பிரதோஷ விரத சிறப்புக்கள் (Pradosh fast)

பிரதோஷ தரிசனம் செய்பவர்கள் எல்லா தேவர்களையும் தரிசித்த புண்ணியத்தை பெறுகிறார்கள். தரித்திரம் ஒழியவும், நோய் தீரவும், கெட்ட நோய்களின் துயர் மடியவும் பிரதோஷ வழிபாடு (Pradosh fast) சிறந்ததாகும்.

சிவனை வழிபட ஏற்ற காலம் சாயரஷை. அதிலும் சிறந்தது சோமவாரம். அதனினும் சிறந்தது மாத சிவாரத்திரி. அதனினும் சிறந்தது பிரதோஷம்.

ஒவ்வொரு நாளும் மாலை நாலரை, முதல் ஆறுவரை பிரதோஷ நேரமாகும். இது தினப் பிரதோஷம் எனப்படும்

பிரதோஷ நாள் (Pradosh fast)  என்பது சிவனை பழிப்பட சிறந்த நாளாக கருதப்படுகிறது. இந்த நாளில் விரதம் இருந்து சிவனை வழிபட்டால் ஜாதகத்தில் உள்ள தோஷங்கள் விலகும் என்பது நம்பிக்கை.

பல சிறப்புகள் மிக்க பிரதோஷ விரதம் இருப்பது எப்படி (How to have Pradosh fast)

பிரதோஷ விரதம் மேற்கொள்ள நினைப்பவர்கள், வளர்பிறை தேய்பிறை என இரு பிரதோஷ தினங்களிலும் விரதம் மேற்கொள்ளலாம்.
அப்படி விரதம் இருக்க நினைப்போர் காலையில் எழுந்து குளித்துவிட்டு அந்த நாள் முழுக்க சிவ நாமத்தையோ அல்லது “ஓம் நமசிவாய” என்னும் மந்திரத்தையோ ஜபிக்கலாம்.
சிவபுராணம், சிவ நாமாவளிகளையும் படிக்கலாம். முடிந்தவரை மவுன விரதம் இருந்து,
மாலை வேலையில் சிவன் கோயிலிற்கு சென்று நந்தி தேவருக்கு அருகம்புல் மாலை சார்த்தி நெய் தீபம் ஏற்றி வழிபட வேண்டும். சிவபெருமானுக்கு வில்வத்தால் அர்ச்சனை செய்வது சிறந்தது.
பிரதோஷ விரதம்,Pradosam,annaimadi.com,Pradosha Vrat ,பிரதோஷ விரத வழிபாட்டு பலன்கள்,How to have Pradosha Vrat which has many benefits,Benefits of Pradosha Vrata Worship,Prathosam,pradosam,அன்னைமடி,பிரதோஷ விரதம் கடைப்பிடிக்கும் முறை, Method of observing Pradosh fast,

 நந்தி தேவருக்கு ருத்ரன் என்றொரு பெயரும் உண்டு. ருத்ரன் – என்றால் துக்கத்தை விரட்டுபவன் என்று பொருள்.

பிரதோஷகாலத்தில் நந்தி தேவருக்கு அருகம்புல் மாலை போட்டு நெய் விளக்கு ஏற்றி பச்சரிசி வெல்லம் கலந்து வைத்து பூஜை செய்கிறார்கள்.

நந்தி தேவரிடமும் சிவபெருமானிடமும் நமது குறைகள் அனைத்தையும் தீர்வைக்கும்படி மனதார வேண்டிக்கொண்டு கோவிலை வலம் வந்து விரதத்தினை முடிக்கலாம்.
பிரதோஷ விரதத்தினை (Pradosh fast) முடிக்கும் சமயத்தில் நம்மால் முடிந்த வரை பசியால் வாடும் ஏழை எளியோருக்கு அன்னதானம் வழங்குவது நமக்கு சிறப்பை சேர்க்கும். அன்னதானம் வழங்க இயலாதோர் தங்களால் முடித்த உதவியை ஏழைகளுக்கு செய்யலாம்.

 சிவ நாமாவளிகளை படித்து, மாலையில் கோவில் சென்று, சிவதரிசனம் செய்யவேண்டும். அதோடு நந்திக்கு பச்சரிசி வெல்லம் படைத்து, நெய்தீபம் ஏற்றி வணங்கினால் நல்ல பலன் கிடைக்கும்.

பிரதோஷ விரதம் முடிந்ததும், வேதம் ஓதும் அந்தணர்களுக்கு தானம் வழங்கி விரதத்தை பூர்த்தி செய்தல் நலம்.

பிரதோஷநாளில் ஏன் வழக்கத்திற்கு மாறாக பிரதட்சணம்

மற்ற நாட்களால் ஆலயத்தில் மூன்று முறை வலம் வரும் வழக்கத்திற்கு மாறாக சோம சூக்கப் பிரதட்சணம் செய்ய வேண்டும்.

ஆலகால விஷம் தேவர்களை முன்னும் பின்னும், வலமும் இடமுமாகத் துரத்தியது. தேவர்கள் அஞ்சி நடுங்கி ஒடுங்கி கயிலை மலைக்கு ஓடினார்கள்.

இறைவனை வலமாக வந்து உள்ளே சென்று பரமனைச் சரணடையலாம் என்று எண்ணிய அவர்களை ஆலகால விஷம் அப்பிரதட்சணமாகச் சென்று எதிர்த்தது.

இதைக்கண்டு அஞ்சிய தேவர்கள் வந்த வழியே திரும்பினர். ஆலகால விஷம் அந்த பக்கதிலும் எதிர்த்துச் சென்று பயமுறுத்தியது. இவ்வாறு தேவர்கள் வலமும் இடமுமாய் வந்த அந்த நிகழ்சி தான் சோமசூக்தப் பிரதட்சணம் எனப் பெயர் பெற்றது.

பிரதட்சணம் செய்யும் முறை

முதலில் சிவலிங்கத்தையும் தேவரையும் வணங்கிகொண்டு, அப்பிரதட்சணமாகச் சண்டேசுவரர் சந்நிதி வரை சென்று அவரை வணங்க வேண்டும்.

அப்படியே திரும்பி வந்து முன்போல சிவலிங்கத்தையும் ரிஷப தேவரையும் வணங்கிக் கொண்டு வழக்கம் போல் பிரதட்சணமாக ஆலயத்தை வலம் வரும்போது சுவாமி அபிஷேகத் தீர்த்தம் விழும் நிர்மால்யத் தொட்டி வரை செல்லவும்.

அதைக் கடக்காமல் அப்படியே வந்த வழியே திரும்பி அப்பிரதட்சணமாக சந்நிதிக்கு வந்து சிவலிங்கத்தையும் ரிஷபதேவரையும் வணங்க வேண்டும்.

இவ்வாறு மூன்று முறை செய்ய வேண்டும். இவ்வாறு செய்தால் அனேக அசுவமேத யாகம் செய்த பலன் கிடைக்கும் என நூல்கள் கூறுகின்றன.

இவ்வாறு ஆலயத்தில் பிரதோஷ வழிபாட்டை முடித்தபின் வீட்டிற்குச் சென்று உணவருந்தல் வேண்டும். சனிக்கிழமை வரும் பிரதோஷம் மிகவும் விசேஷமானது.

பிரதோஷ விரதம்,Pradosam,annaimadi.com,Pradosha Vrat ,பிரதோஷ விரத வழிபாட்டு பலன்கள்,How to have Pradosha Vrat which has many benefits,Benefits of Pradosha Vrata Worship,Prathosam,pradosam,அன்னைமடி,பிரதோஷ விரதம் கடைப்பிடிக்கும் முறை, Method of observing Pradosh fast,

சனி பிரதோஷம்( Sani Pradosh fast)

சனிக்கிழமை அன்று வருகிற பிரதோஷத்தை மகா பிரதோஷம் என்று கூறுவார்கள்.இந்தநாளில், சிவனாருக்கும் நந்திதேவருக்கும் விசேஷமான பூஜைகள் நடைபெறும். அபிஷேக ஆராதனைகள் நடைபெறும்.

அப்போது 16 வகையான அபிஷேகப் பொருட்களைக் கொண்டு அபிஷேக ஆராதனைகள் நடைபெறும். பால், தயிர், சந்தனம், தேன், திரவியப்பொடி முதலான பொருட்களைக் கொண்டு அபிஷேகம் செய்வார்கள்.

பிரதோஷ அபிஷேகத்துக்கு, பொருட்கள் வழங்கினால், 108 பிரதோஷம் தரிசனம் செய்த புண்ணியம் கிடைக்கும் என்பது ஐதீகம்.

தான, தர்மங்களை செய்ய சனி பிரதோஷம் மிகவும் சிறந்த நாளாக கருதப்படுகிறது. இன்றைய நாளில் நீங்கள் செய்யும் சிறு தானம் கூட பெருமளவு பலன்களைக் கொடுக்கக் கூடியது.

பாவங்களையெல்லாம் போக்கி அருளும் சனி பிரதோஷ நாளில், சிவாலயம் சென்று சிவ தரிசனம் செய்து வந்தால் சிறப்பு.

இரட்டிப்பு பலன்களைக் கொடுக்கும் சனி பிரதோஷத்தை தவறவிடாமல் சிவ வழிபாடு மேற்கொண்டு பயனடையுங்கள்.

அத்துடன் நந்திதேவருக்கு நடைபெறும் அபிஷேகத்தை கண்ணார தரிசனம் செய்தால், நம் பாவமெல்லாம் பறந்தோடும் !

Leave a Reply

Your email address will not be published.