறுக்கி வைத்துள்ள வெங்காயம், தக்காளி, குடைமிளகாய் மற்றும் பன்னீர் ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.
இந்த கலவையை 1/2 மணி நேரம் மூடி  ஊற வைக்கவும்.
அரை மணி நேரம் கழித்து சிறிய மூங்கில் குச்சிகளை கொண்டு சதுர வடிவில் நறுக்கிய வெங்காயம், தக்காளி, பன்னீர் ஆகியவற்றை ஒன்றன் பின் ஒன்றாக குத்தி  தனியாக எடுத்து வைக்கவும்.
Paneer Tikka recipe,annaimadi.com,indian recipes,paneer marinade recipe,paneer recipe,veg recipe,
பின்னர் தோசை கல்லை வைத்து நன்றாக சூடானதும் குத்தி வைத்த குச்சிகளை வேக வைக்க வேண்டும். இரண்டு பக்கமும் திருப்பி போட்டு வேகவைத்து எடுத்தால் சுவையான பன்னீர் டிக்கா  தயார்.
சூடாகவே பரிமாறுங்கள்.அத்தனை சுவையாக இருக்கும். விரும்பிநாள் மரக்கறி புலாவ் செய்து இதனுடன் சேர்த்து சாப்பிடலாம்.
பனீரில் ஏராளமான உணவுகளை பலவிதமான முறைகளில் செய்யலாம். ஆனால் இப்படி
வித்தியாசமாக குச்சியில் குத்தி கொடுத்தால் குழந்தைகள் விரும்பி உண்பார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *