யாழ்ப்பாண சுவையில் இறால் வெந்தய குழம்பு (Prawn curry)
இறால் குழம்பு (Prawn curry) பலவிதமாக,பல விதமான சுவையில் செய்யலாம். யாழ்ப்பாணத்தில் சற்று வித்தியாசமாக வெந்தயம் சேர்த்து சமைப்பார்கள்.
செய்து சாப்பிட்டு பாருங்கள். திரும்ப திரும்ப செய்வீர்கள்.அவ்வளவு அருமையாக இருக்கும்.
இறால் வெந்தய குழம்பு (Prawn curry) சாதத்துடன் சேர்த்து சாப்பிடலாம். பிட்டு , இடியப்பத்துடன் தூக்காலாக இருக்கும். செய்து சாப்பிட்டு பாருங்கள். திரும்ப திரும்ப செய்வீர்கள்.
வெந்தயம் மிகவும் குளிர்ச்சி தரக்கூடியது. ஆனால், அதை நாம் சாப்பாட்டுடன் பயன்படுத்தும் அளவு ரொம்பவே குறைவு! வெந்தயத்தை இப்படி இறாலுடன் சேர்த்து வெந்தயக்குழம்பு வைத்து சாப்பிடலாம்.
எல்லாருக்குமே இதன் சுவை பிடிக்கும். இதன் மூலமாக நல்ல பலன்களை அடையலாம்! சீதபேதி, வயிறு இரைச்சல், வயிற்றுப் பொருமல் மாதிரியான பிரச்சனைகள் இருந்தாலும் சரியாகும்.
அஜீரணக் கோளாறு, வயிற்றுப்புண், வயிறு எரிச்சல் போன்றவையும் நீங்கிவிடும்.
தேவையான பொருட்கள்(Prawn curry)

இறால் வெந்தய குழம்பு செய்யும் முறை (Prawn curry)
- இறாலை தோல் நீக்கி கழுவி வைக்கவும்.
- வெங்காயம்,உள்ளி,பச்சை மிளகாயை நீளமாக வெட்டி வைக்கவும். புளியை நீர்விட்டு கரைத்து கொள்ளவும்.
- ஒரு கடாயில் 1டேபிள்ஸ்பூன் அளவு எண்ணெய் ஊற்றி கொதித்ததும் சுத்தம் செய்து வைத்த இறாலைச்சேர்த்து வதக்கவும்.
- இறால் இருபுறமும் பொன்னிறமாக வதங்கியதும் அதனை ஒரு பாத்திரத்தில் எடுத்து வைக்கவும்.
- அதே கடையில் மிகுதி எண்ணையை விட்டு அதில் வெட்டி வைத்துள்ள உள்ளி,பச்சை மிளகாய்,கருவேப்பிலை போட்டு வதக்கவும்.
- உள்ளி பொன்னிறமாக வதங்கியதும் அதில் வெந்தயத்தை போட்டு வதக்கி சிறிது நேரத்தில் வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.
- வெங்காயம் பொன்னிறமாக வதங்கியதும் புளி கரைசலை சேர்த்து மூடிக் கொதிக்கவிடவும்.
- ஒரு கொதி வந்ததும், அதனுடன் மிளகாய் தூள், உப்பு ,தேங்காய்ப்பால் சேர்க்கவும்.
- நன்றாக கொதித்து வரும் போது வதக்கிய இறாலை குழம்பில் சேர்க்கவும்.
- உப்பு, புளி, உறைப்பை சரி பார்த்து திரும்பவும் மூடி கொதிக்க விட்டு,நன்றாக கொதித்ததும் இறக்கி விடவும்.
சுவையான மணமணக்கும் வெந்தய இறால் குழம்பு (Prawn curry) தயார்.
இறாலில் தொக்கு, வறுவல், பால்கறி, கிரேவி என பலவிதமாக கறிகள் செய்வார்கள். இறால் வடை ,இறால் பிரியாணி போன்றனவும் சமைக்கலாம்.
வெந்தய இறால் குழம்பு எப்படி செய்வதென வீடியோவில் பார்க்கலாம்.