நோய் எதிர்ப்பு சக்தியைத் தூண்டும் கம்பு (Immune boosting Pearl millet)
இந்தியாவில் விளையும் தானிய வகைகளில் கம்பும் ஒன்று. வறட்சி தாண்டவம் ஆடும் காலங்களில் மக்களின் பசியைப் போக்கும் தானியமாக கம்பு இருந்து வந்துள்ளது.
நம் முன்னோர்கள் தங்களுடைய உணவில் அதிகளவு தானிய வகைகளைச் சேர்த்து வந்தனர். காலையில் கம்பைக் கஞ்சியாக்கி அருந்தினர். சிலர் அரிசி உபயோகப்படுத்துவது போல் வேகவைத்து வடித்து சாப்பிட்டனர். ஆனால் இடைப்பட்ட காலத்தில் இந்த தானிய வகைகளை மறந்து நாவின் சுவையை அதிகம் விரும்பியதால் சத்தற்ற உணவுகளை சாப்பிட்டு வருகின்றோம்.நோய்களை நாமே விலை கொடுத்து வாங்குகின்றோம்.
கம்பு தானியத்தில் (Pearl millet) அளவில் புரதம், கல்சியம், பாஸ்பரஸ், விற்றமின்கள் உள்ளதால் உணவுச்சத்து தரத்தில் முதன்மை பெற்று விளங்குகின்றது. போதிய அளவு மாவுச்சத்தும், தேவையான அமிலங்களான கரோட்டின், லைசின் ஆகியவற்றைப் பெற்ற புரதமும், தாது உப்புகளும் நிறைந்த தானியம் கம்பு, தங்க தானியம் என்று அழைக்கப்படுகிறது.
உடலில் ஏற்படும் பல நோய்களுக்குக் காரணம் விற்றமின் சத்துக்குறைவேயாகும். விற்றமின் அளவில் கம்பு (Pearl millet) மற்ற தானியங்களைக் காட்டிலும் சிறந்தே விளங்குகிறது.
ஆரோக்கியமான தோலிற்கும், கண்பார்வைக்கு முக்கிய சத்தான விற்றமின் ஏ யை உருவாக்குவதற்கு முக்கிய காரணி பீட்டா கரோட்டீன். இது கம்பு பயிரில் இயற்கையிலேயே அதிக அளவில் உள்ளது.
இரவு நேரங்களில் துங்காமல் கண் விழிப்பவர்கள், அதிக நேரம் ஒரே இடத்திலிருந்து வேலை செய்பவர்கள், அதிக சூடுடைய பகுதிகளில் வேலை செய்பவர்கள், அதிக மன அழுத்தம் கொண்டவர்களின் உடலானது அதிக உஷ்ணமடையும்.
இவர்கள் கம்பை கஞ்சியாகக் காய்ச்சிக் காலை வேளையில் அருந்தி வந்தால் உடல் சூடு குறையும். 

கம்பு தரும் நோய் எதிர்ப்பு பண்புகள்
சோர்வு நீங்க கம்பு (Pearl millet)
மனச் சோர்வு இருந்தால் உடல் சோர்வு உன்டாகும். அதுபோல் வெயிலில் அதிகம் அலைகிறவர்கள், கடின வேலை செய்பவர்கள் அதிகம் சோர்வடைகின்றனர்.
இவர்கள் புத்துணர்வு பெற கம்பை கூழாக்கி, அதனுடன் மோர் கலந்து மதிய வேளையில் அருந்தி வந்தால் உடல் சோர்வு நீங்கி புத்துணர்வு அடைவர்.
அஜீரணக் கோளாறு நீங்க
அஜீரணக் கோளாறு கொண்டவர்கள் கம்பங்கஞ்சியை அருந்தி வந்தால் அஜீரணக் கோளாறுகள் நீங்கி நன்கு பசியெடுக்கும்.
வயிற்றில் புண்கள் உண்டானால் வாயிலும் புண்கள் ஏற்படும். மேலும் வயிற்று புண்களை குணப்படுத்தும் குணம் கம்புக்கு உண்டு. கம்புடன் அரிசி சேர்த்து நன்கு குழையும்படி சோறாக்கி மதிய உணவில் சேர்த்துக் கொண்டால் குடல்புண், வயிற்றுப்புண், வாய்ப்புண் குணமாகும்.

உடல் வலுவடைய
கம்பங்கூழ் செய்வோம் (Pearl millet recipe)
கம்பு மட்டுமல்லாமல் நமது உணவில் சேர்க்க மறந்து போன சோளம், கேழ்வரகு, தினை, சாமை, குதிரைவாலி, வரகு, பனிவரகு போன்ற தானியங்களை உணவில் சேர்த்துக் கொண்டால் நோய் இல்லாமல் ஆரோக்கியமாக வாழலாம்.