பப்பாளி பழம் உடல் ஆரோக்கியத்திற்கு நலம் சேர்ப்பதோடு சரும பொலிவையும் (Papaya skin beauty) மெருகூட்டும். முகத்தில் படியும் அழுக்கையும், எண்ணெய் பிசுபிசுப்பு தன்மையையும் நீக்கும். சருமத்தில் படிந்திருக்கும் இறந்த செல்களை நீக்கி மென்மையையும், பொலிவையும் பெற்று தரும்.
மிகவும் அவசியமான ஊட்டச்சத்துக்களை கொண்டிருப்பதால் பப்பாளி பழத்தை சாப்பிடுவது உடல் நலத்தை மேம்படுத்தும். ‘பப்பாளியில் வைடடமின் சி உள்ளது. அது மிகவும் திறன் மிக்க ஆக்சிஜன் எதிர்பொருளாக இருப்பதால் வயாதாகும் போது ஏற்படும் சேதங்களை பெருமளவு குறைக்கிறது.
பப்பாளி பழத்தில் விற்றமின் ஏ, கல்சியம் மற்றும் பொட்டாசியம் வளமையாக உள்ளது. பல் சம்மந்தமான குறைபாட்டிற்கும், சிறுநீர்ப்பையில் உண்டாகும் கல்லை கரைக்கவும், பப்பாளி சாப்பிட்டால் போதும்.
மேலும் நரம்புகள் பலப்படவும், ஆண்மை தன்மை பலப்படவும், ரத்த விருத்தி உண்டாகவும், ஞாபக சக்தியை உண்டு பண்ணவும் பப்பாளி சாப்பிடுங்கள்.
மலச்சிக்கல் பிரச்சனைக்கு இந்த பழத்தை சாப்பிட்டு பாருங்கள். இது மலச்சிக்கலை நீக்கி, செரிமானத்திற்கு உறுதுணையாக இருக்கும்.
பப்பாளி குறைவான கலோரிகளும், வளமையான ஊட்டச்சத்துக்களும் நிறைந்த பப்பாளியை சேர்த்துக் கொள்ளுங்கள். செரிமானத்திற்கு உதவி செய்வதால், இது உடல் எடையை குறைக்கவும் உதவும்.
முகப்பரு உள்ளவர்கள், பப்பாளிக்காயின் நறுக்கிய உட்பகுதித் துண்டுகளை மென்மையாக முகத்தில் தேய்க்க வேண்டும். இது முகப்பருக்களைப் போக்கி, முகச் சுருக்கங்களையும் நீக்கி, பொலிவு கூட்டும் பப்பாளிப்பழம்.
பப்பாளிக்கு பல்வேறு பயன் மிக்க குணங்கள் உள்ளன.
இந்த பழத்தை தனியாகவும் சாப்பிட முடியும் அல்லது சாலட்கள், ஐஸ் கிரீம், ஸ்மூத்தீஸ் மற்றும் சல்சாஸ் போன்ற வகையறாக்களுடனும் சாப்பிட முடியும்.
இதனை முடி மற்றும் தோல் பராமரிப்புக்கான கனியாகவும் பயன்படுத்தலாம்.
பப்பாளி யில் பீட்டா கரோட்டின் இருக்கிறது. பாலிஃபினால் நிறைந்திருக்கும் பப்பாளியை உள்ளுக்கும் வெளிப்பூச்சிலும் பயன்படுத்தும் போது அது அழகு, ஆரோக்கியம் இரண்டையும் தருகிறது. இயற்கை ஃபேஷியலுக்கு பழங்களை பயன்படுத்துவது உடல் ஆரோக்கியத்துக்கும் சருமத்துக்கும் எந்தவிதமான பாதிப்புகளையும் உண்டாக்குவதில்லை.பழங்களில் இருக்கும் ஆன்டி ஆக்ஸிடெண்ட் உடலில் இருக்க்கும் செல்கள் அழிவதை காக்கிறது. இதனால் அழகும் ஆரோக்கியமும் நீண்ட நாள்கள் பாதுகாக்கப்படுகிறது. குறிப்பாக சருமத்தை பளபளப்பாக வைத்திருக்கிறது.
பப்பாளியும்… முக அழகும்(Papaya fruit skin beauty)
பப்பாளியில் உள்ள ஒரு வேதிப்பொருள் தோலின் மேல்பகுதியில் உள்ள இறந்த பகுதிகளை நீக்கி, புதிய தோலை மென்மையாகவும், வளமாகவும் மாற்றும் சக்தி கொண்டது.2048 1152
வயதாகும் போது சிலருடைய உடலில் ஆங்காங்கே நிறமிகள் சரிசமமில்லாத வகையில் உருவாகும். தோலில் உள்ள இந்த கருமையான புள்ளிகளை நீக்கும் மருந்துகளை தோல் சிகிச்சை வல்லுநர்களிடமிருந்து பெற முடியும். ஆனால், பப்பாளியில் தயாரிக்கப்படும் ஃபேஸியல் மாஸ்க் மூலம், இந்த சரிசமமில்லாத நிறமிகள் உள்ள இடங்களை சரி செய்ய முடியும் என்று மேரி கிளேர் இதழ் குறிப்பிடுகிறது.
இந்த ஃபேஸியல் மாஸ்கை தயார் செய்து நிறமிகள் மற்றும் கரும் புள்ளிகளில் தடவி சரி செய்வது எளிமையான செயலாகும். மேலும் இது செலவும் குறைவாகவே எடுக்கும்.
2 தேக்கரண்டிகள் தேனுடன், ½ கோப்பை பப்பாளியை அரைத்து வைத்தால் ஃபேஸியல் மாஸ்க் தயார். இந்த கலவையை முகத்தில் மெலிதாக தடவி 15-20 நிமிடங்களுக்கு வைத்திருந்து விட்டு, வெந்நீரில் முகத்தைக் கழுவவும். இவ்வாறு செய்த பின்னர் மாய்ஸ்ட்ரைஸரை தோலில் போட்டுக் கொள்ளுங்கள்.
பப்பாளியும்… ஆரோக்கியமும்… ஒருவருடைய அழகை மேம்படுத்துவது வெளிப்புறத்தை அடிப்படையாக கொண்டது, ஆனால் உண்மையான அழகு என்பது ஒட்டுமொத்த உடலின் ஆரோக்கியத்தையும் பராமரிப்பது தான்.
பல்வேறு அழகு சாதனப் பொருட்களிலும் பயன்படுத்தக் கூடிய பொருளாக பப்பாளி உள்ளதால்
உங்களுக்கு பப்பாளியை வீட்டிற்கு வாங்கி வந்து, மேற்கண்ட குறிப்புகளின் படி பயன்படுத்த முடியவில்லை என்றால் கூட, கடைகளில் பப்பாளி கலந்து விற்கப்படும் பொருட்களை வாங்கி பயன்படுத்தி பலன் பெறலாம்.
பப்பாளி பழத்தை சிறுசிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக்கொள்ள வேண்டும். அதனுடன் சிறிதளவு தேன் மற்றும் பால் கலந்து பசைபோல் குழைத்துக்கொள்ள வேண்டும்.
அதனை முகம், கழுத்து பகுதியில் பூசி, சில நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் கழுவி வந்தால் சருமம் மிளிரும்.
நறுக்கிய பப்பாளி துண்டுகளுடன் சில துளிகள் எலுமிச்சை சாறு பிழிந்து நன்றாக பிசைய வேண்டும். அதனை முகத்தில் தடவி 10 நிமிடம் கழித்து நன்றாக கழுவ வேண்டும்.
பப்பாளி பழத்தில் உள்ள நொதிகள் சரும வளர்ச்சிக்கும், எலுமிச்சை பழத்தில் உள்ள சிட்ரிக் அமிலம் முகத்தில் உள்ள நுண் துளைகளில் படியும் அழுக்குகளை நீக்கி பளிச் தோற்றத்திற்கும் வித்திடும்.
பப்பாளி பழத்தை மஞ்சள் தூளுடன் கலந்தும் பயன்படுத்தலாம். சில பெண்களுக்கு முகத்தில் முடி முளைத்துக்கொண்டிருக்கும். பப்பாளி பழத்தை கூழாக்கி அதனுடன் மஞ்சள் கலந்து முகத்தில் தடவிவர வேண்டும். அந்த கலவை நன்றாக உலர்ந்த பின்னர் முகத்தை கழுவி வந்தால் நாளடைவில் முடிகள் வளர்வது தடைபடும்.
அழகிற்கு மட்டும் பப்பாளி பழத்தை பயன்படுத்தாமல் தொடர்ந்து சாப்பிட்டும் வர வேண்டும். அது இளமையை பாதுகாக்க உதவும்.
பப்பாளி தரு ம் சரும அழகு(Papaya fruit skin beauty)
பப்பாளி பழம் முகத்தில் படியும் அழுக்கையும் அதிகப்படியான எண்ணெய் சருமத்தையும் நீக்க உதவுகிறது.பப்பாளியை மசித்து கலவையை முகத்தில் பூசினாலே சரும நுண் துளைகளில் இருக் கும் அழுக்கை வெளியேற்றி விடுகிறது.
அவசரமாக வெளியே செல்ல வேண்டும் முகத்தை அழகாக்கி வேண்டும் என்று நினைப்பவர்கள் பப் பாளி பழத்துடன் கற்றாழை ஜெல்லை சேர்த்து முகத்தில் தடவி மசாஜ் செய்தால் அழகான பளிச் தோற்றத்தை எளிதாக பெறலாம்.
பப்பாளி தரும் பளபளப்பு
முகத்தில் இருக்கும் கன்னம், உதட்டின் கீழ் மற்றும் மேல் இருக்கும் சின்னச் சின்ன முடிகளை அகற்ற பப்பாளிக்கலவையுடன் சிறிது மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக குழைத்துகொள்ளுங்கள்.
முகத்தை குளிர்ந்த நீரில் கழுவி உலர துடைத்து பன்னீரில் நனைத்த பஞ்சை கொண்டு அழுந்த துடைத்து அழுக்கை போக்குங்கள்.
பிறகு பப்பாளி மஞ்சள் கலவையை முகம், கழுத்து பகுதியில் தடவி உலரவிடுங்கள். முடிந்தால் ஒரு டீஸ்பூன் அளவு கலவையை தனியாக எடுத்து சர்க்கரை கலந்து மூக்கின் மேல் ஸ்க்ரப் செய்யுங்கள்.
அரைமணி நேரம் கழித்து முகத்தை குளிர்ந்த நீரில் கழுவி மெல்லிய துணியில் துடைத்து விடுங்கள். பிறகு ஐஸ் க்யூப் கொண்டு முகத்தை மசாஜ் செய்யுங்கள்.
மின்னும் முகத்துக்கு காரணம் பப்பாளி யா என்று ஆச்சரியப்படுவீர்கள். மஞ்சளின் கைவண்ணத்தால் முடியின் வேர்க்கால்களில் வளர்ச்சி தடைபடும்.
பப்பாளிபழ ஃபேஷியல் Papaya Facial
மசித்த பப்பாளிக்கலவை- கால் கப்
வெள்ளரித்துண்டு- 5
தயிர்- 3 டீஸ்பூன்
தேன் -3 டீஸ்பூன்
எலுமிச்சைச் சாறு -1 டீஸ்பூன்
கற்றாழை ஜெல்- 2 டீஸ்பூன்
சந்தனப் பொடி – 4 டீஸ்பூன்
இரண்டு வெள்ளரித்துண்டை தவிர்த்து மற்ற இரண்டை மிக்ஸியில் விழுதாக அரைத்து கொள்ளுங் கள். அகன்ற கிண்ணத்தில் அனைத்தையும் சேர்த்து நன்றாக மசித்து கலந்துவிடுங்கள்.
பப்பாளி இலை கொண்டு ப்ளீச் செய்த முகத்தை துடைத்து இந்த பழக்கலவையை கழுத்திலிருந்து மேல் நோக்கி தடவுங்கள். கன்னம், தாடை, கண்களுக்கு கீழ், மூக்கு நுனி என்று அனைத்து இடங்களிலும் இதை ஃபேக் போடுங்கள்.
கண்களின் மேல் வெள்ளரித்துண்டை வைத்து 20 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் கழுவி கண்ணாடி முன்பு பாருங்கள். பப்பாளி தந்த அழகை கண்கூடாக காணலாம்.
பப்பாளியுடன் முல்தானி மெட்டி, தேன், மஞ்சள், பால் போன்றவற்றையும் பயன்படுத்தலாம். மேலும் பப்பாளி விதைகளை யும் அரைத்து சருமத்தில் பூசலாம். சருமத்து நிறம் கொடுக்கும்.
ஃபேஷியல் செய்தால் முகப்பரு, கருவளையம், கரும்புள்ளி, வறண்ட சருமம் போன்ற பிரச்சனைகள் இருக்காது என்று சொல்வார்கள். ஆனால் இது அத்தனையும் தீர்த்து வைக்கும் பக்க விளைவில்லாத பப்பாளியை எப்போதும் நீங்கள் விரும்புவீர்கள்.
எனினும், சில பேரக்கு பப்பாளி அலர்ஜியாகவும் இருக்கும் என்பதால், இதனை சற்றே கவனித்து, கவனமாக பயன்படுத்த வேண்டும்.