மன அமைதி தரும் யோகாசனங்கள் (Peaceful mind)
நம் முன்னோர்கள் கடைப்பிடித்து வாழ்ந்த யோகா பயிற்சிகள், மன அழுத்தம் இல்லாமல் மன அமைதியோடு (peaceful mind) வாழ வழி செய்கின்றது.
பொதுவாக எல்லா வியாதிக்கும் அடிப்படைக் காரணம் மன அழுத்தம் தான். மனவழுத்தம் ஏற்பட்டவுடன் நமது மூச்சோட்டம் மண்டலம் பாதிக்கப்படும். இந்த சமயங்களில் மூச்சின் இயக்கம் மிக அதிகமாக வெளியேறும். அதனைத் தொடர்ந்து ஜீரண மண்டலம் பாதிக்கப்படும். சங்கிலி தொடராக ரத்த ஓட்ட மண்டலமும் , ஒவ்வொரு உறுப்பும் பாதிக்கப்படும்.
இந்த மன அழுத்தத்தினால் தான் மனிதர்களுக்கு நீரிழிவு, ரத்த அழுத்தம், இதயத்தில் ஓட்டை, கழுத்து வலி, முதுகு வலி, நரம்பு பலவீனம், ஒற்றைத் தலைவலி போன்ற பல நோய்கள் வருகின்றன.
இதற்கு மன அமைதி (peaceful mind) கிடைக்கும் வழிகளில், வாழ்க்கையை நகர்த்துவது புத்திசாலித்தனம்.
மனித உடலில் தமோ குணம், ரஜோ குணம், சத்வ குணம் என்று மூன்று குணங்கள் உள்ளன.
இந்த குணங்களை அதிர்வலைகள் என்று அழைப்பார்கள்.
ஒருவருடைய உடலில் இந்த மூன்று குணங்களின் அதிர்வலைகள் ரத்தத்துடன் கலந்து இருக்கும். மனதை அமைதிப்படுத்தும் யோகாசனங்களை நீங்கள் செய்யும் போது தமோகுண அதிர்வலைகள் படிப்படியாக மாறி ரஜோகுண அதிர்வலைகள் வரும்.
அதன் தொடர்ச்சியாக சத்வகுண அதிர்வலைகள் உருவாகி விடும். அப்போது உங்கள் உடலில், மனதில் மனஅழுத்தம் என்பது நிச்சயமாக இருக்காது.
மன அழுத்தம் நீக்கும் சில யோகாசனங்கள்(Yoga for peaceful mind)
சஸங்காசனம்
- விரிப்பில் கிழக்கு நோக்கி முதலில் வஜ்ராசனத்தில் அமரவும்.
- இப்போது மூச்சை மெதுவாக வெளியிட்டுக் கொண்டே குனிந்து நெற்றி தரையைத் தொடும்படி அமரவும்.
- கைகள் இரண்டும் பக்கவாட்டில் வைத்துக் கொள்ளவும்.
- சாதாரண மூச்சில் இப்படியே ஒரு நிமிடம் இருக்கவும்.
இந்த ஆசனம் செய்யும் போது நமது மூளை பகுதி, அதற்கு கீழ் உள்ள நாளமில்லா சுரப்பிகளில் உள்ள அழுத்தங்கள் வெளியேறுவதாக எண்ணவும். மூச்சை வெளியிட்டு நெற்றி தரையைத் தொடும் போது, உண்மையில் டென்ஷன் வெளியேறுவதை உங்களால் உணர முடியும். இந்த ஆசனத்தை காலையிலும் மாலையிலும் மூன்று முறை செய்து வரவும்.
சாந்தியாசனம்(Santhiyasana for peaceful mind)
சாந்தி ஆசனம் உடலை, எந்த வித விறைப்புத்தன்மையும் இல்லாமல் தளர்வாக வைத்து படுத்திருக்கும் நிலையில் செய்யப்படும் ஆசனம்.
எல்லா ஆசனங்களும் செய்து முடித்ததும் ,இறுதியாக சாந்தியாசனம் செய்து,யோகசன பயிற்சியை நிறைவு செய்வது வழக்கம்.
இந்த ஆசனத்தில் இருக்கும்போது, நம் உச்சந்தலையில் இருந்து உள்ளங்கால் வரை ரத்த ஓட்டம் சீராக இருக்கும். மூளை ஓய்வுபெறும். மனம் அழுத்தம் நீங்கி ,மனம் அமைதி அடையும்.
உட்காட்டாசனம் செய்யும் போதும் மன அழுத்தம் இல்லாமல் போய், மனம் அமைதி கிடைக்கும்.