கண்களைக் காக்கும் பொன்னாங்காணி கீரை (Ponnanganni Keerai)

பொன்னாங்காணி (Ponnanganni Keerai) என்பது பொன் ஆம் காண் நீ. இதைக் கண்டால் உன் உடல் பொன்னாகக் காண்பாய் எனப் பொருள் பெறுகின்றது.

பொன்னாங்கண்ணிக் கீரை (Ponnanganni Keerai)வாய் துர்நாற்றத்தை நீக்கும். இதயமும் மூளையும் புத்துணர்வாக்கும். மேனியை பளபளக்கச் செய்யும்.

நோய் காரணமாக பலவீனமடைந்தவர்கள் டானிக் போன்று இக்கீரையை உண்டு வர உடலில் ரத்த உற்பத்தி பெருகி நல்ல பலம் சேரும்.
அசைவம் தான் தேவை என்று இல்லை உடலை வலுப்படுத்த பசலையும் ,பொன்னாங்கண்ணிக் கீரையும் போதுமானது.

இந்த கீரையை தினந்தோறும் உண்டு வாழ்வோருக்கு உடல் பொன்போல பளபளப்பாகும் என்பர்.

எதிர் அடுக்குகளில் சற்று நீண்ட சிறு இலைகளைக் கொண்ட தரையோடு படர்ந்து வளரும் சிறு செடி இனம் பொன்னாங்கண்ணி. வெள்ளை நிறப் பூக்கள் இலைக் கோணங்களில் காணப்படும். செடி முழுவதும் மருத்துவக் குணம் கொண்டது.

புரதம், இரும்பு, சுண்ணாம்பு சத்துக்கள் விற்றமின் சீயும் நிறைந்த இந்தக் கீரை குளிர்ச்சி தரக் கூடியது. பத்தியக் கீரை இது.

உடல் உஷ்ணத்தைத் தணித்து உடலுக்கு பலம் தரவல்ல இந்தக் கீரை சொறி சிரங்குகளை போக்கி மேனியின் அழகைக் கூட்டும். கண்கள் சம்பந்தமான நோய்கள் அனைத்தையும் போக்கி நல்ல பார்வையைத் தரவல்லது இது, மூல நோய், மண்ணீரல் பாதிப்புகள் போக்கும் தன்மை இதற்கு உண்டு.

தொடர்ந்து ஒரு மண்டலம் சாப்பிட்டு வந்தால் பகலில் கூட நச்சத்திரம் காணலாம் என்பர் .கண்ணுக்கு அத்தனை நல்லது. கண்களுக்கு பொன்னாங்காணி கீரை,Ponnanganni Keerai,annaimadi.com,கண்நோய்களுக்கு எளிய தீர்வு,உடல் சூது குறைய ,உடலுக்கு புத்துணர்ச்சி,கீரைவகை ,கீரையின் பயன்கள்,Gylden spinat til øjne, simpelt middel mod øjensygdomme, reducerer træthed, opfrisker kroppen, typer af spinat, fordele ved spinat

இதற்கு அகத்தியர் கீரை, பொன்னாங்காணி, சீமை பொன்னாங்கண்ணி என பல பெயர்கள் உண்டு. இந்தியா முழுவதும் காணப்படும் இது படர்பூண்டு வகையைச் சார்ந்தது.

பொன்னாங்கண்ணிக் கீரையின் சாறு எடுத்து நல்லெண்ணையுடன் சேர்ந்து தைலம் காய்ச்சி தலைக்குத் தேய்த்துக் குளித்து வர கண் எரிச்சல், உடல் உஷ்ணம்- போன்றவைகள் நீங்கி உடல் குளிர்ச்சிப் பெறும்.

தினமும் உணவில் கீரையை சேர்த்து வந்தால் நோயில்லா பெரு வாழ்வு வாழலாம் என்று ஆன்றோர்களும் சான்றோர்களும் கூறியுள்ளனர்.

இன்று நாம் உண்ணும் உணவிலும் சுவாசிக்கும் காற்றிலும் இரசாயனம் கலந்திருப்பதால் அவை இரத்தத்தில் நேரடியாக கலந்துவிடுகின்றன. இதனால் இரத்தம் அசுத்தமடைகின்றது.
பொன்னாங்கண்ணிக் கிரையை நன்றாக அலசி சிறிதாக நறுக்கி, அதனுடன் பாசிப்பருப்பு, சின்ன வெங்காயம், சீரகம், பூண்டு மிளகுத்தூள் சேர்த்து வேகவைத்து மசியல் செய்து சாப்பிட்டு வந்தால் அசுத்த இரத்தம் சுத்தமாகும். உடலுக்கு புத்துணர்ச்சியைத் தரும்.

அதிக வெயிலில் அலைந்து வேலை செய்பவர்களுக்கும், கணினி முன் அதிக நேரம் அமர்ந்து வேலை செய்பவர்களுக்கும், சரியான தூக்கம் இல்லாதவர்களுக்கும் கண்கள் சிவந்து காணப்படும். கண்களில் எரிச்சல் இருந்துகொண்டே இருக்கும்.

கூந்தல் வளரபொன்னாங்காணி கீரை (Ponnanganni Keerai)

தினமும் பொன்னாங்கண்ணி (Ponnanganni Keerai) தைலம் தயாரிக்கும் முறை

பொன்னாங்கண்ணி இலையை நிழலில் உலர்த்தி காயவைத்தது – 20 கிராம், அருகம்புல் காய்ந்தது – 10 கிராம், செம்பருத்தி பூ காய்ந்தது – 10 கிராம் எடுத்து 1/2 லிட்டர் தேங்காய் எண்ணெயில் நன்கு காய்ச்சி பாட்டிலில் அடைத்து தினமும் உபயோகிக்கலாம்.

கண் சம்பந்தப்பட்ட  வியாதிகளுக்கு பொன்னாங்கண்ணிக் கீரை

(Ponnanganni Keerai)

இவர்கள் பொன்னாங்கண்ணிக் கீரையை (Ponnanganni Keerai) பொரியல் செய்து சாப்பிட்டு வந்தால் கண் பார்வைக் கோளாறுகள் நீங்கும்.

குடலில் அலர்ஜி உண்டாகி அவை மூலத்தை தாக்கி மூலநோய் ஏற்படும். இதற்கு சிலர் அறுவை சிகிச்சை கூட செய்துகொள்வார்கள்.கண்களுக்கு பொன்னாங்காணி கீரை,Ponnanganni Keerai,annaimadi.com,கண்நோய்களுக்கு எளிய தீர்வு,உடல் சூது குறைய ,உடலுக்கு புத்துணர்ச்சி,கீரைவகை ,கீரையின் பயன்கள்,Gylden spinat til øjne, simpelt middel mod øjensygdomme, reducerer træthed, opfrisker kroppen, typer af spinat, fordele ved spinat

இந்த நிலை மாற பொன்னாங்கண்ணி கீரையுடன் பூண்டு, வெங்காயம் சேர்த்து வதக்கி அதனுடன் சீரகம் சிறிது சேர்த்து சாப்பிட்டு வந்தால் மூலநோய் படிப்படியாக குணமாகும். அப்போது புளி, காரத்தை தவிர்ப்பது நல்லது.

பொன்னாங்காணி இலைகளை ஒரு கைப்பிடியளவு எடுத்து அதிகாலையில் மென்று தின்று ஒரு டம்ளர் பால் குடித்து வர உடல்குளிர்ச்சி அடைந்து கண் நோய் குணமாகும். பார்வை தெளிவடையும்.

பொன்னாங்காணி இலையைக் கீரையாக உணவுடன் தொடர்ந்து உண்டு வர உடல் சூடு, மூலம் குணமாகும். கண் ஒளி பெறும்.

பொன்னாங்காணியை உப்பு இல்லாமல் வேக வைத்து வெண்ணெயிட்டு 40 நாளுண்ண கண்ணில் உண்டாகும் நோய் நீங்கும்.

நம் உடலில் உஷ்ணம் மட்டுப்பட்டு சீராக இருப்பதற்கு, பொன்னாங்கண்ணிக் கீரை மூலம் வீட்டு வைத்தியம் மேற்கொள்ளலாம்.

பொன்னாங்கண்ணிக் கீரை கண் சம்பந்தப்பட்ட வாத காசம், கருவிழி நோய்கள், முதலியவற்றை குணமாக்க வல்லது. இக்கீரையை வெண்ணெய் சேர்த்து உண்ண கண் சம்பந்தப்பட்ட வியாதிகள் நீங்கும்.

இக்கீரையை 40 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வர கண் பார்வை மங்கல், திரைப் போட்டு மறைக்கும் கண் படலம் எல்லாம் விலகும்.
,பலன்கள் கிடைக்க தொடர்ந்து உபயோகிக்கவேண்டும் .
இரண்டு நாள் சாப்பிட்டு விட்டு பலன் இல்லை என்று பாராதீர்கள் .குறைந்தது ஒரு மண்டலம் எந்த மூலிகைக்கும் தேவை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *