பாரம்பரிய பெருமை மிக்க கஞ்சி வகைகள் (Traditional proud porridge varieties)

உடல் ஆரோக்கியமாக இருக்கும் போது ஊட்ட உணவாகவும், நோய் பாதித்த நிலையில் ஆரோக்கியத்தை மீட்டெடுக்கும் உணவாகவும் கஞ்சி வகைகள் (Porridge varieties) உதவுகின்றன. 

மருந்தாக, துணை மருந்தாக, சிறுபொழுதிற்கான உணவாக, இடை உணவாக, ஊட்ட உணவாக, பத்திய உணவாக என பல்வேறு வகைகளில் நெடுங்காலமாக பயன்பாட்டில் கஞ்சி வகைகள்(Porridge varieties) இருந்தன.

‘சோறுவாக்கிய கொழுங்கஞ்சி யாறுப் போலப் பரந்தொழுகி’ என்கிற பட்டினப்பாலை வரிகள், சோறு வடித்த கஞ்சியானது ஆறு போல ஓடியதாக கவிதைப் பேசுகிறது. அதாவது நமது உணவுக் கலாச்சாரத்தில் பிண்ணிப் பிணைந்திருந்த கஞ்சி வகைகள் (Porridge varieties) இன்றோ காணாமல் போய்விட்டன.

பாலாடைப் போல கட்டிய உறைக்கஞ்சி, சாதம் வேகும் போது கிடைக்கும் கொதிகஞ்சி, வடிகஞ்சி என அனைத்திற்கும் வெப்பத்தைக் குறைக்கும் தன்மை உண்டு.

வேனிற் காலத்தில் மோர், இளநீர் போன்ற இயற்கை பானங்களோடு கஞ்சி வகைகளையும் அவ்வப்போது குடிப்பது உடலுக்கு நல்லது.

கஞ்சி வகைகள் (Porridge varieties)

’கஞ்சி’ என்றால் காய்ச்சல் நேரத்தில் வழங்கப்படும் பத்திய உணவாகவே பெரும்பாலோரின் மனதில் பதிந்திருக்கிறது. ஆனால் உண்மையில் கஞ்சி என்பது பத்திய உணவாக மட்டுமில்லாமல் உடலுக்கு ஊட்டம் தரக்கூடிய உணவாகவும் நமது மரபில் பயன்பட்டிருக்கிறது.

கொதிகஞ்சி, உறைகஞ்சி, முடிச்சுக்கஞ்சி, பால்கஞ்சி, வடிகஞ்சி, ஊட்டக்கஞ்சி, சுடுகஞ்சி என பல்வேறு வகைகளில் கஞ்சி வகைகளைத் தயாரித்து பயன்பெறலாம். சூப் வகைகளுக்கு முன்னோடியாக ‘கஞ்சி’ வகைகளைக் குறிப்பிடலாம்.

மாதவிடாயினை முறைப்படுத்த,அன்னைமடி, ,annaimadi.com,பாரம்பரிய பெருமை மிக்க கஞ்சி வகைகள்,Traditional proud porridge varieties,பத்திய உணவு,கஞ்சி வகைகள்,Porridge varieties,அன்னப்பால் கஞ்சி,காய்ச்சல் கஞ்சி,காய்ச்சல் குணமாக,நெற்பொரிக் கஞ்சி,செரிமானத்தை சரி செய்யும் உணவு,செரிமானத்தை மீட்டெடுக்கும் கஞ்சிகள்,கஞ்சிசெய்முறைகள் ,பாரம்பரிய அரிசி கஞ்சிகள்,பாரம்பரிய உணவுகள்,கொள்ளுக்கஞ்சி,சிறுதானியக் கஞ்சிகள்,புனற்பாகம்,பஞ்சமுட்டிக் கஞ்சி,உளுத்தங்கஞ்சி,ரம்லான் காஞ்சி,ramzan kanji,

காய்ச்சல் கஞ்சி

காய்ச்சலால் அவதிப்படும் நேரத்தில் செரிமான பகுதிக்கு வேலைப் பளுவைத் தரக்கூடிய சீரணமாகாத உணவுகளைத் தவிர்த்துவிட்டு, மெல்லிய உணவு வகையான கஞ்சி எடுத்துக்கொள்வதே நல்லது.

சுரம் காரணமாக முடங்கிக்கிடக்கும் செரிமானத்தை விரைவில் மீட்டெடுத்து, தேவைப்படும் சத்துக்களை உட்கிரகிக்க (Absorption of nutrients) உதவி புரியும்.

உடல் இழந்த நீர்த்தன்மையையும் ஈடு கட்ட முடியும்.

’குடற்தன்னில் சீதமலாது சுரம் வராது’ என்கிறது சித்த மருத்துவம். என்ன வகையான சுரமாக இருந்தாலும், செரிமானம் பாதிக்கப்படுவதை நாம் உணர்ந்திருப்போம்.

சீதத்தைவிலக்கி, செரிமானத் திறனை மீண்டும் எழுச்சியுறச் செய்ய கஞ்சி உணவு பெருமளவில் துணையாக இருக்கும். சோற்றை வடித்து எடுக்கும் செழுமையான கஞ்சிக்கு ’அன்னப்பால்’ என்றும் பெயருண்டு. 

அன்னப்பால் கஞ்சி

சிறந்த பாரம்பரிய அரிசி வகைகளான காட்டுயானம், இலுப்பை பூ சம்பாமற்றும் கறுப்புகவுனி ஆகியவற்றைக் கொண்டு தயாரிக்கப்படுகிறது.

இந்த அன்னப்பால் கஞ்சி கலவை பல நூற்றாண்டுகளாக தமிழ் சமூகத்தின் பாரம்பரிய உணவாகும். தமிழ் மரபில் கஞ்சியை “பால்” என்றும் அன்னப்பால் என்பது அரிசியால் செய்யப்பட்ட கஞ்சி என்றும் அழைக்கப்படுகிறது.
அரிசி, ஏலக்காய், மிளகு இவைகளின் சரியான கலவை அன்னப்பால் கஞ்சியை உருவாக்குகிறது.

கஞ்சி கலவையை உங்கள் விருப்பப்படி உப்பு அல்லது கரும்பு சர்க்கரை சேர்த்து 5 – 10 நிமிடங்கள் சூடான நீரில் கொதிக்க வைக்கவும். இதை காலை டிபன் அல்லது மாலை சிற்றுண்டியாக எடுத்துக் கொள்ளலாம்.

இது இதய நோயை தடுக்கும், மூளை சுறுசுறுப்புடன் செயல்பட உதவும். இதில் நார்சத்து அதிகம் இருப்பதால் குடல் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் வருவதை முற்றிலும் தடுக்கிறது.

கெட்ட கொழுப்பை உடலில் தங்கவிடாது.நாளடைவில் கரைய செய்யும். தினம் ஒருவேளை எடுத்துக்கொள்வதால் மிகவும் ஆரோக்கியத்துடன் இருப்பதை நீங்களே உணருவீர்கள்.

நெற்பொரிக் கஞ்சி

சுர நோயாளர்களுக்கு நெற்பொரிக் கஞ்சி மிகவும் சிறந்தது. நெல்லைப் பொரித்துவிட்டு, உமியை நீக்கிய பின் கஞ்சியாக செய்துகொள்ளலாம். வயிற்றுப்போக்கு, வயிற்றுவலி ஏற்படும் போது தாராளமாக நெற்பொரிக் கஞ்சியைக் குடிக்கலாம்.

கிராமப்பகுதிகளில் நெற்பொரிக் கஞ்சி பிரபல்யமானது.

காரணம் என்ன தெரியுமா? கிராமங்களில் உள்ள மக்களுக்கு, செரியாமையால் உண்டாகும் வயிற்றுவலிக்கு உடனடியாக மருந்தகங்களுக்கு ஓடிச்செல்வதில்லை.

மாதவிடாயினை முறைப்படுத்த,அன்னைமடி, ,annaimadi.com,பாரம்பரிய பெருமை மிக்க கஞ்சி வகைகள்,Traditional proud porridge varieties,பத்திய உணவு,கஞ்சி வகைகள்,Porridge varieties,அன்னப்பால் கஞ்சி,காய்ச்சல் கஞ்சி,காய்ச்சல் குணமாக,நெற்பொரிக் கஞ்சி,செரிமானத்தை சரி செய்யும் உணவு,செரிமானத்தை மீட்டெடுக்கும் கஞ்சிகள்,கஞ்சிசெய்முறைகள் ,பாரம்பரிய அரிசி கஞ்சிகள்,பாரம்பரிய உணவுகள்,கொள்ளுக்கஞ்சி,சிறுதானியக் கஞ்சிகள்,புனற்பாகம்,பஞ்சமுட்டிக் கஞ்சி,உளுத்தங்கஞ்சி,ramzan kanji,

பஞ்சமுட்டிக் கஞ்சி

தென் தமிழகத்திலும், இலங்கை தமிழர்களிடமும் வழகத்தில் உள்ள பஞ்சமுட்டிக் கஞ்சி, உடலுக்கு ஊட்டத்தை தரக்கூடியது. மெலிந்த தேகம் உடையவர்களுக்கும் நோயுற்று மெலிந்தவர்களுக்கும் அற்புதமான உணவு.

துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு, சிறுபயறு , கடலை, பச்சரிசி ஆகியவற்றை வகைக்கு பத்து கிராம் எடுத்து ஒரு துணியில் வைத்து முடிந்துக்கொண்டு மண்பானையில் போட்டு, ஒரு லிட்டர் நீர் சேர்த்து, நான்கில் ஒரு பாகமாக வரும் வரை காய்ச்சவும்.

பின்னர் துணிமுடிப்பினை எடுத்துவிட்டு, கஞ்சியைப் பருகலாம். பருப்பு வகைகளும், பயறு வகைகளும் சேர்ந்திருப்பதால் புரதக் கூறுகளுக்கு பஞ்சமில்லை.

சிலர் முளைகட்டிய பயறு வகைகளையும் தேவைக்கேற்ப பயன்படுத்துகின்றனர். சிறிது மிளகுத் தூள் தூவி பயன்படுத்த வேண்டும்.

குழந்தைகளுக்கும் முதியவர்களுக்கும் வழங்க எளிதில் சீரணமடைந்து உடலுக்கு தேவையான ஆற்றலைத் தரும். நோயாளியை சந்திக்க செல்லும் போது, பஞ்சமுட்டிக் கலவையை தயார் செய்து எடுத்துச் செல்லுங்கள்.

நோயாளியின் உடல்நிலை விரைவில் சீரடையும்.

மாதவிடாயினை முறைப்படுத்தும் கஞ்சி

உளுத்தங் கஞ்சி, வெந்தயக் கஞ்சி போன்றவை காலங்காலமாக பெண்களின் உடலியிங்கியலை சீராக பயணிக்கச் செய்ய உதவியவை.

பெண்கள் பூப்பெய்தும் போதும் அதன் பிறகும் வழங்கப்படும் உளுந்து, வெந்தயம் சேர்ந்த கஞ்சிகள், மாதவிடாய் நிகழ்வினை ஒழுங்குப்படுத்தியதோடு, உடலுக்கு தேவைப்படும் வலிமையையும் கொடுத்தன.

ஆனால் இன்று முற்றிலும் மருவிப் போன பாரம்பரிய உணவு வழக்கம் மற்றும் முறையற்ற உணவு பழக்கம் காரணமாக மாதவிடாய் சார்ந்த நோய்கள் பெண்களை அதிகளவில் வாட்டுகின்றன.

புரதம் ,நார்ச்சத்து, சுண்ணாம்புசத்து, பொஸ்பரஸ், பொட்டாசியம், சோடியம் போன்ற தாதுக்களும், விற்றமின்களும் உளுந்தில் அதிகளவில் உள்ளன.

மாதவிடாய் சார்ந்த தொந்தரவுகளை நிவர்த்தி செய்யும் கூறுகள் வெந்தயத்தில் உண்டு. மாதவிடாயினை முறைப்படுத்த,அன்னைமடி, ,annaimadi.com,பாரம்பரிய பெருமை மிக்க கஞ்சி வகைகள்,Traditional proud porridge varieties,பத்திய உணவு,கஞ்சி வகைகள்,Porridge varieties,அன்னப்பால் கஞ்சி,காய்ச்சல் கஞ்சி,காய்ச்சல் குணமாக,நெற்பொரிக் கஞ்சி,செரிமானத்தை சரி செய்யும் உணவு,செரிமானத்தை மீட்டெடுக்கும் கஞ்சிகள்,கஞ்சிசெய்முறைகள் ,பாரம்பரிய அரிசி கஞ்சிகள்,பாரம்பரிய உணவுகள்,கொள்ளுக்கஞ்சி,சிறுதானியக் கஞ்சிகள்,புனற்பாகம்,பஞ்சமுட்டிக் கஞ்சி,உளுத்தங்கஞ்சி

சுக்கு முடிச்சுக் கஞ்சி

சுக்கின் மேல் தோலை சீவி சிறு சிறு துண்டுகளாக்கி, ஒரு துணியில் முடிந்து, பச்சரிசியைக் கொண்டு செய்யப்பட்ட கஞ்சியில் போட்டு நன்றாக காய்ச்சி, உண்டாகும் தெளிநீரை உபயோகிக்கலாம்.

இதனால் உணவில் விருப்பம் உண்டாகும்.

வயிற்றில் உண்டாகும் மந்தம், மலக்கட்டு முதலியவை நீங்கும். சுரத்திற்கும் கொடுக்கலாம். பச்சரிசி கஞ்சி செய்யும் போதே சுக்கை துணியில் முடிந்து காய்ச்சியும் பயன்படுத்தலாம். பசியைத் தூண்டும் செய்கையும் வாயுவை அகற்றும் செய்கையும் சுக்கிற்கு உண்டு. 

கொள்ளுக் கஞ்சி

மாதவிடாயினை முறைப்படுத்த,அன்னைமடி, ,annaimadi.com,பாரம்பரிய பெருமை மிக்க கஞ்சி வகைகள்,Traditional proud porridge varieties,பத்திய உணவு,கஞ்சி வகைகள்,Porridge varieties,அன்னப்பால் கஞ்சி,காய்ச்சல் கஞ்சி,காய்ச்சல் குணமாக,நெற்பொரிக் கஞ்சி,செரிமானத்தை சரி செய்யும் உணவு,செரிமானத்தை மீட்டெடுக்கும் கஞ்சிகள்,கஞ்சிசெய்முறைகள் ,பாரம்பரிய அரிசி கஞ்சிகள்,பாரம்பரிய உணவுகள்,கொள்ளுக்கஞ்சி,சிறுதானியக் கஞ்சிகள்,புனற்பாகம்,பஞ்சமுட்டிக் கஞ்சி,உளுத்தங்கஞ்சி

சரியாக பசியெடுக்காமல் இருப்பவர்களுக்கு கொள்ளுக் கஞ்சி நல்ல பரிந்துரை. அரிசியோடு கொள்ளு சேர்த்து செய்த கஞ்சியை தொடர்ந்து குடித்து வர மிகுந்த வலிமை உண்டாகும்.

வலிமையின் அளவினை உணர்த்த, ’எள்ளைக் கையினால் கசக்கிப் பிழியும் அளவிற்கு உடலில் பலம் உண்டாகும்’ என்று உவமை கூறுகிறது சித்த மருத்துவப் பாடல் ஒன்று.

கொள்ளுக் கஞ்சியை ‘காணக் கஞ்சி என்றும் குறிப்பிடலாம்.

கப நோயளார்களுக்கு முக்கியமான மருந்தாக பயன்படுகிறது. பருவ நிலைக்கு ஏற்ப உணவு தயாரிப்புகளை முன்னெடுத்த முன்னோர்கள், கார்காலத்திலும், குளிர்காலத்திலும் அதிகமாக பருந்துரைத்தது கொள்ளுக் கஞ்சியே.

புனற்பாகம்

இருமுறை வடித்த கஞ்சி புனற்பாகம் என்று அழைக்கப்படுகிறது. அதாவது அவித்த சோற்றில் மீண்டும் தண்ணீர் சேர்த்து கொதிக்க வைத்து பயன்படுத்துவது.

வெப்ப மாற்றங்களையும் நீரியல் நுணுக்கங்களையும் பற்றி அறிந்திருந்த முன்னோர்களின் அறிவியலுக்குச் சான்றாக இந்த கஞ்சி வகையை குறிப்பிடலாம்.

தண்ணீரில் நிகழும் மாற்றங்களை முன்வைத்து, வெப்ப நோய்கள் நீங்குவதோடு உடலுக்கு ஊட்டத்தைக் கொடுக்கும் ஊட்டக் கஞ்சியாகவும் புனற்பாகம் பயன்படுகிறது. 

சிறுதானியக் கஞ்சிகள்

மாதவிடாயினை முறைப்படுத்த,அன்னைமடி, ,annaimadi.com,பாரம்பரிய பெருமை மிக்க கஞ்சி வகைகள்,Traditional proud porridge varieties,பத்திய உணவு,கஞ்சி வகைகள்,Porridge varieties,அன்னப்பால் கஞ்சி,காய்ச்சல் கஞ்சி,காய்ச்சல் குணமாக,நெற்பொரிக் கஞ்சி,செரிமானத்தை சரி செய்யும் உணவு,செரிமானத்தை மீட்டெடுக்கும் கஞ்சிகள்,கஞ்சிசெய்முறைகள் ,பாரம்பரிய அரிசி கஞ்சிகள்,பாரம்பரிய உணவுகள்,கொள்ளுக்கஞ்சி,சிறுதானியக் கஞ்சிகள்,புனற்பாகம்,பஞ்சமுட்டிக் கஞ்சி,உளுத்தங்கஞ்சி,மாதவிடாயினை முறைப்படுத்த,அன்னைமடி, ,annaimadi.com,பாரம்பரிய பெருமை மிக்க கஞ்சி வகைகள்,Traditional proud porridge varieties,பத்திய உணவு,கஞ்சி வகைகள்,Porridge varieties,அன்னப்பால் கஞ்சி,காய்ச்சல் கஞ்சி,காய்ச்சல் குணமாக,நெற்பொரிக் கஞ்சி,செரிமானத்தை சரி செய்யும் உணவு,செரிமானத்தை மீட்டெடுக்கும் கஞ்சிகள்,கஞ்சிசெய்முறைகள் ,பாரம்பரிய அரிசி கஞ்சிகள்,பாரம்பரிய உணவுகள்,கொள்ளுக்கஞ்சி,சிறுதானியக் கஞ்சிகள்,புனற்பாகம்,பஞ்சமுட்டிக் கஞ்சி,உளுத்தங்கஞ்சி,ramzan kanji  

பச்சரிசி, புழுங்கல் அரிசி தவிர சாமை, தினை, வரகு போன்ற சிறுதானியங்கள் கொண்டு செய்யப்படும் கஞ்சி வகைகளும் அதிகளவில் வழக்கத்தில் இருந்தன.

அவற்றை மீண்டும் பழக்கப்படுத்துவதன் மூலம், சிறுதானியங்களால் கிடைக்கும் எண்ணற்ற பயன்களை பெற முடியும்.  

பாம்புக்கடிக்கு வைத்தியம் செய்யும் போது, குறிப்பிட்ட மருந்துகளோடு பத்தியமாக அரிசிக் கஞ்சியை மட்டுமே பயன்படுத்துவதாக மலைவாழ் மக்கள் குறிப்பிடுகிறார்கள்.

பல மருந்துகளுக்கு துணை மருந்தாகவும் கஞ்சி வகைகள் பயன்படுகின்றன. 

’கஞ்சி’ என்றதுமே அதை  ஒதுக்கித் தள்ளாமல், ஆரோக்கியத்தை மீட்டெடுக்கும் உணவாக அதை போற்றுவது அறிவுடைமை. 

 ’கஞ்சி காய்ச்சி குடிப்போம்’ ! பாரம்பரிய பெருமையையும் நம்ஆரோக்கியத்தையும் காப்போம்!

Leave a Reply

Your email address will not be published.