பருத்தித்துறை தோசை (Point Pedro Dosa)
பருத்தித்துறை தோசை (Point Pedro Dosa) சுடுவோம்.
அதன் தனித்துவமான சுவை, வாசனையால் பருத்தித்துறை தோசை (Point Pedro Dosa)பிரசித்தி பெற்றது!
பருத்தித்துறை தோசை செய்ய தேவையான பொருட்கள்
உழுந்து – 3 கப்
பழைய சோறு அல்லது அரிசி – 1 கப்
வெந்தயம் – 1 மே.க கோதுமை மா – 1 கப்
அப்பச்சோடா – 1 சிட்டிகை
உப்பு – 2 தே.க அல்லது சுவைக்கேற்ப
செய்யும் முறை
1.உழுந்து,வெந்தயத்தைக் கழுவி ,ஒரு பாத்திரத்தில் போட்டு நீர் விட்டு குறைந்தது 3 மணிநேரமாவது ஊறவைக்கவும்.
2.ஊறியதும் அதில் பழைய சோற்றையும் சேர்த்து நிறைய நீர் விட்டு நல்ல மையாக அரைக்கவும்.
(சோற்று நீர்,உழுந்து ஊறிய நீரை விட்டு அரைக்கலாம்)
3.அரைத்த உழுந்துக் கலவையை ஒரு பாத்திரத்தில் விட்டு மூடி வைக்கவும்.
இது அடுத்தநாள் புளித்த உழுந்து கலவை.
4.தோசை சுட ஆரம்பிக்கும் முதல் மா, உப்பு, அப்பச்சோடா சேர்த்து ,தேவை என்றால் நீர் சிறிதுவிட்டு நன்றாகக் கலக்கி கரைத்த பின் சுடலாம்.
4. நன்கு புளித்திருந்தால் இப்படி அழகாக ஓட்டைகள் வரும்.

இலங்கை,இந்தியா என்றால் காலையில் அரைத்து வைத்து விட்டு இரவு சுடமுடியும்..ஆனால் நீங்கள் குளிர்நாடுகளில் வசிப்பவர்களாக இருந்தால் ,மா விரைவாக புளிக்காது. அதனால் இரவு அரைத்து வைத்து அடுத்தநாள் மதியம் அல்லது மாலையில் சுட சரியாக இருக்கும். வெயில் நாட்கள் என்றால் காலையில் அரைத்து இரவு சாப்பாட்டுக்கு சுடலாம்.


பருத்தித்துறை தோசை (Point Pedro Dosa) மட்டுமல்லாது, கூடவே விசேடமாக தாயரிக்கப்படும் தோசைத்தூள் , மாங்காய் வைத்து அரைத்த வெள்ளைச் சம்பல், தேங்காய் சம்பல்,மிளக்காய்க்கறி (அதிக பச்சை மிளகாய் சேர்த்த கத்தரிக்காய்க்கறி) என எல்லாமே கூட்டாக அசத்தும். அங்கே சாப்பிட்டவர்களுக்கு தெரியும். அதன் அருமையான சுவை இன்னும் நாக்கில் இருக்கும்.
தோசையில் எத்தனையோ விதம்.ஒவ்வொரு விதமான தோசையும் தனிப்பட்ட அதன் சுவையைக் கொண்டிருக்கும்.
இந்த முறையில் செய்து சாப்பிட்டு பாருங்கள். வீட்டில் உள்ள அனைவருக்குமே மிகவும் பிடிக்கும்!