தோள்பட்டை வலி போக்க பர்வதாசனம் (Parvatasana)
பர்வதாசனம் செய்யும் முறை
கவனம் செலுத்த வேண்டிய இடம்: உடலை தளர்வாக வைத்து கொள்வதின் மீதும், விசுத்தி சக்கரத்தின் மீதும் கவனம் செலுத்தவும்.
முதலில் விரிப்பில் வஜ்ராசனம் அல்லது பத்மாசனத்தில் அமரவும். பின்னர் மெதுவாக முழங்கால்கள் இரண்டும் தரையிலிருக்கும் படி வைத்து புட்டத்தை உயர்த்தவும். கைகளை தலைக்கு மேலே உயர்த்தி உள்ளங்கைகள் வெளியிருக்குமாறு வைக்கவும்.
சூரியநமஸ்காரத்தின் ஏழாம் நிலையிலிருந்து பிருஷ்டத்தை (புட்டத்தை) உயர்த்தி மார்பையும், தலையையும் உள்நோக்கி கொண்டு வந்து தலை, மார்பு கீழ்நோக்கியபடி வைக்கவும்.
முழங்கால் முழங்கை மூட்டுகளை மடக்காமல் வைக்கவும். உள்ளங்கை, உள்ளங்கால்களை தரையில் பதிக்கவும். மூச்சை வெளியே விடவும்.
மந்திரத்தைக்கூறி சக்கரத்தை மனதால் நினைக்கவும்.
மந்திரத்தைக்கூறி சக்கரத்தை மனதால் நினைக்கவும்.
இந்நிலையில் உபாதையில்லாமல் எவ்வளவு நேரமிருக்க முடியுமோ அவ்வளவு நேரம் இயல்பான சுவாசத்துடன் இருக்கவும். மெதுவாக படிப்படியாக ஆரம்ப நிலைக்கு வரவும். இவ்வாறு இதை 4 முறை செய்ய வேண்டும்.

இந்த ஆசன நிலை ‘c’ என்ற ஆங்கில எழுத்தின் தலைகீழ் நிலை போல் வர வேண்டும். ஆரம்பப் பயிற்சியில் பாதங்களை தரையில் ஊன்றி வைப்பது சிலருக்கு கடினமாக தோன்றலாம்.
அத்தகையவர்கள் முடிந்தவரை செய்து வந்தால் தொடர்ந்து பயிற்சியில் கால் நரம்புகளில் வளையும் தன்மை அதிகரித்து சரியான நிலை வந்து விடும்.
பலன்கள்
1.இடுப்பு,கால்கள் வலுப்பெறுகின்றன.
2.விலா எலும்புகள்,தசைகள் உறுதி பெறும்.
3.தோள்பட்டை வலி,முதுகுத் தண்டு வலியை நீக்குகிறது.
4.மார்பு, வயிற்று பகுதியை வலுவாக்குகிறது.
அமர்ந்தநிலை பர்வதாசனம் (Seated Parvatasana)
கைகளை மேல் தூக்கி மலையை குறிப்பது போல செய்வதே அமர்ந்தநிலை பர்வத ஆசனமாகும் (Seated Parvatasana).
கை, கால் விரல்கள் மற்றும் தசைகள், மணிக்கட்டுகள், கணுக்கால் மற்றும் குதிகால் நரம்புகள், கழுத்து வலிமை பெறும்.