பருத்தித்துறை முறையில் தோசைப்பொடி (Paruththithurai Thosai podi)
பருத்தித்துறை முறையில் ஸ்பெஷல் தோசைப்பொடி (Paruththithurai Thosai podi)!
பருத்தித்துறையில் தோசைக்கு விசேடமாக இதை தயாரிப்பார்கள்.இட்லிபொடி அல்லது தோசைத்தூள் என்றும் சொல்வார்கள்.
மிகவும் சுவையாக இருக்கும், இலகுவாக வீட்டில் செய்யலாம்.
9 பொருட்கள் மட்டும்.அனைத்தையும் வறுத்து அரைத்தால் தோசைத்தூள் தயார்.
தேவையான பொருட்கள்

உழுந்து – 2 மே.க
அரிசி – 2 மே.க
எள்ளு – 1 மே.க
தேங்காய் துருவல் -3 மே.க
செத்தல் மிளகாய் – 6
மிளகு – 1 மே.க
சின்னசீரகம் – 1 மே.க
கருவேப்பிலை – சிறிது
உப்பு – சுவைக்கேற்ப
தோசைப்பொடி செய்யும் முறை (Paruththithurai Thosai podi recipe)
1. தேங்காய்த்துருவலை எண்ணெய் விடாமல் சட்டியில் போட்டு பொன்னிறமாக வறுக்கவும்.
2.அதை தனியாக எடுத்து வைத்து விட்டு அரிசி,மிளகு,உழுந்தை சேர்த்து உழுந்து பொன்னிறமாகும் வரை வறுக்கவும்.
3.மிளகு, சின்னசீரகத்தை நன்றாக வறுக்கவும்.
4.செத்தல், கருவேப்பிலை ஒன்றாக சேர்த்து வறுக்கவும்.
5.எள்ளைத் தனியாக பொன்னிறமாக வறுக்கவும்.
6.எல்லாவற்றையும் சேர்த்து உப்பும் போட்டு நல்ல பொடியாக அரைத்து எடுக்கவும்.

நல்ல சுவையான நறுமணமுள்ள தோசைப்பொடி தயார்.
அதிகமாக இதனை செய்து வைத்துக் கொண்டு,தேவைப்படும் போது பயன்படுத்திக் கொள்ளலாம். சுத்தமான காய்ந்த கண்ணாடி போத்தலில் போட்டு வைக்கவும்.
கவனமாக பத்திரப்படுத்தினால் ஒரு மாதம் வரை பழுதடையாது.
விரும்பிய போது தோசை, இட்லிக்கு பயன்படுத்தலாம்.
ஏன் அவசர பசிக்கு சோறு, இடியப்பம், பாண், பிட்டுடன் சேர்த்து சாப்பிட கூட சுவையாகத் தான் இருக்கும்.
செய்து வையுங்கள். சாப்பிட்டு பாருங்கள்!
இதில் பயன்படுத்தும் மிளகு,எள்ளு ,தேங்காய் சீரகம்,கறிவேப்பிலை என அனைத்து பொருட்களுமே மருந்துப் பொருட்கள்.ஆரோக்கியத்துக்கு மிகவும் நல்லது.
விரும்பிய போது தோசை, இட்லிக்கு பயன்படுத்தலாம்.
ஏன் அவசர பசிக்கு சோறு, இடியப்பம், பாண், பிட்டுடன் சேர்த்து சாப்பிட கூட சுவையாகத் தான் இருக்கும்.
எள் படபட என வெடித்ததும் தனியே எடுத்து வைத்துக் கொள்ளவும்.
தோசைப் பொடி சம்பல்,கறி என எதுவும் இல்லாமல் தோசை,இட்லியுடன் தொட்டு உண்ண ஏற்றதாகும்.