பொன்னியின் செல்வன் முதன்மை கதாபாத்திரங்கள்(Ponniyin Selvan)

கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் (Ponniyin Selvan) நாவல் மணிரத்னத்தின் இயக்கத்தில் முதல் பாகம் திரைப்படமாக வந்து பலரதும் வரவேற்பை பெற்றுள்ளது.இரண்டாம் பாகம்  விரைவில் வரவிருக்கும் நிலையில், அந்த நாவலில் உள்ள முக்கியப் பாத்திரங்கள் எவை, அவர்களின் பின்னணி என்ன என்பதைத் தெரிந்துகொள்லாம்.

பொன்னியின் செல்வன் (Ponniyin Selvan) நாவலில் மொத்தம் 55 பாத்திரங்கள் குறிப்பிடத்தக்க வகையில் வருகின்றன. அதில் 37 கதாபாத்திரங்கள் முக்கியமானவை. அவற்றிலும் சில மிகமுக்கியமான  பாத்திரங்கள் எவை, அவை அந்த நாவலில் என்ன பங்கை வகிக்கின்றன என்பதைப் பார்ப்போம்.

வல்லவரையன் வந்தியத்தேவன்

பொன்னியின் செல்வன் முதன்மை கதாபாத்திரங்கள்,Ponniyin Selvan,annaimadi.com,அன்னைமடி,Ponniyin Selvan's main characters,ponni nathi ,பொன்னி நதி ,

பொன்னியின் செல்வன் (Ponniyin Selvan) நாவலின் கதாநாயகன் வந்தியத்தேவன் தான். அருள்மொழி வர்மனின் பட்டப் பெயரிலேயே நாவல் அமைந்திருந்தாலும், அதில் மிக முக்கியப் பாத்திரமாக வருவதென்னவோ வந்தியத்தேவனின் பாத்திரம் தான்.

இந்தப் பாத்திரத்தின் பார்வையில் தான் நாவலின் பெரும் பகுதி நகர்கிறது. இந்த நாவலில், வந்தியத்தேவன் பட்டத்து இளவரசனான ஆதித்த கரிகாலனின் நண்பன். சோழ இளவரசி குந்தவைப் பிராட்டியின் காதலன். பிறகு, அருள்மொழி வர்மனின் உயிர்த் தோழன்.

வந்தியத்தேவன், வல்லத்து வாணர் குல இளவரசனாய் இருக்கலாம் என்ற நோக்கிலேயே நாவலில் அவனது பாத்திரத்தை உருவாக்கியிருக்கிறார்.

தஞ்சைப் பெரிய கோவில் கல்வெட்டுகளில் “ஸ்ரீ ராசராசதேவர் திருத்தமக்கையார் வல்லவரையர் வந்தியத்தேவர் மகாதேவியார் ஆழ்வார் பராந்தகன் குந்தவையார்” என வந்தியத்தேவனது பெயர் காணப்படுகிறது.

பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் கார்த்தி இந்த பாத்திரத்தில் நடிக்கிறார்.

அருள்மொழி வர்மன்/ பொன்னியின் செல்வன் (Ponniyin Selvan)

பொன்னியின் செல்வன் முதன்மை கதாபாத்திரங்கள்,Ponniyin Selvan,annaimadi.com,அன்னைமடி,Ponniyin Selvan's main characters,ponni nathi ,பொன்னி நதி ,

பொன்னியின் செல்வன் என்பது அருள்மொழிவர்மனையே குறிக்கிறது. பிற்காலத்தில் ராஜராஜசோழன் (ஆட்சிக் காலம்: கி.பி. 985 – கி.பி. 1014) என சரித்திரத்தில் இடம்பெற்ற மன்னனுக்கு பெற்றோர் இட்ட பெயர் அருள்மொழி வர்மன். சுந்தர சோழனுக்கும் அவனது பட்டத்தரசி வானவன் மாதேவிக்கும் பிறந்த மூன்றாவது மகன்.

பொன்னியின் செல்வன் நாவலில், குந்தவையின் தம்பி, வந்தியத்தேவனின் தோழன் என்ற வகையில் இந்தப் பாத்திரம் சிறப்பாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது.

தனக்குக் கிடைத்ததை தனது சித்தப்பனான உத்தமசோழனுக்கு விட்டுக் கொடுத்ததாகவும் இந்தப் பாத்திரம் புகழப்படுகிறது. தஞ்சைப் பெரிய கோவில் கல்வெட்டுகளின் டி பார்த்தால், தன் தமக்கை குந்தவைப் பிராட்டி மீது பெரும் பற்றுக் கொண்டவராக காணப்படுகிறார். அதை, பொன்னியின் செல்வன் நாவல் தெளிவாகப் பிரதிபலிக்கிறது.

பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் ஜெயம் ரவி இந்த பாத்திரத்தில் நடிக்கிறார்.

குந்தவைப் பிராட்டி

பொன்னியின் செல்வன் முதன்மை கதாபாத்திரங்கள்,Ponniyin Selvan,annaimadi.com,அன்னைமடி,Ponniyin Selvan's main characters,ponni nathi ,பொன்னி நதி ,

சுந்தரச் சோழனின் புதல்வி. ராஜராஜ சோழனின் மூத்த சகோதரி. வல்லவரையன் வந்தியத்தேவனின் மனைவி. பொன்னியின் செல்வன் நாவலில், பெரும்பாலான சம்பவங்களின் பின்னணியில் குந்தவையின் பாத்திரமே இருக்கிறது. தெளிவான, முக்கியமான முடிவுகளை குந்தவையே எடுப்பதாகக் காட்டப்படுகிறது.

சுந்தர சோழன் தஞ்சையில் வசித்தாலும் பழையாறை நகரில் செம்பியன் மாதேவியோடு வசிக்கிறாள் குந்தவை. வானதியை அருள்மொழிவர்மனுக்குத் திருமணம் செய்து வைக்க குந்தவையே முடிவெடுப்பதாகவும் நந்தினியின் சதிகளை முறியடிக்க சிரத்தை எடுப்பதாகவும் இந்த நாவலில் கல்கி காட்டியிருக்கிறார்.

தஞ்சாவூர் பெரிய கோவில் கல்வெட்டுகளில் “ஸ்ரீ ராசராசதேவர் திருத்தமக்கையார் வல்லவரையர் வந்தியத்தேவர் மகாதேவியார் ஆழ்வார் பராந்தகன் குந்தவையார்” என குந்தவையின் பெயர் குறிப்பிடப்படுகிறது.

பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் இந்தப் பாத்திரத்தில் த்ரிஷா நடிக்கிறார்.      

நந்தினி

பொன்னியின் செல்வன் முதன்மை கதாபாத்திரங்கள்,Ponniyin Selvan,annaimadi.com,அன்னைமடி,Ponniyin Selvan's main characters,ponni nathi ,பொன்னி நதி ,

பொன்னியின் செல்வன் நாவலிலேயே மிகவும் கவர்ச்சிகரமான அதே சமயம் மிக ஆபத்தான கதாபாத்திரமாக புனையப்பட்டுள்ள பாத்திரம். சிறு வயதில் ஆதித்த கரிகாலனை காதலித்தவள். பின் வீரபாண்டியனின் மனைவியாவதாக காட்டப்படுகிறது.

ஆதித்த கரிகாலன் வீரபாண்டியனை கொன்ற பின்பு, பெரிய பழுவேட்டரையரின் மனைவியாகி பழுவூர் இளைய ராணியாகிறாள். வீர பாண்டியனின் மரணத்திற்கு பழிவாங்குவதற்காக ஆதித்த கரிகாலன், குந்தவை, அருள்மொழி வர்மன் ஆகிய மூவரையும் கொலை செய்ய சதி திட்டம் தீட்டுகிறாள்.

பார்த்தவுடன் ஆசைகொள்ள வைக்கும் அழகுடையவளாக வலம் வருகிறாள்.

இந்தப் பாத்திரத்தில் சில குழப்பங்கள் இருக்கின்றன. துவக்கத்தில் வீர பாண்டியன் மனைவியாக காட்டப்படும் நந்தினி, ஓரிடத்தில் பாண்டிய மன்னனின் மகளாகவும் குறிப்பிடப்படுகிறாள்.

இந்த நாவலில் மட்டுமல்லாமல், நா. பார்த்தசாரதி எழுதிய பாண்டிமாதேவி நாவலிலும் இந்தப் பாத்திரம் வருகிறது.

பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் இந்தப் பாத்திரத்தில் ஐஸ்வர்யா ராய் நடிக்கிறார்.

ஆதித்த கரிகாலன்

பொன்னியின் செல்வன் முதன்மை கதாபாத்திரங்கள்,Ponniyin Selvan,annaimadi.com,அன்னைமடி,Ponniyin Selvan's main characters,ponni nathi ,பொன்னி நதி ,

சுந்தரசோழன் எனப்படும் இரண்டாம் பராந்தகச் சோழனின் மகன். சுந்தர சோழனுக்குப் பிறகு அரசனாக வேண்டிய பட்டத்து இளவரசன். நாவலில் வந்தியத்தேவனின் நண்பன்.

மதுரையை ஆண்ட பாண்டிய மன்னனை இளம் வயதிலேயே போரிட்டுக் கொன்றதாக ஆனை மங்கலத்துச் செப்பேடுகள் கூறுகின்றன. கி.பி. 966ல் ஆதித்த கரிகாலனுக்கு இளவரசுப் பட்டம் சூட்டப்பட்டது.

பொன்னியின் செல்வன் நாவலில், மிகவும் நிலையற்ற ஒரு கதாபாத்திரமாக ஆதித்த கரிகாலனின் பாத்திரம் காட்டப்படுகிறது.

சிறு வயதில் நந்தினியைக் காதலித்ததாகவும் பிறகு அவள் கண் முன்பாகவே, அவளது கணவனான வீர பாண்டியனைக் கொன்றதாகவும் அதை நினைத்து நினைத்து வருந்துவதாகவும் நாவல் கூறுகிறது.

காஞ்சிபுரத்தில் பொன்னாலான மாளிகையை கட்டியவன் இந்த ஆதித்த கரிகாலன்.

பட்டம் கட்டப்பட்ட மூன்றாவது ஆண்டில், 969ல் சிலரால் ஆதித்த கரிகாலன் கொல்லப்படுகிறான்.

காட்டுமன்னார் கோவிலுக்கு அருகில் உள்ள உடையார்குடியில் காணப்படும் கல்வெட்டு, ஆதித்த கரிகாலனைக் கொன்ற நான்கு பேரைப் பட்டியலிடுகிறது.

பொன்னியின் செல்வன் பாத்திரத்தில் ஆதித்த கரிகாலன் பாத்திரத்தில் விக்ரம் நடித்திருக்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *