இதயம் காக்கும் பிரண்டை(Pirandai)

இதயத்தை பலப்படுத்தும் ,வாயு பிடிப்பை போக்க கூடியதும், கொழுப்பை குறைக்கவல்லதும், கை கால் குடைச்சலுக்கு அரு மருந்தாகும் பிரண்டை(Pirandai) இன்னும் பல்வேறு மருத்துவ குணங்களை உள்ளடக்கியுள்ளது.

பிரண்டை… சாதாரண பிரண்டை, சிவப்பு பிரண்டை, உருட்டுப்பிரண்டை அல்லது உருண்டைப்பிரண்டை, முப்பிரண்டை, தட்டைப்பிரண்டை அல்லது சதுரப்பிரண்டை, களிப்பிரண்டை, தீம்பிரண்டை, புளிப்பிரண்டை, ஓலைப்பிரண்டை… என பல வகைப்படும்.

இதற்கு, `வஜ்ஜிரவல்லி’ என்ற பெயரும் உண்டு. `Cissus quadrangularis’ என்ற தாவரவியல் பெயர்கொண்ட இது, கொடி வகையைச் சேர்ந்தது.பற்றைக்காடுகள் மற்றும் வேலிகளில் படர்ந்து வளரக்கூடியது.

இதன் சாறு உடலில் பட்டால், அரிப்பையும் நமைச்சலையும் ஏற்படுத்தும். இதன் வேர்,இலை மற்றும் தண்டுப்பகுதிகளே பெரும்பாலும் மருத்துவத்துக்குப் பயன்படுகின்றன.

இதில் நிறைய வகைகள் இருந்தாலும், நான்கு பட்டைகளைக்கொண்ட சாதாரணப் பிரண்டையே அதிகமாகக் கிடைக்கிறது.

எலும்புகள் சந்திக்கக்கூடிய இணைப்புப் பகுதிகளிலும் நரம்பு முடிச்சுகளிலும் வாயுவின் சீற்றத்தால், தேவையற்ற நீர் தேங்கிவிடும். இதன் காரணமாக பலர் முதுகுவலி, கழுத்துவலியால் அவதிப்படுவார்கள்.

மேலும் இந்த நீர், முதுகுத்தண்டு வழியாக இறங்கி சளியாகி, பசையாக மாறி முதுகு மற்றும் கழுத்துப் பகுதியில் இறங்கி, இறுகி முறுக்கிக்கொள்ளும்.

இதனால் பாதிக்கப்பட்டவர்கள் தலையை அசைக்க முடியாமல் அவதிப்படுவார்கள். இந்தப் பாதிப்புகளிலிருந்து விடுபட பிரண்டைத் துவையல் (Pirandai) உதவும்.

பிரண்டந்தண்டில் ,குழம்பு,பொடி,துவையல், சட்னி என சமைத்து உணவுடன் சேர்த்துக் கொள்ளலாம்.

பிரண்டைத் துவையல் (Pirandai thuvaiyal ) சாப்பிடுவதால் கிடைக்கும் பயன்கள்

மனஅழுத்தம் மற்றும் வாய்வு சம்பந்தமான நோய்கள் இருந்தால், வயிறு செரிமான சக்தியை இழந்துவிடும். அப்படிப்பட்ட சூழலில் இதைத் துவையல் செய்து சாப்பிட்டால் செரிமான சக்தியைத் தூண்டிவிடும்.

அஜீரணக் கோளாறுகளைப் போக்கும். மூலநோயால் அவதிப்படுபவர்களுக்கு இந்தத் துவையல் பலன் தரும்.  மூலத்தால் மலத்துவாரத்தில் அரிப்பு, மலத்துடன் ரத்தம் கசிதல் போன்ற சூழலில் இந்தத் துவையலைச் சாப்பிடலாம்.

அடிபட்ட வீக்கம், சுளுக்கு, பிடிப்பு, வலி போன்றவற்றுக்கு இது சிறந்த நிவாரணம் தரக்கூடியது. துவையல் செய்து சாப்பிடுவதன் மூலமே நல்ல நிவாரணம் கிடைக்கும்.

மூளை நரம்புகளை பலப்படுத்தும்.எலும்புகளுக்கு சக்தி தரும். ஈறுகளில் ஏற்படும் ரத்தக்கசிவை நிறுத்துவதுடன் வாய்வுப் பிடிப்பைப் போக்கும். வாரத்தில் இரண்டு நாள் வீதம் சாப்பிட்டு வந்தால் தேகம் வலுப்பெறும்; உடல் வனப்பும் பெறும்.

வாயு தொல்லை போக ,கொழுப்பை குறைக்க,பிரண்டையின் பயன்கள்,அன்னைமடி,இதயத்தை பாதுகாக்க , Gas-trouble-cholesterol-control,pirandai,medicinal value of pirandai,pirandai recipe,annaimadi.com, good for heart,pirandai for heart safety

இதன் துவையல் உடல் சுறுசுறுப்பை அதிகரிக்கச் செய்யும். ஞாபகசக்தியை பெருக்கும்.மூளை நரம்புகளை பலப்படுத்தும்.எ லும்புகளுக்கு சக்தி தரும்.

ஈறுகளில் ஏற்படும் ரத்தக்கசிவை நிறுத்துவதுடன் வாய்வுப் பிடிப்பைப் போக்கும். வாரத்தில் இரண்டு நாள் வீதம் சாப்பிட்டு வந்தால் தேகம் வலுப்பெறும். உடல் வனப்பும் பெறும்.
வாய்வு சம்பந்தமான நோய்கள் இருந்தால், வயிறு செரிமான சக்தியை இழந்துவிடும். அப்படிப்பட்ட சூழலில் இதைத் துவையல் செய்து சாப்பிட்டால் செரிமான சக்தியைத் தூண்டிவிடும்.

ரத்தக்குழாய்களில் கொழுப்பு படிவதால் ரத்த ஓட்டத்தின் வேகம் குறையும். இதனால் இதயத்துக்குத் தேவையான ரத்தம் செல்வது தடைப்பட்டு, இதய வால்வுகள் பாதிப்படையும். இந்த பாதிப்புக்கு உள்ளானோர், அடிக்கடி இந்தத் துவையலைச் சாப்பிட்டு வந்தால் ரத்த ஓட்டம் சீராகும்.

பெண்களுக்கு மாதவிடாய்க் காலத்தில் ஏற்படும் முதுகுவலி, இடுப்புவலி போன்றவற்றுக்கும் இது நல்ல மருந்து.

வாயு தொல்லை போக ,கொழுப்பை குறைக்க,பிரண்டையின் பயன்கள்,அன்னைமடி,இதயத்தை பாதுகாக்க , Gas-trouble-cholesterol-control,pirandai,medicinal value of pirandai,pirandai recipe,annaimadi.com, good for heart,pirandai for heart safety

எலும்பு முறிவு ஏற்பட்டால், இதன் துவையலைச் சாப்பிடுவதன் மூலம் நல்ல பலன் பெறலாம். இளம் தண்டுடன் புளி, உப்பு சேர்த்து அரைத்து, நன்றாகக் காய்ச்சி பொறுக்கும் சூட்டில் பற்றுப் போடுவதன் (பாதிக்கப்பட்ட இடத்தில் பூசுவது) மூலம் பலன் கிடைக்கும்.

எலும்பு முறிவு மட்டுமல்லாமல், அடிபட்ட வீக்கம், சுளுக்கு, வலி உள்ள இடங்களிலும் இதைப் பூசிவர நிவாரணம் கிடைக்கும்.

பிரண்டை உப்பு (Pirandai salt)

பிரண்டையை உலர்த்தி எடுத்து தீயில் எரித்துச் சாம்பலாக்க வேண்டும். அப்படிக் கிடைக்கும் ஒரு கிலோ சாம்பலை 3 லிட்டர் நீரில் கரைத்து, வடிகட்டி, அரை நாள் தெளியவைக்க வேண்டும்.

அப்படி தெளிந்த நீரை பீங்கான் பாத்திரத்தில் ஊற்றி 8 முதல் 10 நாள்கள் வெயிலில் உலரவைக்க வேண்டும். நீர் முழுவதும் வற்றி உலர்ந்த பிறகு கீழே படிந்திருக்கும் உப்பைச் சேகரித்து வைக்கவும்.

பிரண்டை உப்பில் 2 முதல் 3 கிராம் எடுத்துக்கொண்டு அதனுடன் பால் சேர்த்துச் சாப்பிட 2 மாதத்தில் உடல்பருமன் குறைந்து, ஊளைச் சதையும் குறையும்.

2 கிராம் பிரண்டை உப்புடன் ஜாதிக்காய்த்தூள் 5 கிராம் சேர்த்துச் சாப்பிட்டு வந்தால், ஆண்மைக்கோளாறு பிரச்cசனை தீரும். வீரியம் பெருகும். உடல் வலிமை பெறும்.

வாய்ப்புண், வாய்நாற்றம், உதடு வெடிப்பு போன்ற பிரச்னைகளுக்கு 2 கிராம் வெண்ணெயுடன் இந்த உப்பைக் கலந்து இரண்டு தடவை கொடுத்தால், மூன்று நாளில் குணமாகும்.

உடல் சுறுசுறுப்பு அதிகரிக்கும், ஞாபக சக்தி பெருகும், மூளை நரம்புகளும் பலப்படும். பிரண்டைத் துவையலை குழந்தைகளுக்குத் கொடுத்து வர எலும்புகள் உறுதியாகும். எலும்பு முறிவு ஏற்பட்டால் உடைந்த எலும்புகள் விரைவாகக் கூடவும் பிரண்டை உதவுகிறது.
 
பிரண்டையில் சாறு 6 தேக்கரண்டி மற்றும் ஒரு தேக்கரண்டி நல்லெண்ணெய் கலந்து காலையில் மட்டும் ஒரு வாரம் சாப்பிட்டு வர பெண்களுக்கு மாதவிடாய்  சீராகும்.

பிரண்டையின் மருத்துவ பலன்கள் (Medicinal benefits of Pirandai )

பிரண்டையை (Pirandai) வாரத்தில் இரண்டு நாள் வீதம் சாப்பிட்டு வந்தால் உடல் வலுப்பெறும்.உடல் வனப்பும் பெறும். பிரண்டையை சிறு துண்டுகளாக நறுக்கி, நெய்விட்டு  வதக்கி நன்கு அரைத்து, சிறு நெல்லிக்காய்  அளவிற்கு காலை, மாலை சாப்பிட ரத்த மூலம் குணமாகும்.
 
பிரண்டை, கற்றாழை வேர், நீர் முள்ளி வேர், பூண்டு, சுக்கு, மிளகு, கடுக்காய் சம அளவு எடுத்து அரைத்து மோரில் கலந்து குடித்து வர உள்மூலம் குணமாகும்.  இரைப்பை அழற்சி, அஜீரணம், பசியின்மை போன்ற செரிமான பிரச்சினைகளுக்கு பிரண்டை துவையல் மிகவும் சிறந்த மருந்தாக விளங்குகிறது.
 
உள் மற்றும் வெளி மூலம் மற்றும் வயற்றில் உள்ள குடற்புழுக்களை நீக்குவதற்கும் பிரண்டை நல்ல மருந்தாக விளங்குகிறது. பிரண்டையுடன் இஞ்சி, பூண்டு சேர்த்து துவையல் செய்து சாப்பிட்டால் பித்த மயக்கம், உடல் எரிச்சல் விலகும்.
 
வாதநோய், கபநோய் உள்ளவர்கள் வாரம் இருமுறை பிரண்டை பயன்படுத்தினால் வாத கப தோஷம் கட்டுப்படும். பித்தத்தை அதிகபடுத்தும் குணம் கொண்டது. எனவே பிதசம்பந்தமான பிரச்னை உள்ளவர்கள் தவிர்ப்பது நல்லது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *