சுவைமிகு இறால் ப்ரைட் ரைஸ் (Prawn fried rice)
இறால் பொரியல், இறால் குழம்பு இறால் வடை, இறால் பிரியாணி,வரிசையில் இறால் ப்ரைட் ரைஸ் (Prawn fried rice) செய்வோம்.இறாலைக் கொண்டு செய்யும் அனைத்து உணவு செயமுரைகளுமே அருமையாக இருக்கும்.இறால் ப்ரைட் ரைசும் அசத்தலாக இருக்கும். பிள்ளைகளுக்கு பள்ளிக்கு கொடுத்து விட ,வேலைக்கு எடுத்து செல்ல என காலையில் இலகுவாக செய்யக் கூடியதே.
இறால் ப்ரைட் ரைஸ் முறை 1 (Prawn fried rice recipe 1)
தேவையான பொருட்கள்
பஸ்மதி அரிசி – 1/2 கிலோ
இறால் – 1/4கிலோ
வெங்காயம் – 1/4கிலோ
குடை மிளகாய் – 1
பீன்ஸ் – 15
இஞ்சி பூண்டு விழுது – 1 தே. கரண்டி
மிளகு தூள் – 2 ஸ்பூன்
சோயா சாஸ் – 2 ஸ்பூன்
முட்டை – 1
உப்பு
எண்ணெய்
செய்முறை ( Cooking process of fried rice)
பாத்திரத்தில் பாசுமதி அரிசியை நன்கு களைந்து தண்ணீர் சேர்த்து நன்கு வேக விடவும் வெந்த பின் வடித்து நன்றாக ஆற விடவும்.உதிரியாக இருக்க வேண்டும்.
இறாலை கழுவி சுத்தமாக்கி அதில் தூள்,மஞ்சத்தூள்,கரம மசாலா ,உப்பு சேர்த்து நன்றாக பிரட்டி வைக்கவும்.
வெங்காயம் ,குடை மிளகாயை மெல்லியதாக நீளமாக வெட்டி வைக்கவும்.இஞ்சி பூண்டை விழுதாக அரைத்து வைக்கவும்.
பாத்திரத்தை சூடாக்கி அதில் ஒரு கரண்டி எண்ணெய் விட்டு அதில் இறாலைப் போட்டு பொரிக்கவும்.
இறால் நன்றாக வதங்கி வந்ததும் அதில் இஞ்சி பூண்டு விழுதை போட்டி கிளறவும். சிறிது நேரத்தில் பின்னர் அதனுடன் வெட்டிய வெங்காயம் ,குடை மிளகாயை போட்டு கிளறவும்.
வெங்காயம் வெந்ததும் அதில் முட்டையை உடைத்து ஊற்றி கிளறவும்.
ஓரிரு நிமிடத்தி ல் அதில் சாதம், சோயா சோஸ்,சில்லி சோஸ் போட்டு கிளறவும்.கடைசியாக பீன்சை போட்டு நன்றாக கிளறி வகை விடவும்.
சுவையான பிரவுன் ப்ரைட் ரைஸ் (Prawn fried rice) இலகுவாக சுவையாக தயார்.