அதிக மருத்துவதன்மை கொண்டதன் காரணமாக பிரண்டையை நம் முன்னோர் உணவில் பயன்படுத்தி வந்ததை உணர்ந்து , தற்போது பலரும் தம் உணவில் சேர்க்க ஆரம்பித்துவிட்டார்கள்.
பிரண்டை தண்டில் சில சமையல் செய்முறைகளைப் (Pirandai recipes) பார்ப்போம்.
பிரண்டையில் நாரை நீக்கிவிட்டு அலசி பொடியாக நறுக்கவும். நறுக்கிய துண்டுகளை சிறிது நேரம் வெயிலில் வைக்கலாம். தக்காளி, வெங்காயம், பூண்டை பொடியாக நறுக்கி கொள்ளவும். புளியை சிறிது நீரில் கரைத்து கொள்ளவும்.
கடாயில் பொடி செய்யவேண்டிய பொருள்களை, ஒன்றன் பின் ஒன்றாக போட்டு வறுத்துப் பொடித்து கொள்ளவும். பிறகு கடாயில் எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு, வெந்தயம், உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை, பெருங்காயம் சேர்த்து தாளித்த பின்னர் பொடியாக நறுக்கிய பூண்டு, சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
அதனுடன் தக்காளி சேர்த்து வதக்கவும். தக்காளி நன்றாக வதங்கியதும் பிரண்டையை சேர்த்து வதக்கவும். இதில் புளிக்கரைசலில் சாம்பார் பொடி, உப்பு, மஞ்சள் தூள், வறுத்து அரைத்த பொடி சேர்த்து கொதிக்கவிடவும்.
பிரண்டை வெந்த பின் வெல்லத்தூள் சேர்த்து ஒரு கொதி விட்டு இறக்கவும். சுவையான ஆரோக்கியம் நிறைந்த பிரண்டை குழம்பு தயார்.
பிரண்டை இலைத்துவையல் (Pirandai recipes)
பிரண்டையின் இலையிலும் துவையல் செய்யலாம். இதைச் சாப்பிட்டு வருவதால் இதய நோய்கள், ரத்தஅழுத்தம், சர்க்கரைநோய், குடல் புண், மூல நோய் போன்றவை குணமாகும். இலை 100 கிராம், இஞ்சி ஒரு துண்டு, பூண்டு – 3 பல், மிளகு – 5, காய்ந்த மிளகாய் – 3, கறிவேப்பிலை, கொத்தமல்லி மற்றும் மஞ்சள், உப்பு ஆகியவை தேவையான அளவு எடுத்துக்கொள்ளவும்.
முதலில் இஞ்சி, பூண்டு, மிளகு, காய்ந்த மிளகாய், மஞ்சள் போன்றவற்றை அரைத்து வைக்கவும். பிறகு பிரண்டை இலை, கறிவேப்பிலை, கொத்தமல்லி போன்றவற்றை நல்லெண்ணெய் அல்லது நெய்விட்டு வதக்கி, ஏற்கெனவே அரைத்து வைத்த கலவையுடன் சேர்த்து அரைக்கவும். உப்பு சேர்த்தால் துவையல் தயார்.
பிரண்டை வற்றல்
நன்கு முற்றிய இதன் தண்டுகளை சிறு துண்டுகளாக நறுக்கி, மோரில் போட்டு தேவையான அளவு உப்பு சேர்த்து ஊறவைத்து உலர்த்தி வற்றலாக்க வேண்டும். அந்த வற்றலை எண்ணெயில் பொரித்துச் சாப்பிட்டால் பசியின்மை, நாக்குச் சுவையின்மை போன்றவை குணமாகும்.
பிரண்டை துவையல் அல்லது சட்னி (Pirandai recipes)
பிரண்டைத் தண்டுகளின் மேல் தோலை அகற்றி, அதில் உள்ள நாரையும் அகற்றிவிட்டு சிறு துண்டுகளாக நறுக்கி நல்லெண்ணெய் அல்லது நெய்யில் வதக்க வேண்டும்.
அதனுடன் காய்ந்த மிளகாய், புளி, உப்பு சேர்த்து அரைக்க வேண்டும். சுவைக்காக தேங்காய், உளுந்து சேர்த்துக்கொள்ளலாம். பிறகு, கடுகு, உளுந்தம்பருப்பு தாளித்த துவையலை சாதத்துடன் பிசைந்து சாப்பிடலாம்.
சிவப்பு மிளகாய் – 10 எண்ணிக்கை அல்லது காரத் தேவைக்கு ஏற்றவாறு மிளகாய் சேர்க்கவும்.
புளி – பெரிய நெல்லிக்காய் அளவு அல்லது 1 தேக்கரண்டி புளி சாந்து
நல்லெண்ணெய் – 4 தேக்கரண்டி
கடுகு – 1 தேக்கரண்டி
வெந்தயம் – 1 தேக்கரண்டி
பெருங்காயம் – 1/2 தேக்கரண்டி
உப்பு – 3/4 தேக்கரண்டி அல்லது தேவையான அளவு
பிஞ்சுப் பிரண்டைகளைத் தேர்வு செய்து இலைகளை நீக்கி நன்றாகக் கழுவிக்கொள்ளவும். பிரண்டையின் பக்கத்தைச் சீவி/ நாரை நீக்கவும், ஒரு சிறிய கத்தியைப் பயன்படுத்தி நீக்கவும். சிறுசிறு துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும்.
அரை தேக்கரண்டி எண்ணெயை ஒரு கடாயில் விட்டு சூடுபடுத்திக்கொள்ளவும், பிரண்டை, சிவப்பு மிளகாய், புளி சேர்த்து நன்றாக வதக்கவும். பிறகு ஆறுவதற்கு எடுத்து வைக்கவும்.
வெந்தயத்தையும் கடுகையும் எண்ணெய் விடாமல் வறுத்து ஆறவைத்து , கரடுமுரடாக உடைத்துக்கொள்ளவும்.
பிரண்டை, சிவப்பு மிளகாய், புளியை ( புளி சாறு பயன்படுத்தில் இப்போது சேர்த்துக்கொள்ளவும்)
அம்மிக்கல் இருந்தால் கரடுமுரடானச் சாந்தாக அரைத்துக்கொள்ளலாம்.
ஒரு கடாயில் எண்ணெயை சூடுபடுத்தி, பெருங்காயம், உப்பு ஆகியவற்றை நன்றாக கலந்துகொள்ளவும். குறைவான தீயில் கிட்டத்தட்ட 8 நிமிடங்களுக்கு வதக்கிக்கொள்ளவும்.
அருமையான மணம் கிடைக்க, வெந்தயம் கடுகுத்தூள் சேர்த்துக்கொள்ளவும்.
குறைவான தீயில் மேலும் 4 நிமிடங்கள் சமைத்து எடுத்து ஆறவைத்து காற்றுப்புகாதப் பாத்திரத்தில் சேமிக்கவும்.
அரிசி சாதத்துடன் தொட்டுக்கொள்ள அற்புதமான காலை உணவு.